திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா? - பெ. மணியரசன்.
வாசிப்பு 37 திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா? - பெ. மணியரசன். . திராவிடம் என்றால் என்ன ? யார் எல்லாம் திராவிடர்..? * தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் நிலப்பரப்பில் வாழ்பவர்கள் திராவிடர்கள், அவர்கள் திராவிட இனத்தை சார்ந்தவர்கள். *ஆரியர் அல்லாதவர்களை குறிக்கும் சொல் தான் திராவிடர், ஆரியத்தை எதிர்ப்பது தான் திராவிடம். *திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம், அதை பின்பற்றும் தமிழர்கள் தான் திராவிடர்கள். *தமிழர்கள் தான் திராவிடர்கள். திராவிடர் என்றும் அழைக்கலாம் தமிழர் என்றும் அழைக்கலாம். *திராவிடம் என்பது வாழ்வியல் *திட்டம் தான் திராவிடம் எது வேணாலும் பேசுவது நரம்பு இல்லாத நாக்கு என்றால் எந்த பொருளையும் தனது என்று திருடி கொள்ளும் பொருள் அற்ற ,தமிழே இல்லாத திராவிடம். அந்த திராவிடத்தாலும் அதை கொண்டு அரசியல் செய்தவர்களாலும் தமிழரின் மறுமலர்ச்சி வளர்ந்ததா அல்லது வழி மாறியதா என்பதை நன்கு ஆராய்ந்து வரலாற்று தரவுகளுடன் இந்த பொத்தகத்தில் பதிவு செய்துள்ளார் ஐயா தமிழ்த்தேசிய ஆசான் பெ.மணியரசன் திராவிட இயக்கமும் பெரியாரும் இல்லையென்றால் தமிழ...