ஆங்கில மாயை - நலங்கிள்ளி
வாசிப்பு 50 ஆங்கில மாயை - நலங்கிள்ளி உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப்பழகுங்கள். பேசமுயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.' (விடுதலை அறிக்கை 27.1.1969) உலகத்தில் எந்த ஒரு மொழிக்கும் வேறு ஒரு மொழி மேலானதோ கிழனாதோ இல்லை எந்த மொழியும் அந்த அந்த மொழிக்கான தனித்துவமானச் சிறப்புகளை கொண்டது தான் அதை நம் தேவைக்காகக் கற்பதும் பயன்படுத்துவதும் தவறு இல்லை. ஆனால் உன் மொழியில் ஒன்றுமே இல்லை, அது ஒரு காட்டுமிராண்டி மொழி. அதனால் அந்த மொழியே விட்டு வேறு ஒரு மொழியே கற்றுக்கொண்டு அதையே உங்கள் மொழியாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அதை எதிர்த்து என் மொழியில் இதெல்லாம் இருக்கிறது.அதெல்லாம் உன் மொழியில் இருக்கிறதா என்று கேள்வி கேட்பது மொழி வெறி அல்ல. அது தாயை காப்பதுப் போல தாய்நாட்டை காப்பது போல, தன் தாய்மொழியை காப்பது கடமையாகும். அப்படி பல கேள்விகளுடன் திரு. நலங்கிள்ளி அவர்களால் எழுதப்பட்டது தான் இந்த ஆங்கில மாயை பொத்தகம் ஆங்கிலமே சிறந்த மொழி தமிழை விட்...