ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்.
வாசிப்பு 30 ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன். ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பொது விழாவில் என்னிடம் ஒருவர் வந்து உங்களை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்குங்க but where னு தாங்க தெரியலிங்கனு சொன்னார். அதுக்கு நான், வேற எங்கையும் இல்லைங்க ஐந்து வருடமாக நான் தான் உங்கள் பக்கத்து வீட்டுகாரன் னு சொன்னேன். இத்தனை வருடக்காலம் அவர் அருகில் இருந்தும், தினம் தினம் எதிரில் பார்த்தும் அவர் என்னை பார்க்கவில்லை. இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல. சில நேரம் கடவுளுக்கும் பொருந்தும். எங்கயோ இருக்கும் திருவரங்கத்திற்க்கும் , தில்லைக்கும் இருக்கும் மதிப்பு. பக்கத்திலே இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் , சிவன் கோவிலுக்கு கிடைப்பது இல்லை. யானைக்கு கொடுக்கப்படும் கவனம் எறும்புகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனால் யானை எந்த அளவுக்கு வியப்பானதோ அதே அளவு வியப்பானது எறும்புகள். எல்லா எறும்புகளும், குருவிகளும் ஒன்று போலத் தெரிவது போல, மனிதர்களையும் பொதுவில் அறிந்து இருக்கிறோம...