Posts

Showing posts from March, 2021

" ழ்" பானம் தியானம் மயானம் - பிரபு தர்மராஜ்

Image
வாசிப்பு 28 " ழ்" பானம் தியானம் மயானம் - பிரபு தர்மராஜ் எண்ணற்ற யோகிகளும், ஞானிகளும் காடு மலைகளில் அலைந்து  திரிந்தும்,  புற்று வளர,  தியானம் செய்தும் கிட்டாத சமாதி நிலையை ஒரு கிளாஸ் பானத்தில் கிடைக்க பெறும் பாக்கியவான்கள் ! எத்திசையும் மது நிறைந்த திராவிட நல் திருநாட்டை தங்கள் அருளால் வாழ்வாங்கு வாழ செய்யும்  தெய்வங்களாகிய போதைக்கார்களை பற்றி நமது ஸ்ரீல ஸ்ரீ கிக்-பானந்த ஸ்வாமிகள் திரு.பிரபு தர்மராஜ்  அவர்களால் இயற்றப்பெற்ற அற்புதங்கள் நிறைந்த தசாவதார காவியமே இந்த. ழ்... ழ்.... ழ்... பழங்குடிகளுக்கு ஆல்கஹால் தயாரித்து விற்ற காசில் இந்த இரண்டாவது யூனிட் சாராயகடையை திறந்து உள்ளார் நமது கிக்-பானந்த ஸ்வாமிகள்(கூடிய சீக்கிரம் ரம்மலயமுன்னு ஆசிரமம் ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை) இதில் விற்கப்படும் 10 விதமான சரக்கும் அதாங்க,  கதைகளும் நம்மை போதையில் திளைக்க செய்கிறது திகைக்கவும் செய்கிறது  அதேவேளையில் பிள்ளையாராய் முடிக்க வேண்டிய கதையை, கந்தனாக முடித்து இருப்பதால் கொஞ்சம் திகட்டவும் செய்கிறது. Nitrous oxide ஐ  தயாரிக்க அரசாங்கம் ஏதாவது கட்டுப்பாட...