Posts

Showing posts from April, 2020

கண்ணீரும் புன்னகையும் (முகில்)

Image
வாசிப்பு 16 கண்ணீரும் புன்னகையும் (முகில்) "மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற அடிப்படையில் இந்த உலகம் பல மாறுதல்களை கண்டுள்ளது. ஆனால், அந்த மாறுதலுடனே போட்டி போடும் அளவுக்கு மனிதர்களின் சில எண்ணங்கள் மாறாமல் அன்றும்..இன்றும்.. என்றும்.. பாடம் செய்த மம்மி போல அப்படியே இருக்கின்றது. அவற்றில் முக்கியமானது.. ஒரு மனிதன் உண்மையானவனாக, எதையும் வெளிப்படையாக யார் என்னவென்று பாராமல் பேசுபவனாக, எந்தவொரு கசப்பான அனுபவங்களுக்கும் தன் புன்னகையை மட்டுமே பதிலாக தருபவனாக இருந்தால்.. "திமிர்ப்பிடித்தவன், கெட்டவன்" என்று முத்திரை குத்தி அவனிடம் இருக்கும் சிறு கெட்ட பழக்கத்தைகூட பெரிதுபடுத்தி, ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைஞனின் உண்மை சரித்திரம்தான் "கண்ணீரும் புன்னகையும்". இந்த புத்தகத்தை பல தருணங்களில் வாங்க நினைத்து, ஏதோ ஒரு காரணத்தினால் வாங்கவே முடியாமல் தள்ளிப்போனது. அதனால், கிண்டிலில்  இலவசமாக வந்த உடனே பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் முகில் அவர்களின் முதல் புத்தகம் என்பதால் கூடுதல் ஆர்வம் சேர்ந்துகொண்டது. முகில் ...

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் - முகில்

Image
வாசிப்பு 15 சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் - முகில் Lockdownல் படிக்க இருந்த 4 புத்தகங்களில் 3 புத்தகங்களை படித்து முடித்து 4-வது  புத்தகம் படிக்கவே முடியாத அளவுக்கு  சலிப்பு ஊட்டியதால், அதை மூடி shelf ல் வைத்து விட்டேன். புதிய புத்தகமேதும் இல்லாததால், வேறுவழியின்றி, மொபைலில் படுத்துறங்கி கொண்டு இருந்த திரைப்படங்களை "என் சாமி, என் கண்ணு, என் தங்கம், என் ஜூஜிலிப்ப கொஞ்சம் எழுந்திரிப்பா"ன்னு  எழுப்பி விட்டு பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று  டிங்..டாங்.. எழுத்தாளர் முகில் அவர்களின் "முகநூல் நிலை புதுப்பிப்பு" அதுதானுங்க status update வந்துச்சு. என்னன்னு போய் பார்த்ததா என் கண் விழி இரண்டும் heart shape ல 😍😍 ஆமா, இந்த மாதிரி தான் மாறி போச்சு. அப்டி அதில் என்ன இருந்துச்சுன்னா...🤔🤔🤔🌀🌀🌀  செத்த பாம்பை வச்சி நம்ம ஆளுங்க வெள்ளைக்காரனையே தெறிக்க விட்ட குட்டி storyயும், கடைசியில் "எனது புதிய மின்நூலான சிரிக்கச் சிரிக்கச் சரித்திரத்திலிருந்து. நூலை கிண்டில் அன்லிமிடெட்டில் இலவசமாக வாசிக்கலாம். இணைப்பு முதல் கமெண்ட்டில்"னு அறிவிப்பு. முகில...

அருண்மொழி சந்திரமல்லி - கோமகள் குமுதா

Image
வாசிப்பு 14 அருண்மொழி சந்திரமல்லி - கோமகள் குமுதா ராஜராஜசோழன் என்றவுடனே நம் நினைவுக்கு வருவது தஞ்சாவூர் பெரிய கோவில். அவன் வென்ற இடங்கள், ஆட்சி பரிபாலங்கள் மற்றும் அவனது கப்பல் படைகள். ஆனால், அடிப்படையில்  அவனும் ஒரு மனிதன்தான் என்பதையும் அவனுக்கும் சோகம், கண்ணீர் எல்லாம் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இல்லையில்லை நினைப்பதே இல்லை, நினைத்தால் தானே மறப்பதற்கு. தாவரமாக   இருந்தால்தான் வெளிச்சத்தின் ருசியை அறிந்து  கொள்ள முடியும் என்பதுபோல, ஒரு சகமனுஷியாக ராஜராஜனை வேறொரு கோணத்தில் அணுகி  இதுவரை எந்த எழுத்தாளரும் கண்டுகொள்ளாத அவனது அன்பு, காதல், பாசம் மற்றும் சோகம் போன்றவற்றை அறிந்து உள்வாங்கி அவனது கண்ணீர் துளிகளில் தன் கற்பனையை கலந்து "அருண்மொழி சந்திரமல்லி" என்ற தன மூன்றாவது நாவலை பல வண்ணங்கள் உடைய ஓவியம் போல வடித்துள்ளார் ஆசிரியர் "கோமகள் குமுதா". இந்த நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை ஒரு இனம் புரியாத உலகத்திற்குள் கூட்டி செல்கின்றன.. ஆற்றில் மிதக்கும் ஒரு இலையைப் போல ஒவ்வொரு அத்தியாயங்களும் நம் கண் முன்னால் கடந்து செல்கின்றன. கு...

மங்காதேவி - கோமகள் குமுதா

Image
வாசிப்பு 13 மங்காதேவி - கோமகள் குமுதா இந்த நாவலில் ஒவ்வொரு எழுத்துக்களும் ஒரு தேனியைப் போல பறந்து யாரும் அறியாத  யாரும் தொடாமல் விட்டுச் சென்ற மலர்களை ஒன்று சேர்த்து  என் கைகளில் மகரந்த வாசனையை தூவிச் செல்கின்றன. நாவல் தொடங்கும் இடத்துக்கும் முடியும் இடத்துக்கும் இடையில் அது கொள்ளும் ஒப்பனைகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி வியப்பானவை. ஒரு பழம் விழுங்கிய பறவை பல மரங்களை விதைத்துக் கொண்டு பறப்பதுபோல ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பல்வேறு சிந்தனைகளை போகிற போக்கில் நம்முள் விதைத்துச் செல்கிறார் ஆசிரியர் கோமகள் குமுதா. வரலாறு என்பது ஓடும் ஆறு போன்றது. அதன் ஒரு கரையில் நின்று தன் கண்ணில் படுவதை மட்டும் எழுதாமல், அந்த ஆற்றில் குதித்து அதன் ஆழத்தில் யாரும் காணாதவற்றையும் கண்டு.. அதை தன் எழுத்துக்களில் காட்சிப்படுத்தி, படிப்பவரை ஒரு மாபெரும் சிலந்தி வலையைப் போல தன்வசம் இரண்டாவது முறையாக இழுத்து கொண்டுள்ளார் ஆசிரியர். முதல் நாவலில் கோவன்  என்றால்  இரண்டாவது நாவலில் ராணி மங்கம்மாள். இப்படி யாரும் எடுத்து எழுதாத ஆளுமைகளை எடுத்து தன் கற்பனையால் புது கதையை சொல்...