மாவீரன் சிவாஜி -கோவிந்த பன்சாரே தமிழில்: செ.நடேசன்
வாசிப்பு 48 மாவீரன் சிவாஜி -கோவிந்த பன்சாரே தமிழில்: செ.நடேசன் வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது! – அண்ணல் அம்பேத்கர் ஐ i- வலையொளியில் நண்பர் அசோக் குமார் மகிழன் அவர்களின் இந்த பொத்தகத்தை பற்றிய அறிமுக காணொளியை( https://youtu.be/HMzkPhKMGoA ) பார்த்த பிறகு மிகுந்த ஆர்வம் கொண்டு தேடி 20/02/22 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய பொத்தகம் இது. எந்த ஒரு சிறந்ததையும் தனது ஆக்கிக் கொள்ளுவதும் முடியவில்லை என்றால் அவற்றை சிறுமைப் படுத்துவதும் ஆரிய திராவிட கூட்டத்திற்கு கை வந்த கலை அப்டி தான் இங்கே பிரமணர்கள்க்கு எதிராக இருந்த ராசா ராசா சோழனை பிரமாண அடிமை என்றும் உதவி செய்த திப்பு சுல்தானை பிரமாண எதிரி என்றும் பொய்யாக கட்டமைப்பு செய்துள்ளார்கள் அந்த வகையில் மஹாராஷ்டிரா வில் இசுலாமிய அரசர்களை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு மாவீரன் சிவாஜியை இஸ்லாமிய எதிரி என்னும் காவி சாயம் புசி அவர் ஒரு காவித் தலைவன் என்ற பொய் பிம்பத்தை நம்...