வீரயுக நாயகன் வேள்பாரி!




வாசிப்பு 1



வீரயுக நாயகன் வேள்பாரி!

என்னை மிகவும் கவர்ந்து என்னுள் உதுருவி உறைந்துவிட்ட புத்தகம் இது.எண்ணற்ற தமிழ் பெயராகளை, மலர்களை, விலங்குகளை, பறவைகளை,பூச்சிகளை ஏன்! ஆயுதங்களை கூட  எனக்கு அறிமுகப்படுத்தியே ஆசான் இந்த புத்தகம்

இந்த புத்தகத்திற்கு பலதரப்பட்டவர்கள் பல்வேறு விமர்சனங்களை எழுதிவிட்டார்கள் இதில் நான் என்ன எழுதுவது என்று நினைக்கையில் பலரும் ஒரே பார்வையில் இதை விமர்சித்து உள்ளதை கவனித்தேன் .

விமர்சனம் எழுதியே அனைவரும் இது பாரிக்கும் மூவேந்தர்கள்க்கும் நடந்த போர் என்ற  காண்ணோட்டத்திலே எழுதி இருந்தார்கள் ஆனால் உண்மையில் இது தற்சார்புக்கும் பெருவணிகத்திக்கும் இடையே நடந்த போர் தான் #வீரயுக நாயகன் வேள்பாரியின் சாரம். விமர்சனம் எழுதியவர்கள் ஏன் இதை விட்டார்கள் என்று தெரியவில்லை ஒருவேலை அவர்களுக்கு தற்சார்பு என்றால் என்ன என்று தெரியாமலே கூட இருந்து இருக்கலாம் . தற்சார்பு என்பது  ஒருவர்க்கு ஒருவர் தேவைகளை பூர்த்தி செய்ய பரிமாறிகொல்வது வணிகம் என்பது தேவையே உருவாக்கி அதில் ஆதாயம் தேடுவது. இயற்கைக்கு விரோதமாக இருக்கும் வணிகத்தை எதிர்த்து நின்ற குடிகளை  வணிகன் பேரரசுகளை கொண்டு அழித்து ஒழித்தான் .அதில் மிஞ்சிவர்களை பறம்பு மலையில் வைத்து பாதுகத்தான் வேள் பாரி.

இதற்கு விமர்சனம் எழுதியவர்கள்  போரிட்ட பாரியேயும் .முவேந்தர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் பற்றி  மட்டுமே எழுதி உள்ளார்கள் ஆனால் போருக்கு காரணமான துண்டிவிட்ட வணிகன் ஹிப்பாலஸ் பற்றி ஒருவரும் கூறவில்லை. ஒரு புத்தகத்தை படிக்கும் போது அதில் மறைந்து இருக்கும் உள்கருத்தை புரிந்துகொள்ளும் போது அது நம்முள் பல மாறுதல்களை உண்டாக்கும்.

எனக்கு பிடித்த காட்சி :

“குடநாட்டு வேந்தர், வணிகப்பேச்சு ஒன்றுக்காக என்னை அனுப்பிவைத்தார்.”“வணிகம், இயற்கைக்கு விரோதமானதே! அதை ஏன் என்னிடம் பேசவந்தீர்கள்?”அமைச்சன் எச்சில் விழுங்கினான்.
"வணிகம்தானே ஓர் அரசின் அச்சாணி. வணிகம் செழித்தால் தானே அரசு செழிக்கும். அரசுசெழித்தால் தானே மக்கள் செழிப்பர்.”வணிகமே இல்லாததால் தான் நாங்கள் செழித்திருக்கிறோம்” என்று சொன்ன பாரி, சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், "எந்த மன்னனின் காலடியிலும் பறம்பின் தட்டுக்கள் பணிந்துவைக்கப்பட்டது இல்லை என்பதை அறிவீரா?”அமைச்சன், அதிர்ச்சி அடைந்தான். பாரி தொடர்ந்தான்..இயற்கை வழங்குகிறது; நாம் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?கொள்ளாமலும் கொடுக்காமலும் எப்படி வாழ முடியும் மன்னா? பறம்பு நாட்டுக்குத் தேவையான உப்பை உமணர்களிடம் இருந்து நீங்கள் வாங்கத்தானே செய்கிறீர்கள்?"

“எங்களுக்குத் தேவையானதையும் அவர்களுக்குத் தேவையானதையும் பரிமாறிக்கொள்கிறோம்.பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும், இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்தவை.அதுதானே வணிகமும்.இல்லை... பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது. ஆதாயம் மனிதத்தன்மையற்றது"

தமிழகமே வாசிப்போம்

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு