ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும் - பிரபு தர்மராஜ்
வாசிப்பு 24 ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும் - பிரபு தர்மராஜ் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுறதே பெரும்பாடு. அதுவும் சிறுகதை தொகுப்பிற்கு எழுதறதுன்னா வழுக்குமரம் ஏறுற மாதிரிதானுங்க. ஒரு அடி ஏறினா, பத்தடி கீழே இறங்கும். போதாக் குறைக்கு இந்த எழுத்துகாரரு ஆமா, இந்த ஆளு பேரென்ன.. அ.. "பிரபு தர்மராசு" வீட்டுல குடிசைத் தொழிலாக Nitrous oxide தயாரிக்கிறாருன்னு நினைக்கிறேன். அச்சு மையோட சேர்த்து அதைக் கலந்து புத்தகத்தை அச்சடிச்சு இருக்கார். அதுவும் பத்தாம ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கார். வார்த்தையோ, அர்த்தமோ புரியாம ஒரு பக்கத்தை முடிக்க தாமதம் ஆயிருக்கு. ஆனால், சிரிச்சு சிரிச்சு தாமதமானது இதுதாங்க முதல் தடவ. தெரியாத்தனமா, வீட்டு கதவை திறந்து வச்சுட்டு, படிச்சு தொலைஞ்சுட்டேன். தனியா இருக்க புள்ளைக்கு ஏதோ ஆயிப்போச்சுன்னு, பக்கத்து வீட்டுங்காரங்க எல்லாம் வந்து எட்டிப் பார்த்துட்டு போறாங்க. இந்த லட்சணத்தில் எங்கப்போய் இந்த ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதுறது. முடிஞ்ச அளவுக்கு மொத்தமா ஊத்துறேன் .. ச்சை.. எழுதுறேன். அதுக்கு...