தமிழாற்றுப்படை - கவிப்பேரரசு வைரமுத்து
வாசிப்பு 4
தமிழாற்றுப்படை - கவிப்பேரரசு வைரமுத்து
மூவாயிரம் ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆளுமைகள் என்னும் கோடி பூக்கள் மலர்ந்த மரத்தில் 24 பூக்களை மட்டும் பறித்து தன் எழுத்து நடையையும், தமிழ் புலமையையும் நூலாய் திரித்து தகவல்களில் கோர்த்து கவிஞர் வைரமுத்து அவர்கள் நமக்கு அணிவிக்கும் மாலை இந்த தமிழாற்றுபடை.
இந்த நூலைப்பற்றி விமர்சனம் எழுத நினைக்கும் போது இதுக்கு நான் தகுதி உடையவனா? என்ற தயக்கத்தில் வார்த்தைகளே தோன்றவில்லை.பல மணி நேரங்கள் முயற்சி செய்து முடிந்தவரை மூளையில் குச்சியை வைச்சு குத்தி அடைப்புகளை எடுத்து வார்த்தைகளை உருவாக்கி எழுத்தாய் வடிக்கிறேன். இந்த விமர்சனம் குறைகளாய் நிரம்பி இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக நிறையாகவும், மிகையாகவும் இருக்க வாய்ப்பில்லை. இந்த நூலுக்கு உலக மொழிகளிலேயே எந்த ஒரு சிறப்புமிக்க சொல்லும், ஈடுஇனையும் இல்லை.
அகிலம் எங்கும் பரவி இருக்க! அந்நிய உதடுகள் பயின்று உச்சரிக்க! தமிழகத்தில் மட்டும் மெல்ல சாகிறது தமிழ்!. அதை காப்பாற்றும் பெரும் பொறுப்பை, பிறந்த சில நிமிடமே ஆனா குழந்தையே போல நம் கைகளில் தவழ விடுகிறார் கவிஞர்
ஓரு தமிழ் ஆளுமையே படித்து முடித்து அடுத்த ஆளுமையே படிக்க தொடங்கும் தருணம். ஒரு வகுப்பில் தேர்ந்து புதிய வகுப்புக்கு செல்லும் பள்ளி மாணவனின்
மனநிலைக்கு என்னை கொண்டு செல்கிறது. நம் தமிழ் எத்தனை மேம்பாடுகளையும், சூழ்ச்சிகளையும், ஆபத்துகளையும், வடமொழியின் உள்ளீடுகளையும் தாண்டி நிலைத்து நிக்கிறது என்று அறியும் போது நம் புருவம் உயர்வதையும், உடல் முடி எல்லாம் சிலிர்த்து நிற்பதையும் நம்மால் தடுக்க முடியாமல் மதிமயங்கி போவம்.
"தமிழ் எழுத்துக்களில் மாற்றங்கள் செய்து எளிமை செய்த தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார்" ,
"தமிழால் மனிதனை கடவுளாக்கி காப்பியம் படைத்த கம்பர்" ,
" பிறமொழி களையெடுத்த மறைமலை அடிகளார்" ,
"தமிழை கொண்டு சமத்துவம் கண்ட வள்ளலார்" ,
" தமிழ் பக்தி இலக்கியத்தை தந்த அப்பர்" ,
" கவிதைகளில் சுதந்தர புரட்சியே ஏற்படுத்தி பெண் அடிமைத்தனத்தையும் ஒழித்த மகாகவி பாரதியார்" ,
"சமஸ்கிருத பொய்களை ஒடுக்கி தமிழே திராவிட மொழிகளின் தாய் என்று நிரூபித்து ஒப்புஇலக்கணம் எழுதிய கால்டுவெல் பாதிரியார்" ,
" திரைஇசை தமிழை ஆட்சி செய்த கவியரசர் கண்ணதாசன்" ,
" தன் அடுக்குமொழி தமிழ் பேச்சால் அரசு அமைத்த பேரறிஞர் அண்ணா" ,
" தன் எழுச்சி மிகு தமிழ் வசனதால் திரைத்துறையேயும், அரசியலையும் புரட்டி போட்ட கலைஞர் கருணாநிதி" ,
"வறுமையே எழுத்தாளனின் சொத்து என்று வாழ்ந்து மறைந்த புதுமைப்பித்தன்" ,
"குறைந்த வயதே வாழ்ந்தாலும் தமிழால் தன் அடையாளத்தை இன்றுவரை பதித்து சென்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" ,
" தமிழ் சிறுகதைகளுக்கு புதிய பாதை அமைத்த ஜெயகாந்தன்" ,
"இரண்டு அடியில் உலகை உணர்த்திய திருவள்ளுவர்" ,
" கடவுள் என்று சொல்லப்படுபவரை தன் செந்தமிழால் ஆட்க்கொண்டு 1 ,2,3 என்று அடி எடுத்து கொடுக்க வைத்த ஔவையார்" ,
"கவிதை உலகின் முடிசூடா மன்னன் கவிக்கோ அப்துல் ரகுமான்.
போன்றவர்களை படைவிரர்களாய் கொண்டு கவிஞர் வைரமுத்து அவர்களை தளபதியாய் நிற்க வைத்து நமக்குள் ஒரு தமிழ் உணர்ச்சி போரையே நடத்துகிறது இந்த தமிழாற்றுப்படை.
இந்த நூலில் சிறு குறை தான் சில செய்யுள்களுக்கும், பாடல்களுக்கும் கவிஞர் விளக்கம் தரவில்லை. அழகாக ஒப்பனை செய்த குழந்தைக்கு கண் பட்டுவிடும் என்பதற்காக கன்னத்தில் ஒரு கரும்புள்ளி வைப்பது போல.
நான் எல்லாம் தமிழனா என்ற கேள்வி ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும் போது என்னுள் ஏற்பட்டது. பல வார்த்தைகள் புரியவில்லை அதை புரிந்துகொள்ள என்னிடம் தமிழ் அகராதியும் இல்லை.
தமிழாற்றுப்படை படிப்பவர்கள் ஒரு நல்ல தமிழ் அகராதி வாங்கி வைத்து இருப்பது முக்கியமானது. நம் தமிழ் அறிவு அந்த அளவுக்கு தான் இருக்கிறது
பாரதியாரின் பிறந்தநாள் ஆனா இன்று இந்த புத்தக மதிப்பீட்டை பதிவிடுவதில் நான் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமாகவும் உணர்கிறேன்.
தமிழகமே வாசிப்போம்

Comments
Post a Comment