Posts

Showing posts from August, 2021

இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன்

Image
  வாசிப்பு 33 இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன் இதுவே சனநாயகம்! - தொ.பரமசிவன் தமிழர்களின் வழிப்பாடான நாட்டார் வழிபாடு என்று சொல்லப்படும் குலதெய்வ வழிபாடு என்றாலே அதை எதிர்க்க திராவிடர்களும், ஆரியர்களும் கை கோர்த்து கொள்வார்கள். ஒருவர் சிறுதெய்வ வழிபாடு என்று இழிவு செய்வார்,இன்னோருவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என்பார். ஆனால் ஐயா தொ.பரமசிவன் அவர்கள் திராவிட இயக்கத்தில் இருந்தாலும் அதை மக்களின் தெய்வங்கள் என்று போற்றுவார். தன் ஆய்வுகளில் கிடைத்த உண்மை  என்னவோ அதை அப்படியே எந்த வித மாற்றமும் இல்லாமல் பதிவு செய்பவர்.அதனாலேயே அவரின் புத்தகம் என சொன்னாலே எனக்குள் ஒரு பசுமை போர்த்திய குளிர்ச்சி எற்படும்.முக்கியமாக இந்த புத்தகத்தில் வருணாசிரமம் விசயநகரப் பேரரசர்களால் இங்கே இந்துத்துவத்திற்குக் கால்கோல் இட்டது என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்தது எனக்கு என் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது பெரியார்,அண்ணா இருவருமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைச் சமூகக் கேடுகளாக நினைத்தனர். அதனாலேயே தாக்கினார்கள். “நிறுவனமய மாக்கப்பட்ட மதத்தை நான் வெறுக்கிறேன்" என்பத...

மாபெரும் தமிழ்க் கனவு

Image
வாசிப்பு 32 திராவிட எதிர்ப்பு நிலைப்பாட்டை நான் எடுத்த பிறகு  அதுவரை என்னிடம் நட்பு  பாராட்டி வந்த பல நண்பர்கள் என்னை நட்பு நீக்கம் செய்தார்கள். நான் பெரிதும் மதித்து வந்த சிலர் அவர்களின் பதிவுகளின் போடும் பின்னுட்டுங்களை அழித்தார்கள். ஆரம்பத்தில் அது எனக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியது. என் சிந்தனைகளையும், எழுத்துகளையும் சிறிது காலம் முடக்கி போட்டது. தான் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால் தான் உன் நட்பை தொடர்வேன் என்பது என்ன மனநிலை என்பது இப்போது வரை எனக்கு புரியாத புதிர். அந்த சமயத்தில் திராவிட  சித்தாந்தத்தை நம்பும் . திராவிடம் தான் அனைத்து நன்மைக்கும் காரணம் என்று உறுதியாக சொல்லும் தோழி ஒருவர் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் திராவிடத்தை தவறாக புரிந்து கொண்டு  உள்ளீர்கள் என்று கூறியதோடு இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் என்று ஒரு புத்தகத்தை பரிசாக அனுப்பி வைத்தார் அந்த புத்தகம் தான் அறிஞர் அண்ணாவின் "மாபெரும் தமிழ் கனவு"அந்த தோழிக்கு என் நன்றிகள். எதற்க்காக நன்றி புத்தகத்திற்காகவா இல்லை!  எனது தமிழ்த்தேசிய உணர்வு சரிதான் என உறுதி செய்தற்காக! ஒரு வேளை இந்த புத்தக...