தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பாகம் 2. ஆசிரியர்-கிருஷ்ணவேல்.T.S.
வாசிப்பு 39 தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பாகம் 2. ஆசிரியர்-கிருஷ்ணவேல்.T.S. இதன் முதல் பாகத்தை படித்து விட்டு அதில் உள்ள பிராமண துவேஸதை தவிர கொடுக்கப்பட்ட வரலாற்று தகவல்கள் என்னை மிக பெரிய வியப்பில் ஆழ்த்தியது. அதை சில நண்பர்களுக்கு பரிசாகவும் கொடுத்தேன்.திருப்பதி, சபரிமலை, தரவாடு வீடு, தஞ்சாவூர் பெரியகோவிலில் இருக்கும் வெள்ளைக்காரன் சிலை என்று கலந்துக் கட்டி வரலாற்றில் நமக்கு தெரியாத பக்கங்களை நம் முன் விரித்து இருப்பார். அதனால் இதன் இரண்டாவது பாகத்திற்காக வெகுகாலம் காத்து இருந்தேன் ஆனால் sumi hari யின் மதிப்புரையை படித்து விட்டு, இது உடைக்க வேண்டிய furniture என்று முடிவுக் கட்டி priyadharshini gopal அவர்களிடம் பொத்தகத்தை இரவல் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.படித்த பிறகு தான் இதை படிப்பதற்கு பதிலாக ஒரு bottle பாலிடாயில் வாங்கி குடிவிடாலம் என்று தோன்றியது அவ்வளவு புளுகுகள். எங்க ஊர் கோவையின் வட்டாரமொழியில் அண்ட புளுகு ஆகாச புளுகுன்னு சொல்லுவாங்க ஆனால் இது உலக மகா புளுகுகளாக இருக்கிறது. ஆசிரியர் கிருஷ்ணவேல்.TS பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பொத்தகம் வெற்றி ...