Posts

Showing posts from December, 2021

சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்

Image
  வாசிப்பு 38 சோளகர் தொட்டி - ச. பாலமுருகன் சோளகர் தொட்டி என்னும் இந்த நாவலை படித்து முடித்த பின் எனக்கு கொரோனா  நோயை விட பெரும்தொற்று ஏற்பட்டு விட்டதாகவே உணர்ந்தேன் .இரண்டு மூன்று நாட்களாக உறக்கம் இல்லை. அப்படியே உறங்கினாலும் நடு இரவில் திடுக்கிட்டு  எழுந்தேன், நாவறண்டு  தொண்டை விக்கி தண்ணீர் குடித்தேன். இந்த நாவலைப்  பற்றி எழுத நினைக்கையில் விழிகள் பிதிங்கியது, என் கைகள் நடனம் பழகியது . இதனை எழுதவே வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்த போது  "நான் சுமந்த அம்மாக்களின் கதைகள் பாறையைவிட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும்" என பொத்தகத்தின் என்னுரையில் ஆசிரியர் ச.பாலமுருகன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தது என் நினைவுக்கு வந்தது. இருப்பினும் இந்த நாவலுக்கு மதிப்புரை எழுதும் அளவுக்கு இன்னும் என் மனம் சமநிலையை அடையவில்லை அதன...