அன்பின் மறைமொழி - கவிதா சுந்தர்
வாசிப்பு 55 அன்பின் மறைமொழி - கவிதா சுந்தர் பொதுவாக ஒரு பெயருக்கும் அவர்களின் நிலைக்கும் பொருத்தம் அமைவது என்பது சாத்தியம் அற்றது.ஆனால் அரிதினும் அரிதாக சிலருக்கு அந்த பொருத்தம் கனகச்சிதமாக பொருந்தி போய் விடுகிறது .அந்த சிலரின் கவிதா வும் ஒருவர் என்பதை அவரின் "அன்பின் மறைமொழி" என்னும் இந்த கவிதை பொத்தகத்தை வாசிக்கும் போது நான் உணர்ந்தேன். இது ஒரு கவிதை பொத்தகம் என்பதை விட மொழிபெயர்ப்பு பொத்தகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஏன் என்றால் யாராலும் விளக்கி விட முடியாத மனிதர்களின் உள்ளத்தில் இருக்கும் வலி நிறைந்த உணர்வுகள் கலந்த மறைமொழியே அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் தோழி கவிதா. ஒவ்வொரு வரிகளும் நம்மை நம் கடந்த காலத்திற்கும் காதலுக்கும் கூட்டி செல்கிறது. நம் வைக்கும் அன்பின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும், செய்யப்படும் நிகரிப்புகளையும், கொடுக்கப்படும் ஏமாற்றங்களையும் அதனால் ஏற்பட்ட சொல்ல முடியாத ஏக்கங்களையும் கவிதாவின் வரிகள் நம் பின்னந்தலையில் தட்டி உணர்த்தி விடுகிறது. சில வரிகள் அடைப்பு நீங்கி திறக்...