Posts

Showing posts from March, 2020

கௌசிகா- கோமகள் குமுதா

Image
வாசிப்பு 12 கௌசிகா- கோமகள் குமுதா பொதுவாக தமிழ் சரித்திர நாவல் என்றால் சேர, சோழ, பாண்டிய அரசுகளையும் அவர்களின் நாடுகளையும், வீர தீர பிரதாபங்களையும் சுற்றியே  கதை எழுதப்படும். ஆனால், எழுத்துலக வரலாற்றில்  முதன்முறையாக கொங்கு நாட்டையும், அதன் அரசன் கோவனையும் மையமாக வைத்து ஒரு சரித்திரத்தை படைத்து உள்ளார் ஆசிரியர் "கோமகள் குமுதா"(எங்கள் கோவையின் மகள்). அவர்களின் இந்த முதல் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ரம்யா ரவிக்குமார் க்கு என் நன்றி. ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அது நமக்கு புதிய அனுபவங்களையும் புதிய தகவல்களையும் தர வேண்டும். அப்படிபட்ட ஒரு புனைவு நாவல் தான் இந்த கௌசிகா..!. நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடிய ஊர்களைப் பற்றி நான் அறியாத பல தகவல்களையும் அதன் பழைய பெயர்களையும், பெயர் காரணத்தையும் இந்த புத்தகம் எனக்கு கற்பிக்கும் போது  என் வீட்டில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் பொன்னூத்து மலையின் உச்சியில் அமர்ந்து இருப்பதுபோல ஒரு உணர்வு என்னுள் படர்ந்தது. கௌசிகா என்ற நதி கோவையில் ஓடி தாகம் தீர்த்தது எ...

பணக்கார தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி

Image
வாசிப்பு 11 பணக்கார தந்தை ஏழைத் தந்தை ராபர்ட் கியோஸாகி (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) நம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்களில் பொதுவாக ஒரு வசனம் சொல்லப்படும் " RICH GET RICH , POOR GET POOR". இதற்கான பதிலை கேட்டால், உழைப்பு என்று சொல்லுவார்கள். உழைப்பதனால் அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள்.. அப்படி என்றால்  ஏழைகள் உழைப்பது இல்லையா!  எனக்குத் தெரிந்து, இங்கே அதிகம் உழைப்பவர்கள் ஏழைகள்தான். அப்படி இருக்கையில் எப்படி பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.. ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிறார்கள்.! இருவருமே உழைக்கிறார்கள். ஆனால், ஏன் இந்த வேறுபாடு. இருவரும் எதில் விதியாசப்படுகிறார்கள். இது ஒரு BILLION DOLLAR QUESTION. இதற்கான விடையைத் தன் இரு தந்தைகள் மூலம் பயின்று, செயல்படுத்தி, வெற்றி கண்டு, அந்த சூத்திரத்தை "பணக்கார தந்தை ஏழைத் தந்தை" என்ற இந்த புத்தகத்தின் மூலம் நமக்கும் பயிற்றுவிக்கிறார் ஆசிரியர் ராபர்ட் கியோஸாகி. பணக்காரர்களும், ஏழைகளும் உழைப்பில் வேறுபடுவது இல்லை. ஆனால், எதற்காக உழைக்கிறோம் என்று சிந்திப்பதில் வேறுபடுகிறார்கள். "பணத்துக...

ஹிட்லர் (ஆதி முதல் அந்தரங்கம் வரை சொல்லப்படாத சரித்திரம்) - முகில்

Image
வாசிப்பு 10 ஹிட்லர் (ஆதி முதல் அந்தரங்கம் வரை சொல்லப்படாத சரித்திரம்) - முகில் ஹிட்லரைப் பற்றி இப்படி ஒரு சரித்திர நூல் இதற்கு முன் வந்துள்ளதா?  கண்டிப்பாக இல்லை. அதுவும் தமிழில், சத்தியமாக வாய்ப்பே இல்லை ராஜா. ஹிட்லரின் வரலாறை அவரிடமிருந்து தொடங்காமல்,  ஜெர்மனியின் ஆதி காலத்தில்.. அதாவது, கிமுவில் இருந்து பிள்ளையார் சுழி போடுகிறது இந்த புத்தகம்.  ஹிட்லர் என்ற ஒருவரைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவரின் குடும்பம், நண்பர்கள், காதலிகள், ஓவிய திறமை, வாசித்த புத்தகங்கள், பார்த்து ரசித்த நாடகங்கள், ஏன் அவரைச் சுற்றி உள்ள அனைவரைப் பற்றியும் புகைப்படங்களுடனும், அங்கங்கே.. நகைசுவையுடனும் விரிவாக விளக்குகிறார் முகில். தனி மனித வரலாறு போல அல்லாமல் ஒரு நாட்டின் வரலாறு போல, ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிகச் சிறப்பாக  செதுக்கி உள்ளார் ஆசிரியர். ஒட்டுமொத்த உலகமே ஒன்று சேர்ந்து ஜெர்மனியை குற்றவாளி என்று கூண்டிலேற்றி, மானபங்கப்படுத்தி, அது மீண்டும் எழவே முடியாதபடி அழித்தொழிக்க முயன்ற நிலையில்தான் அங்கே ஒரு சர்வாதிகாரிக்கான தேவையும் உருவானது. அப்படி ஒரு சர்வதிகாரியான ஹிட்லரி...

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

Image
வாசிப்பு 9 ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி புதிதாக வாங்கிய மூன்று புத்தகங்கள் படிக்காமல் கிடக்கிறது. இருப்பினும் நான் கேட்டேன் என்பதற்காக, சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து நண்பர் ஒருவர் வாங்கி வந்து கொடுத்த இரண்டு புத்தகங்களில் ஒன்று இந்த "ஒரு புளியமரத்தின் கதை". அந்த நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த புத்தங்களை முதலில் படிக்க ஆரம்பித்தேன். அந்த நட்புக்கு என் நன்றி. எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் முதல் நாவல், இந்தியாவிலேயே ஹீப்ரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல், நான் முதல் முதலாக படித்த சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு புளியமரத்தின் கதை (என்ன ஒரு பொருத்தம்😀). ஊருக்குள் இருக்கும் ஒரு புளியமரத்தின் கதையையும், அதை மையமாக வைத்து நிகழும் மனிதர்களின் வாழ்வியல், அரசியல், சூழ்ச்சிகளையும்... தள்ளி நின்று பார்த்து சொல்லும் ஒரு கதைசொல்லியாக காட்சிப்படுத்தி, வாசகர்களான நம்மை,புளியங்குளம் கிராமத்தின் வாசியாக மாற்றிவிடுகிறார் ஆசிரியர் சுந்தர ராமசாமி. நாவலில் பலதரப்பட்ட மனிதர்கள் உலவினாலும், உடலில் பச்சை குத்தியது போல கடைசிவரை நமக்குள் நிலைத்து இருப்ப...

நீ இன்றி அமையாது உலகு (பாகம் 2) - முகில்

Image
வாசிப்பு 8 நீ இன்றி அமையாது உலகு  (பாகம் 2) - முகில் ஒரு திறமைசாலியே தான் ஒரு திறமைசாலி என்று உணர்ந்தாலும்,  அவனை நம்பி செயல்படவிடாமல், உன் திறமை ஒரு குப்பைக்குச் சமானமென்று மட்டம் தட்டி, அவர்களை சாதனையாளர்களாக மாறவிடாமல் , தனக்கு வேண்டிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் கங்கானிகள் சூல் உலகு இது. அந்த தந்திர கங்கானிகளை தன் ஆசிரியராக ஏற்று, தன் சொந்த திறமைகளை பலியாக்கி கொண்டவர்கள் இங்கே ஏராளம். ஒரு நல்ல வாய்ப்பு, அந்த திறமைசாலிகளுக்கு வரும் தருணத்தில் "அவசரப்படாதே, இன்னும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கொள்" என்று மூளைச் சலவை செய்யப்படுகிறது. அதையும் மீறி சில சாதனையாளர்களை முன் மாதிரியாக கொண்டு அவர்கள் வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தால், "தோகை மயிலை கண்டு வான்கோழி சிறகை விரிச்ச மாதிரி" "புலியைப் பார்த்து புனை சூடு போட்டு கொண்ட கதை மாதிரி" போன்ற இலக்கிய மொழிகளை ஆயுதமாக்கி அடக்கி ஒடுக்குகிறார்கள். இது போன்ற எண்ணற்ற தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, தங்களுக்கென புதிய பாதைகளை வகுத்தவர்களின் உண்மை கதைகள்..  நாம் போடப் போகும் புத்தம் ப...

மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின்

Image
வாசிப்பு 7 மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின் சிறுவயதில் நமக்கு ஒரு நீதிக் கதை சொல்லப்படும். அதில், ஒரு நரி கடினமான பசியில் உயரத்தில் இருக்கும் திராட்சைக் கொத்தைப் பறிக்க நினைக்கும். ஆனால், பல முறை முயற்சித்தும் பறிக்க முடியாமல்.. கடைசியில், "ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்று விடும். அப்படிச் சென்ற நரிக்கு, திராட்சை என்ற நினைவே மறந்து போனபிறகு.. எதிர்பாராமல், ஒரு திராட்சைக் கொத்தே கிடைத்தால் எப்படி இருக்கும். அதுபோலத்தான், எனக்கு இந்த புத்தகத் தலைப்பு கிடைத்தது. ஒரு காலத்தில் கடவுள்களின் உண்மை வரலாற்றை (புராணங்களை தவிர்த்து), அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அது சம்மந்தமான புத்தகங்களை, தேடித்தேடி வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என் தேடலுக்கு அதிகமாக விடை தந்தது தொ.பரமசிவம் அவர்களின் புத்தகங்கள் தான். பல கடவுள்களின் உண்மை வரலாற்றை அறிந்து கொண்ட எனக்கு, மதுரை மீனாட்சியின் உண்மைக்கதை மட்டும் நரிக்கு எட்டாத திராட்சைப் பழமாகவே இருந்தது. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, அது கிடைக்காது என்று முடிவுகட்டி, என் எண்ணங்களை வேறு...

நீ இன்றி அமையாது உலகு - முகில்

Image
வாசிப்பு 6 நீ இன்றி அமையாது உலகு - முகில் கோவை ப்ரூக் பில்டு மால் ஓடிசியில் நடந்த வாசகர் சந்திப்பில் எழுத்தாளர் முகில் அவர்களின் கையெழுத்துடன் வாங்கிய புத்தகம். 2020-ல் என்னுடைய முதல் வாசிப்பு அனுபவம். வாசகர் சந்திப்பு முடிந்த பிறகு, புத்தகம் வாங்கலாம் என்று எண்ணியபோது, நான் வாங்க நினைத்திருந்த முகில் அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இந்த புத்தகம் மட்டுமே என் கண் முன்னே "வாடா மவனே, வாடா" என்று தன் கைகளை நீட்டி வரவேற்றது. எனக்கும் வேறுவழி இல்லாமல், இந்த புத்தகத்தையே வாங்கி முகில் அவர்களிடம் கையெழுத்துப் பெற்று வீடு திரும்பினேன். காரணம் இல்லாமல், காரியம் இல்லை.. என்பது போல, சரியான தருணத்தில்தான் இந்த புத்தகம் என்னிடம் வந்து சேர்ந்துள்ளது என்பதை, இந்த புத்தகத்தை படித்த போது உணர்ந்தேன். இயற்கை எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு இந்த புத்தகம். சுயமுன்னேற்ற புத்தகம் என்றாலே.. உற்சாகமான வார்த்தைகளும், அட்டவணைகளும் , போலியான தன்னம்பிக்கை மொழிகளும் நிறைந்து பிரமாண்டமான ஒரு பொய் பிம்பத்தை நம் கண்முன் காட்சிகளாய் விரிக்கும். அது போன்ற பொய் பிம்பங்கள் ஏது...

வைரமுத்து சிறுகதைகள்

Image
வாசிப்பு 5 வைரமுத்து சிறுகதைகள் (2019 அம் ஆண்டு நான் வாசித்த கடைசி புத்தகம்) தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலில் உள்ள யானை-காளை சிற்பத்தை பார்த்து உள்ளீர்களா.. பார்த்தவர்கள் அதில் "யானை தலைக்குப் பின்னே காளை தலை உள்ளதா? அல்லது காளை தலைக்குப் பின்னே யானை தலை உள்ளதா?" என்று குழம்புவதைப் போல "சிறுகதைக்குள் கவிதை உள்ளதா.. அல்லது, கவிதை கொண்டு சிறுகதை படைக்கப்பட்டதா.." என்ற குழப்பம், புத்தகத்தைப் படித்து முடிக்கும் வரை "தோண்டத் தோண்ட ஊறும் நீர் போல" என்னுள் ஏற்பட்டு கொண்டே இருந்தது....! கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவிஞானி மட்டும் அல்ல குழப்பவாதியும் கூட ! கவிப்பேரரசு அவர்கள் எழுத்துலகில் கவிதை, நாவல், கட்டுரை முதற்கொண்டு அனைத்து வகையான எழுத்தையும் தன் பேனாவால் ஆளுமை செய்தார். ஆனால், சிறுகதை என்ற பகுதியை மட்டும் தொடாமல் விட்டார், சிறுகதை அரசன் ஜெயகாந்தன் மேல் உள்ள பிரியத்தால். ஜெயகாந்தன் தன் எழுத்தையும், மூச்சையும் நிறுத்திய அதே ஆண்டில்தான் (2015) சிறுகதைகள் பக்கம் தன் பேனா முனையைத் திருப்பினார், குமுதம் வார இதழ் மூலமாக. அதன் 40 சிறுகதைகள் கொண்ட தொக...

தமிழாற்றுப்படை - கவிப்பேரரசு வைரமுத்து

Image
வாசிப்பு 4 தமிழாற்றுப்படை - கவிப்பேரரசு வைரமுத்து மூவாயிரம் ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆளுமைகள் என்னும் கோடி பூக்கள் மலர்ந்த மரத்தில்  24 பூக்களை மட்டும் பறித்து தன் எழுத்து நடையையும், தமிழ் புலமையையும் நூலாய் திரித்து தகவல்களில் கோர்த்து கவிஞர் வைரமுத்து அவர்கள் நமக்கு அணிவிக்கும் மாலை இந்த தமிழாற்றுபடை. இந்த நூலைப்பற்றி விமர்சனம் எழுத நினைக்கும் போது இதுக்கு நான் தகுதி உடையவனா?  என்ற தயக்கத்தில் வார்த்தைகளே தோன்றவில்லை.பல மணி  நேரங்கள் முயற்சி செய்து முடிந்தவரை மூளையில் குச்சியை வைச்சு குத்தி அடைப்புகளை எடுத்து வார்த்தைகளை உருவாக்கி எழுத்தாய் வடிக்கிறேன். இந்த விமர்சனம் குறைகளாய் நிரம்பி இருக்கலாம்,  ஆனால் கண்டிப்பாக நிறையாகவும்,  மிகையாகவும் இருக்க வாய்ப்பில்லை. இந்த நூலுக்கு உலக மொழிகளிலேயே எந்த ஒரு சிறப்புமிக்க சொல்லும்,  ஈடுஇனையும்  இல்லை. அகிலம் எங்கும் பரவி இருக்க! அந்நிய உதடுகள் பயின்று உச்சரிக்க! தமிழகத்தில் மட்டும் மெல்ல  சாகிறது தமிழ்!. அதை காப்பாற்றும் பெரும் பொறுப்பை,  பிறந்த சில நிமிடமே ஆனா குழந்தையே போல நம் கைகளில...

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி

Image
வாசிப்பு 3 சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி இது மனித குலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு. அப்படித்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர் இதற்கு பெயர் வைத்துள்ளார். ஆனால், இது சுருக்கமான வரலாறு போலத் தெரியவில்லை. அப்படியே இது சுருக்கம் என்றாலும், இதுவே இவ்வளவு ஆச்சரியங்களை நமக்கு அளிக்கிறேதே, இதன் விரிவாக்கம் என்னன்ன விளைவுகளை நமக்குள் ஏற்படுத்தும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்க இயலவில்லை. ஆரம்பத்தில் இந்த புத்தகத்தை pdf ல் தான் படிக்க ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு பக்கங்கள் படித்தப் பிறகு, இது சாதாரணமான புத்தகம் கிடையாது, இதை pdfல் படிப்பது கூடாதென்று முடிவு செய்தேன். அதே சமயத்தில் நடிகர் திரு.கமலஹாசன் அவர்கள் ஒரு கட்டுரையில் இந்த புத்தகத்தைப் பற்றி பெருமையாக பதிவு செய்திருந்தார். உலக விடயம் அனைத்தும் தெரிந்து வைத்திருக்கும் உலகநாயகன், இந்த புத்தகத்தை வியக்கிறார் என்றால் அப்படி இதில் என்ன இருக்கிறது! இதை வாங்கி படித்தே ஆகவேண்டும் என முடிவு செய்து 20/09/2019 அன்று வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் பெருகி வருவதைப் போல, இந்த...

