காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்
காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன் இயற்கையின் அதியற்புத காட்சிகளை, நிசப்தம் பூத்து நிற்க்கும் பள்ளதாக்குகளையும் பார்க்காமல் உலகத்திலிருந்து விடை பெறுவதென்பது பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்வது போன்றது தான் -எஸ்.ராமகிருஷ்ணன்(துணையெழுத்து) மேலே உள்ள துணையெழுத்தின் வரிகள் தான் என்னை என் தலையெழுத்தை மாற்றி வேறு ஒரு பாதையில் பயணம் செய்ய முயற்சிகளை எடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சரியான புத்தகம், ஒரு சரியான நாளில், ஒரு சரியான சூழலில், உன்னை தேர்ந்தெடுக்கும் என யாரோ எழுதியதை படித்திருக்கிறேன் ஆனால் தொடர் அரசியல், வரலாறு அதை சார்ந்த வாசிப்பினால் இறுகி உறங்கி போய் இருந்த எனது இனிய நினைவுகளை தட்டி எழுப்பிக் காற்றில் பறக்கும் தாத்தா பூச்சிப் போல மென்மையாக்க ஒரு சரியான சூழலிலும் ஒரு சரியான நாளிலும் தோழி இந்துமதி கணேஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு பரிசாக அனுப்பப்பட்ட பொத்தகமே இ...