யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்
வாசிப்பு 59 யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக் அரசியல் என்பதின் விரிவாக்கம் அறம் + இயல் என்பதாகும்.ஆனால் வாதத்தில் தோற்றவன், அவதூறை கையில் எடுக்கிறான் என்னும் முதுமொழிக்கு ஏற்ப நடைமுறையில் அது அவதூறு இயலாக மாறி நிற்கிறது கூடவே ஆபாச சொற்களும் அதன் உடன் கை கோர்த்து கொள்கிறது . உண்மையில் இதன் தொடக்க வேரை தேடி பயணம் செய்தால் அது முத்தமிழ் வித்தவர் மன்னிக்கவும் வித்தகர் கலைஞர் மு.கருணாநிதி இடமே போய் நிற்கிறது காமராஜர் முதல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வரை இவர் அவதூறு பரப்பாத ஆட்களே இல்லை எனலாம். வார்த்தை ஜாலம் என்னும் போர்வையில் இவர் பேசாத சொற்களும் இல்லை உண்மையில் திராவிடம் என்னும் பெயரை போலவே இது ஆரியத்திடம் இருந்து கற்றுக்கொண்ட திராவிட தந்திர பாடம் ஆகும். ஆரியர்கள் பொதுவாக தமிழ்நாட்டு கடவுள்களை தங்களுக்குள் ஈர்த்து செறித்து விடுவார்வார்கள் முடியவில்லை என்றால் ஆபாச புராண கதைகள் மூலம் அந்த கடவுள்களை கீழ்மைப்படுத்தி அந்த கடவுளை வணங்கிய தமிழர்கள் மூலமாகவே ஒதிக்கி வைக்க செய்து விடுவார்கள். இந்திரன் முதற்கொண்டு அந்த தந்திரத்துக்கு இரையாகி போன தமிழ் கட...