பெருந்தக்க யாவுள-யாத்திரி கார்த்திக்
வாசிப்பு 35 பெருந்தக்க யாவுள-யாத்திரி கார்த்திக் (16 வயது மேற்பட்டவர்களுக்கான கதை இது) வால்கா முதல் கங்கை வரை எனக்கு தாலாட்டு படிக்க! எப்பவும் தீவிர கருத்தை படிக்காமல் கொஞ்சம் யாத்திரி கவிதைகளை படியுங்கள் என ஐயா Prasancbe Thamirabarani எடுத்துரைக்க! நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு என்ற நகைப்போடு தோழி Priyadharshini Gopal இந்த பொத்தகத்தை படிங்க திருந்துவிங்கன்னு பரிந்துரைக்க! உடனே நான் byng செயலியை பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பிக்க. எருக்கஞ்செடியின் விதை வெடித்து தாத்தா பூச்சியாக வெளியே பறப்பது போல் என்னுள் இருந்த கொஞ்ச நஞ்ச கசடுங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியேறி நான் பரிசுத்தமானவன் ஆனேன்! எஸ்.ரா வின் துணையெழுத்து பொத்தகத்திற்கு பிறகு என் மேல் தொடர் தாக்குதல் நிகழ்த்திய தொடர் இது .மொத்தம் முப்பது அத்தியாயங்களும் பெண்ணின் உணர்வுகளும், தேவைகளுமே இதில் பேச்சு பொருள் மேகலா மற்றும் அனுபமா என்ற இரண்டு பெண்களின் கதை இது. ஒருத்தி இந்தச் சமூகத்துக்குப் பயந்து வாழ்பவள்.இன்னொருத்தி தன்னுடைய வாழ்வை தனக்காக வாழ்பவள். இக்கதையில் மு...