வேடிக்கை பார்ப்பவன்-நா.முத்துக்குமார்

வாசிப்பு 2

வேடிக்கை பார்ப்பவன்-நா.முத்துக்குமார்

ஒரு கவிஞன் தன் உடலை விட்டு வெளியேறி இன்னொருவானக மாறி தன்னோடிய வாழ்க்கையை வேடிக்கை பார்த்த அனுபவமே இந்த நூல்.பல ஒற்றை அடி பாதைகளை ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்வாங்கிக்கொண்டது போல தன் சுயசாரிதையை இந்த சின்ன சிறு புத்தகத்துக்குள் அடைகியுள்ளார் .ஒரு தாய் தன் குழந்தைக்கு வேடிக்கைக் காட்டியப்படியே உணவை ஊட்டுவதை போல தன் வாழ்க்கையை வேடிக்கைக் காட்டி நமக்குள் அனுபவகளை ஊட்டுகிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஓவ்வொரு புதிய அனுபவங்களில் தொகுப்பு. சிலது ஆச்சரியமாக, சிலது அதிசயமாக. இன்னும் சிலது அதிர்ச்சியான  அச்சமாக இப்படி நமக்குள் பல உணர்வுகளை விதைத்து கொண்டு செல்லும் விவசாயி இந்த கவிஞர்  நா.முத்துக்குமார் அவர்கள். சில கட்டுரைகள் கற்பனையாக இருந்தாலும் அதிலும் உண்மையான உணர்வுகளின் கசிவுகள் வலிந்து கொண்டு தான் இருந்தது. தன் தந்தையே பற்றி இவர் சொல்லும் போது எல்லாம் ஒவ்வொரு தந்தையும் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற விருப்பமும் என் தந்தை இப்படி இல்லையே என்ற வருத்தமும் எழுவதை தடுக்க முடியவில்லை! ஒரு வாசகன் இப்படி எல்லாம் கடனுக்கு மேல் கடன் பெற்று புத்தகங்கள் வாங்கி குவிப்பான? என்னும் வியப்பை இவர் தந்தை நமக்கு தருகிறார்

பிறந்த வீட்டின் நாட்களை ஒரு பழைய தாவனியைப் போல அவளிடம் இருந்த மெள்ள நழுவிச் சென்றுவிடும் என்ற வரிகள் புதியதாக திருமணம் அனா பெண்களின் மனகண்ணாடி பிம்பங்கள். அழுது புரண்டு நான் அலறிய ராத்திரிகளில் நில இருந்தது சோறும் இருந்தது ஊட்டத்தான் தாய் இல்லை என்னும் கவிதை  4 வருடமாக நான் அடைக்கிவைத்து இருந்த கண்ணீர் அனைக்கட்டை உடைத்து எரிந்தது. கவிஞர்க்கு  தன் மரணம் பற்றி முன்பே தெரிந்து இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு கட்டுரை எனக்கு ஏற்படுத்தியது அதில் கடவுள் அவரை வா உன் 40 வயதுற்கு பிறகு என்ன நடக்கும் என்று காட்டுகிறேன் என்பார் ஆனால் எதிர்கால சுவரஸியாகளை இழக்க விருபவில்லை என்று அதை மறுத்துவிடுவார் ஆனால் உண்மையில் அவரது மரணம் அவரின் 41 வது வயதில் நிகழ்ந்தது.இந்த உலகத்தில மனுஷங்க யாரும் சாகறதே இல்ல.காலம் தான் செத்துப்போகுது நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன் என்ற கவிஞர்ரின் தந்தையின் வார்த்தைகளை போல வாசகன் இருக்கும் வரை கவிஞர் நா.முத்துக்குமார் இருப்பார் என்ற நம்பிக்கையுடம்!

தமிழகமே வாசிப்போம்

✍️கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு