படைவீடு - தமிழ்மகன்
வாசிப்பு 51 படைவீடு - தமிழ்மகன் முதலில் இந்தப் பொத்தகத்தின் ஆசிரியர் திரு.தமிழ்மகன் அவர்களுக்கு எனது இரண்டு பாராட்டுகளும் வாழ்த்துகளும் .ஆரிய திராவிடத்தால் மறைக்கப்பட்டுச் சொல்ல மறுக்கப்பட்டு தமிழர்கள் மறந்துப் போன தமிழகத்தின் கடைசி தமிழ் மன்னர்களின் வரலாற்றை களாய்வு செய்து மீட்டு எடுத்து இந்த நாவல் மூலம் பதிவு செய்தமைக்கு ஒன்று. ஒரு வரலாற்று நாவல் என்றால் அதிக கற்பனைகளும் புனைவுகளும் , எதுகை மோனை சொற்களும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் கொண்டை ஊசி திருப்புமுனைகளும் அங்கே அங்கே உண்மை வரலாற்று சம்பவங்களை துளி துளியாக தூவ வேண்டும் என்ற வழக்கமான விதிமுறைகளை உடைத்து அங்கே அங்கே கற்பனையேப் புள்ளியாக வைத்து ஒரு வரலாற்று நாவலை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் உண்மை வரலாறாகவே எழுதியதற்கு மற்றுமொரு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தமிழர்களின் வரலாறு இரண்டு விதமாக இருக்கிறது ஒன்று வாழ்ந்த வரலாறு இன்னொன்று வீழ்ந்த வரலாறு. இவற்றில் பெரும்பாலும் அனைவராலும் அறியப்படுவது தமிழர்கள் வாழ்ந்த வரலாறு தான். சேர,சோழ, பாண்டிய வரலாறுகள் அந்த வகையே சார்ந்தது ஆனால் தமிழர்கள் வீழ்ந...