Posts

Showing posts from February, 2021

அர்த்தமற்ற இந்து மதம் - மஞ்சை வசந்தன்

Image
 வாசிப்பு 27 அர்த்தமற்ற இந்து மதம் - மஞ்சை வசந்தன் ஒவ்வொரு மனிதனும் அவரவர்களுக்கு விருப்பமான பயத்தை கொண்டு இருப்பது இயல்பே.ஆனால்  ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்று சொன்னவுடனே பயங்களின் குவியல்கள் பின்னுட்டமாக என் பதிவில்.. இல்லை! என் அறிவிப்பில் வந்து குவிந்தது இந்த உலகம் கொரனாவை விட பெரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையே  உணர்த்துகிறது. இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் சொல்லும் காரணம் இது எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்பதே அவர்களிடம் நான் கேக்குறேன் ஒரு புத்தகத்தின் பெயர்க்கே ஆட்டம் காணும் அளவுக்கு உங்கள் நம்பிக்கை அவ்வளவு பலகீனமானதா? இது  தன் மீது நம்பிக்கை இல்லாதவன்  அந்த பயத்தை தன் மனைவியின் ஆரோக்கியமான நட்பு வட்டத்தின் மீது செலுத்தி அதை துண்டிக்க செய்வதை போன்ற பயந்தகோழித்தனம் தான் உங்கள் பின்னுட்டங்கள் வெளிப்படுத்துகிறது.  அர்த்தமற்ற இந்து மதம் எழுதி இருப்பவருக்கு அர்த்தமற்ற இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம்  என்று ஏன் எழுத தோன்றவில்லை?  இது கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூல்க்கு மறுப்பாக  எழுதப்பட்ட...

சமயங்களின் அரசியல் - தொ. பரமசிவன்

Image
 வாசிப்பு 26 சமயங்களின் அரசியல் - தொ. பரமசிவன் எந்த மதம் உண்மையான மதம் என்ற அடிப்படையில்  கடவுளைப்  பற்றி என் தேடலின் ஆரம்பக்கட்ட முடிவில் ஒரு குறிப்பிட்ட மதம் தான் உண்மையான மதம் என்று உறுதிச்  செய்து, அதை நோக்கி நான் செல்லும் போது என்னை பிடித்து மக்களின் தெய்வங்களின் பக்கம் திருப்பி தமிழனுக்கு மதமே இல்லை என உணர்த்தியவர் ஐயா தொ. ப அவர்கள் . அதற்க்கு காரணமாக அமைந்த பத்மஸ்ரீ திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கோடி நன்றிகள். பதியப்பட்ட வரலாறுகளையும்,  அதன் அரசியலையும்  ஆராய்ந்து பதிவு செய்வது என்பது கொஞ்சம் சுலபமான வேலை தான். ஆனால் எங்கேயும் பெரிதாக பதிவு செய்யப்படாத மக்களோடு அன்றாட வாழ்க்கையில்  கலந்து போய் விட்ட பண்பாடுகளை தனியாகப்  பிரித்து எடுத்து ஆராய்ந்து அந்த  பண்பாட்டுக்குள் ஊடுருவி அதை தன்வசம் ஆக்கி கொண்ட அல்லது ஆக்க முயற்சிக்கும் சமயங்களின் அரசியலை ஐயா தொ.பரமசிவனை போல ஆதரங்களோடு பதிவு செய்து சொல்லுவது என்பது மிக மிக கடிமான காரியம் அதுக்கென்று தனியான துணிச்சல் வேண்டும். இனி எத்தனை பேர் பிறந்து வந்தாலும் இவரின் இடத்தை நிரப்பவது அரிதிலும் அர...

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி

Image
வாசிப்பு 25  பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி   இந்த நாவலை வாசித்து உள்ளீர்களா ? இல்லைங்களே! என்னது இல்லையா நீ எல்லாம் ஒரு புத்தகம் வாசிப்பாளனு வெளியே சொல்லிறாதே இப்படி என்னை ஏதோ கொலைக்  குற்றம் செய்தவனைப்  போல விசாரணை செய்யும் அளவுக்கு அப்படி என்ன நாவலுங்க அது எனக்  கேட்டால் ஒரே குரலில் ஒலிக்கும் பெயர் பொன்னியின் செல்வன். இந்த நாவலைப்  பல முறை வாங்க நினைத்தும்  வாசிக்க முடியாமல் போய்விட்ட நிலையில் நான் எதிர்ப்பாராத தருணத்தில் ஒரு நட்பு கரம் இந்தப்  பொக்கிஷத்தை எனக்கு பரிசளித்தது .என் இடுக்கன் களைந்த தருணம் அது ஆனால் இந்த நாவலை பல இடையுற்கு இடையில் வாசித்து முடித்து  மதிப்புரை எழுதும் இந்த நேரத்தில் அந்த நட்பு கரம் விலகிவிட்டது என்று நினைக்கும் போது  தரையில் விழுந்த மீன் போல உணர்கிறேன் அந்த இணையற்ற நட்புக்கு என் நன்றிகள். சரி நாவலுக்கு போவோமா  தீவிர வாசிப்பாளர்களுக்கும். மற்றும் வாசிப்புப் பழக்கமே இல்லாத பொது மக்களுக்கும் இடையில் கடந்த ஐம்பது வருடங்களாக  நாற்காலி போட்டு அமர்ந்து இருக்கும் ஒரே நாவல் என்றால் அது பொன்னியின் ச...