Posts

Showing posts from May, 2020

சித்தன் போக்கு ( பிரபஞ்சன்)

Image
வாசிப்பு 20 சித்தன் போக்கு ( பிரபஞ்சன்) "பிரபஞ்சன்" இந்தப் பெயர் எனக்கு சில வருடங்களுக்கு முன், பாண்டிச்சேரி பற்றி புதியதலைமுறை இதழில் வந்த தொடர் கட்டுரைகள் மூலம் அறிமுகம். பாண்டிச்சேரிக்கு இவ்வளவு பெரிய வரலாறு பின்புலம் உள்ளதா என, என்னை வியக்க வைத்த எழுத்து அது. பிறகு "தாழப் பறக்காத பரத்தையர் கொடி" என்னும் புத்தகம் அவரை நெருங்கிச் செல்ல வைத்தது . பவா வின் கதைசொல்லல் அவரை நேசிக்க தூண்டியது, அந்த தூண்டலினால் போகிற போக்கில் வாங்கியது இந்த "சித்தன் போக்கு". ஒரு கதை நம்மை என்ன செய்யும்..?நெருப்பு தன்னோடு சேரும் அனைத்தையும் நெருப்பாக மாற்றுவதுப் போல தன்னை படிப்பவர்களை அதனுள்ளே இருக்கும் பாத்திரமாகவே மாற்றிவிடுகிறது கதை. எந்த ஒரு கதையும் தனித்துவமானது இல்லை. அது நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நினைவின் சாயலை கொண்டுள்ளது. எதையும் நினைவுபடுத்தாத கதை எளிதில் முடிவடைந்து கண்ணுக்கு தெரியாமல் கரைந்து விடுகிறது. காலம் இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கதைகளை கருவிழியின் அளவைப் போல அதன் பிறப்பில் இருந்து மாற்றாமல் வைத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வாறு என்றும் மரணம...

துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்

Image
வாசிப்பு 19 துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன் நான் இந்த புத்தகத்தைப் படித்து முடித்து ஐந்து நாட்களாகிறது. ஆனால், மதிப்பு சொல்ல முடியாத இப்படியொரு புத்தகத்திற்கு  மதிப்புரை எழுதுவது என்பது என்னளவில் மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு நாளில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி காட்சி தந்து.. மழை பொழிந்தால் கண்ணிலிருந்து மாயமாகும் தூரத்து மலைசிகரம் போலவே வார்த்தைகளும் என்னுள் வந்துவந்து மறைந்தது. ஓடும் துவைப்பான்(washing machine) மீது சீட்டுக் கட்டுகளை அடுக்குவது போல என்னுள் ஏற்படும் ஆச்சரியங்கள் மீதும் நினைவுகள் மீதும் என் எழுத்தை கோர்க்க முயல்கிறேன். எண்ணிக்கையற்ற ஒற்றையடி பாதைகளை, ஒரு தேசிய நெடுஞ்சாலை மறைத்து விடுவதைப் போன்று, பிரம்மாண்டம் என்ற ஒற்றை நிகழ்வு  எத்தனையோ சிறு சிறு அழகியலை எளிமையாக மரணிக்கச் செய்துவிடுகிறது. திரையரங்கில் அடித்துப்பிடித்து டிக்கெட் வாங்கியது, பேருந்தில் துண்டைப் போட்டு ஜன்னலோரம் இருக்கை பிடித்தது, மரமேறி மாங்காய் பறித்தது, பம்புசெட்டு குளியல் இப்படி பரந்து விரிந்து இருந்த ஆடுகளத்தை கை விரல்களுக்குள் சுருக்கியது தொழிழ்நுட்ப பிரம்மாண்ட வளர்ச்சின் ...

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - எஸ். ராமகிருஷ்ணன்

Image
வாசிப்பு 18 தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - எஸ். ராமகிருஷ்ணன் "கதை" இந்த இரண்டு எழுத்துக்கு இருக்கும் சக்தி கடவுளுக்கு கூட இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், கடவுளே இந்த கதைகள் மூலமாகத்தான் பரப்பப்பட்டு நம்முள் வாழ்ந்து வருகிறார். எப்பேற்பட்ட வாழ்க்கை வரலாற்றையும், இதிகாசத்தையும், உணர்வுகளையும், பிரச்சனைகளையும், காட்சிகளையும் கடல் நீரை உறிஞ்சும் மேகம் போல தனக்குக்குள் ஈர்த்து கொள்ளும் வல்லமை பெற்றது இந்த கதை. அக்கதைகளால் உறிஞ்சப்பட்டவைகளை கலைத்து மழையாக கொட்ட வைக்கும் வித்தை சில கைகளுக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றவை. அப்படி எஸ்.ரா அவர்களின் கைகளால் கொட்டிய மழையின் 16 சிறு துளிகளின் சங்கமமே "தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்". இந்த சிறுகதை தொகுப்பில் எந்த ஒரு கதையையும் இங்கே நான் விவரிக்க போவது இல்லை. இது சொல்லப்பட வேண்டிய கதைகளும் இல்லை. ஒவ்வொருவரும் படித்து உணர வேண்டிய கதைகள். பிரச்சனைகளால் துரத்தப்பட்டு... நெருக்கடியால் வாழ்க்கை நிலைகொள்ளாமல் தவித்த போதும் தன் கொள்கைகளை, ஆசைகளை, லட்சியங்களை, உணர்வுகளை உடும்பு பிடியாகப் பிடித்து சம...

மாண்புமிகு மருத்துவர்கள் (முகில்)

Image
வாசிப்பு 17 மாண்புமிகு மருத்துவர்கள் (முகில்) மருத்துவம் வணிக மயமாகி பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டது. "மருத்துவம் படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்" என ஒளிவாங்கியின் முன் உறுதிமொழி எடுத்த முதல்தர மாணவர்கள் சென்ற தடம் தெரியவில்லை. இவர்களுள் விதிவிலக்காய் திகழும் சில மருத்துவர்களை  நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் முகில். வருடம் சரியாக ஞாபகம் இல்லை. 1995(அ)96 ஆக இருக்கும். என் பத்து வயது வரை எனக்கு உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். மருத்துவமனையே வாழ்விடமாக இருந்த காலங்களும் உண்டு. அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் சிகிச்சையகத்திற்கு(clinic) சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோம்.  அங்கு இருந்த மருத்துவர் ₹20 ,₹30 என்று கட்டணம் வாங்குவார். ஆனால், முதன்முறையாக தெரிந்தவர் அறிவுரையின் பேரில் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் என் அப்பா என்னை கூட்டி சென்றார். சிகிச்சை முடிந்த பிறகு கட்டணம் எவ்வளவு என அப்பா கேக்க அந்த மருத்துவர் சர்வ சாதாரணமாக ₹100 என்றார். என் வாழ்நாளில் அன்றைக்குதான் என் அப்பாவின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகளை கண்டேன். எப்பொழுதும் என் அப்பா...