நீ இன்றி அமையாது உலகு - முகில்

வாசிப்பு 6

நீ இன்றி அமையாது உலகு - முகில்


கோவை ப்ரூக் பில்டு மால் ஓடிசியில் நடந்த வாசகர் சந்திப்பில் எழுத்தாளர் முகில் அவர்களின் கையெழுத்துடன் வாங்கிய புத்தகம். 2020-ல் என்னுடைய முதல் வாசிப்பு அனுபவம்.

வாசகர் சந்திப்பு முடிந்த பிறகு, புத்தகம் வாங்கலாம் என்று எண்ணியபோது, நான் வாங்க நினைத்திருந்த முகில் அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இந்த புத்தகம் மட்டுமே என் கண் முன்னே "வாடா மவனே, வாடா" என்று தன் கைகளை நீட்டி வரவேற்றது. எனக்கும் வேறுவழி இல்லாமல், இந்த புத்தகத்தையே வாங்கி முகில் அவர்களிடம் கையெழுத்துப் பெற்று வீடு திரும்பினேன். காரணம் இல்லாமல், காரியம் இல்லை.. என்பது போல, சரியான தருணத்தில்தான் இந்த புத்தகம் என்னிடம் வந்து சேர்ந்துள்ளது என்பதை, இந்த புத்தகத்தை படித்த போது உணர்ந்தேன். இயற்கை எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு இந்த புத்தகம்.

சுயமுன்னேற்ற புத்தகம் என்றாலே.. உற்சாகமான வார்த்தைகளும், அட்டவணைகளும் , போலியான தன்னம்பிக்கை மொழிகளும் நிறைந்து பிரமாண்டமான ஒரு பொய் பிம்பத்தை நம் கண்முன் காட்சிகளாய் விரிக்கும். அது போன்ற பொய் பிம்பங்கள் ஏதுமின்றி.. உண்மையான தடைகளைத் தாண்டிய இருபத்தைந்து நிகழ்வுகளின் தொகுப்பே இந்த "நீ இன்றி அமையாது உலகு". அந்த 25 ல் கழுகும் , எறும்பும் அடக்கம் என்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு.

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளை கண்டு "ச்சை.. என்ன வாழ்க்கைடா இது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது" போன்ற வார்த்தைகளைச் சொல்லி துவண்டு போய் உட்கார்ந்து இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். இந்த புத்தகத்தில் இடம் பெற்றவர்களுக்கு வந்த தடைகளும், துயரங்களும், கஷ்டங்களும் நாம் கனவில் கூட நினைக்காதவைகள். அவைகளுக்கு முன், நம் கஷ்டங்கள் அத்தனையும் காற்றில் பறக்கும் தூசுகள்தான்.

இதில் சொல்லப் பெற்றுள்ள கழுகின் வாழ்க்கை, ஒவ்வொரு பெற்றோர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறை. இது சுயமுன்னேற்ற நூல் அல்ல... நம் வாழ்க்கையை தலைநிமிரச் செய்யும் வழிகாட்டி நூல்.

மொத்தத்தில் இந்த நூல் "you are the creator of your own destiny " என்ற ஸ்வாமி விவேகானந்தர் கூற்றின் சாரம்.

✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு