ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு - இரா.மன்னர் மன்னன் - திறனாய்வு பகுதி 1
வாசிப்பு 47(1.O) ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு - இரா.மன்னர் மன்னன் திறனாய்வு பகுதி 1 ஆரியர்களாலும், தனது அரசியலுக்காக பொய்யான வரலாறை பேசி திணிப்பவர்களாலும், மதவாதிகளாலும் தமிழகத்தின் அறிவியலும் வரலாறும் தொடர்ந்து மறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று மறைக்கப்பட்டு உள்ளது. அது என்ன? அது தான் தொழில்நுட்பம் அப்படி என்ன தொழில்நுப்டம் மறைக்கப்பட்டது?இன்று உலக பணக்காரன் யார் என ஒரு பட்டியலை போடுகிறோமே, அந்த பட்டியலில் முதல் பணக்காரரை முடிவு செய்வதே இந்த தொழில்நுட்பம் தான் . அந்த பட்டியலில் முதல் முதலாக இடம் பிடித்தவர் ஆப்ரஹாம் டெர்பி (கிபி. 1678 - 1717 ) அந்த தொழில்நுட்பம் இரும்பு . ஆம் கிமு.3 ஆம் நூற்றாண்டிலேயே இந்த உலகத்திற்கு இரும்பு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது தமிழர்கள் தான் ஆனால் சேர, சோழ , பாண்டிய நாடுகள் அறிமுகம் செய்யவில்லை.இந்த வியக்கத்தக்க தொழில்நுப்பத்தை உருவாக்கியது கொங்கு நாடு தான் என்ற தனது ஆய்வுகளை தக்க சான்றுகளோடு நம் முன் இந்த பொத்தகத்தின் மூலம் நிறுவுகிறார் ஆய்வ...