தமிழ் இந்து ஏன்? - பெ. மணியரசன்
வாசிப்பு 49 தமிழ் இந்து ஏன்? - பெ. மணியரசன் இந்து மதத்தை ஒழித்தால் தான் மற்ற பார்ப்பனியம் மூடநம்பிக்கைகள், வர்ணசாதி ஆதிக்கம் போன்றவற்றை ஒழிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், நம் மக்கள் அவ்வளவு எளிதில் மதத்தை, விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். (பெரியாரின் கடைசி பிறந்தநாள் கட்டுரை , ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பாளர் ஐயா ஆனைமுத்து) "இந்து" என்ற சொல் அடிப்படையில் எந்த ஒரு மதத்தையும் சமூகத்தையும் குறிக்கவில்லை அந்த சொல் தனி நபர் சட்டத்தின்படி உள்ள பல்வேறு வகை மக்களை குறிப்பிடுவதற்காக இடுப்பெயராக பயன்படுத்தப்படுகிறது ஆனால் சில நூற்றாண்டு காலமாக rss மற்றும் பிராமணர்களால் இந்து என்ற சொல் மதத்தின் பெயராக மாற்றப்பட்டு அதை பழக்கப்படுத்தி உளவியலாக நம்ப வைக்கப்பட்டுள்ளது . அதனால் ஆரிய-பிராமணிய- சமஸ்கிருத ஆதிக்கத்தை ஏற்றுச் செயல்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளார்கள்! முசுலிம், கிறித்துவ மதங்களைப் பார்த்து, தங்களுக்கும் அவைபோல் கட்டுக் கோப்பான மதம் வேண்டும் என்ற ஆர்வம் "இந்துக்களிடையே" உருவானது. இந்த உணர்வை மிகைப்படுத்தி வளர்த்து, முசுலிம் - கிறி...