வேடிக்கை பார்ப்பவன்-நா.முத்துக்குமார்

Image
வாசிப்பு 2 வேடிக்கை பார்ப்பவன்-நா.முத்துக்குமார் ஒரு கவிஞன் தன் உடலை விட்டு வெளியேறி இன்னொருவானக மாறி தன்னோடிய வாழ்க்கையை வேடிக்கை பார்த்த அனுபவமே இந்த நூல்.பல ஒற்றை அடி பாதைகளை ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்வாங்கிக்கொண்டது போல தன் சுயசாரிதையை இந்த சின்ன சிறு புத்தகத்துக்குள் அடைகியுள்ளார் .ஒரு தாய் தன் குழந்தைக்கு வேடிக்கைக் காட்டியப்படியே உணவை ஊட்டுவதை போல தன் வாழ்க்கையை வேடிக்கைக் காட்டி நமக்குள் அனுபவகளை ஊட்டுகிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஓவ்வொரு புதிய அனுபவங்களில் தொகுப்பு. சிலது ஆச்சரியமாக, சிலது அதிசயமாக. இன்னும் சிலது அதிர்ச்சியான  அச்சமாக இப்படி நமக்குள் பல உணர்வுகளை விதைத்து கொண்டு செல்லும் விவசாயி இந்த கவிஞர்  நா.முத்துக்குமார் அவர்கள். சில கட்டுரைகள் கற்பனையாக இருந்தாலும் அதிலும் உண்மையான உணர்வுகளின் கசிவுகள் வலிந்து கொண்டு தான் இருந்தது. தன் தந்தையே பற்றி இவர் சொல்லும் போது எல்லாம் ஒவ்வொரு தந்தையும் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற விருப்பமும் என் தந்தை இப்படி இல்லையே என்ற வருத்தமும் எழுவதை தடுக்க முடியவில்லை! ஒரு வாசகன் இப்படி எல்லாம் கடனுக்கு மேல் கடன் பெற்று புத...

வீரயுக நாயகன் வேள்பாரி!

Image
வாசிப்பு 1 வீரயுக நாயகன் வேள்பாரி! என்னை மிகவும் கவர்ந்து என்னுள் உதுருவி உறைந்துவிட்ட புத்தகம் இது.எண்ணற்ற தமிழ் பெயராகளை, மலர்களை, விலங்குகளை, பறவைகளை,பூச்சிகளை ஏன்! ஆயுதங்களை கூட  எனக்கு அறிமுகப்படுத்தியே ஆசான் இந்த புத்தகம் இந்த புத்தகத்திற்கு பலதரப்பட்டவர்கள் பல்வேறு விமர்சனங்களை எழுதிவிட்டார்கள் இதில் நான் என்ன எழுதுவது என்று நினைக்கையில் பலரும் ஒரே பார்வையில் இதை விமர்சித்து உள்ளதை கவனித்தேன் . விமர்சனம் எழுதியே அனைவரும் இது பாரிக்கும் மூவேந்தர்கள்க்கும் நடந்த போர் என்ற  காண்ணோட்டத்திலே எழுதி இருந்தார்கள் ஆனால் உண்மையில் இது தற்சார்புக்கும் பெருவணிகத்திக்கும் இடையே நடந்த போர் தான் #வீரயுக நாயகன் வேள்பாரியின் சாரம். விமர்சனம் எழுதியவர்கள் ஏன் இதை விட்டார்கள் என்று தெரியவில்லை ஒருவேலை அவர்களுக்கு தற்சார்பு என்றால் என்ன என்று தெரியாமலே கூட இருந்து இருக்கலாம் . தற்சார்பு என்பது  ஒருவர்க்கு ஒருவர் தேவைகளை பூர்த்தி செய்ய பரிமாறிகொல்வது வணிகம் என்பது தேவையே உருவாக்கி அதில் ஆதாயம் தேடுவது. இயற்கைக்கு விரோதமாக இருக்கும் வணிகத்தை எதிர்த்து நின்ற குடிகளை...