காமத்திலிருந்து கடவுளுக்கு... (ஓஷோ
வாசிப்பு 22 காமத்திலிருந்து கடவுளுக்கு... (ஓஷோ) ஓஷோ இந்தப் பெயரை கேட்டாலே சிலருக்கு புருவங்கள் உயரும், பலருக்கு முகம் அஷ்டகோணலாகச் சுருங்கும். "செக்ஸ் சாமியார்" என்று மதச்சாமியார்களால் முத்திரை குத்தப்பட்டு, உலகநாடுகள் பலவற்றில் இவருக்கு விசா மறுக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம், இதோ நான் இரண்டாவது முறையாக சுவாசித்து முடித்து இருக்கும், "காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற அதிஅற்புதமான வாழ்வின் உண்மையான வழிகாட்டி நூல். 2012-ம் ஆண்டு அப்போது எனக்கிருந்த புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையே ஒரே நண்பர், Bala murugan (Bala) என்பவரால்தான் இந்த புத்தகம் எனக்கு அறிமுகமானது. ஆனால், இரண்டு ஆண்டுகள் தேடியும் கிடைக்காமல், (அப்பொழுது இணையத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம் இல்லை) ஒரு வழியாக 2015-ஆம் ஆண்டு என் கையில் வந்தது இந்த பொக்கிஷம். நான் இதை வாங்கிய கடையில் இருந்த அக்காவும் சரி, இந்த புத்தகத்தை கையில் வைத்த இருந்தபோது என்னைப் பார்த்த, என்னுடன் வேலை செய்த பெண்களும் சரி, என்னை ஒரு மாதிரியான அருவருப்பான பார்வையில் பார்த்தார்கள். அதற்கான காரணம், காமம் என்ற தலைப்பு. ஆ...