Posts

Showing posts from June, 2021

பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்

Image
  வாசிப்பு 31 பேருந்து பெயர்: பதின்   ஓட்டுனர்: எஸ்.ராமகிருஷ்ணன்   புறப்படும் இடம் : நிகழ் காலம்   போகும் இடம் : கடந்த கால பால்ய பருவம் பயணச்சீட்டு விலை : ₹ 275 "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே! "  என்று நாம் மனம்  தறியை  பின்நோக்கி   இயக்கி  நம் பால்ய  கால நினைவுகளை நெய்து விடுகிறது. அதில் தான் எத்தனை  வண்ணங்கள்! எத்தனை வடிவங்கள்! வாகன நெரிச்சலிலும், அலுவலக எரிச்சலிலும் பாதுகாத்து வைத்து இருக்கும் அவள் அறியாமல் உதிர்ந்து, யார்க்கும் தெரியாமல்  நாம் கவர்ந்து வந்த முதல் காதலியின் கரு கூந்தல் சிறு பூவை மீண்டும் உயிர்ப்பித்து நம்முள் மலர செய்கிறது இந்த பதின். ஐந்து முதல் பதினைந்து வயது வரையில் உள்ள பால்ய பருவம் மிக அற்புதமானது. இந்த வயதில் தான் அதீத கற்பனைகள், மகிழ்ச்சிகள், துயரங்கள், பயங்கள், ஆசைகள், கோபங்கள் அவமானங்கள், ஏமாற்றங்கள், திருட்டுதனங்கள்,  தோழமைகள், துரோகங்கள், கனவுகள்   மற்றும் பிரிவுகள்  போன்றவை நமக்கு ந...