ஹிட்லர் (ஆதி முதல் அந்தரங்கம் வரை சொல்லப்படாத சரித்திரம்) - முகில்
வாசிப்பு 10
ஹிட்லர் (ஆதி முதல் அந்தரங்கம் வரை சொல்லப்படாத சரித்திரம்) - முகில்
ஹிட்லரைப் பற்றி இப்படி ஒரு சரித்திர நூல் இதற்கு முன் வந்துள்ளதா? கண்டிப்பாக இல்லை. அதுவும் தமிழில், சத்தியமாக வாய்ப்பே இல்லை ராஜா.
ஹிட்லரின் வரலாறை அவரிடமிருந்து தொடங்காமல், ஜெர்மனியின் ஆதி காலத்தில்.. அதாவது, கிமுவில் இருந்து பிள்ளையார் சுழி போடுகிறது இந்த புத்தகம். ஹிட்லர் என்ற ஒருவரைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவரின் குடும்பம், நண்பர்கள், காதலிகள், ஓவிய திறமை, வாசித்த புத்தகங்கள், பார்த்து ரசித்த நாடகங்கள், ஏன் அவரைச் சுற்றி உள்ள அனைவரைப் பற்றியும் புகைப்படங்களுடனும், அங்கங்கே.. நகைசுவையுடனும் விரிவாக விளக்குகிறார் முகில்.
தனி மனித வரலாறு போல அல்லாமல் ஒரு நாட்டின் வரலாறு போல, ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிகச் சிறப்பாக செதுக்கி உள்ளார் ஆசிரியர்.
ஒட்டுமொத்த உலகமே ஒன்று சேர்ந்து ஜெர்மனியை குற்றவாளி என்று கூண்டிலேற்றி, மானபங்கப்படுத்தி, அது மீண்டும் எழவே முடியாதபடி அழித்தொழிக்க முயன்ற நிலையில்தான் அங்கே ஒரு சர்வாதிகாரிக்கான தேவையும் உருவானது.
அப்படி ஒரு சர்வதிகாரியான ஹிட்லரின் அறிமுகத்தை இப்படி யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள்.
/"இடம், Gasthof zum Pommer என்ற ஆஸ்திரிய நாட்டின் சிற்றூர். ஆண்டு 1889.
மாதம் ஏப்ரல். நாள் 20. நேரம் மாலை 6.30.
லக்னம் - துலாம். ராசி - தனுசு. நட்சத்திரம்
- பூராடம். ஏழில் குரு , உடன் கேதுவும் சந்திரனும். கிளாரா என்ற அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருந்தது
ஆண் குழந்தை./
இப்படி ஒரு அறிமுகத்தை எங்கேயாவது கேட்டுள்ளீர்களா? நல்ல வேலையாக ஹிட்லர் இறந்த உடன் "ஓம் நம:பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே" என மந்திரம் ஓதி திவசம் பண்ணவில்லை🤣🤣
"வட்டத்தின் நீள்வட்டத்துக்கும் இடைப் பட்ட திட்பமான முகம். ஒளியின் மொழியை விளிக்கும் வியத்தகு நீல விழிகள். வெல்வெட் புல்வெளியென புருவங்கள். கூராக இல்லாமலேயே பதம் பார்க்கும் நாசி. கடற்பஞ்சுக் கன்னங்கள்.
பூவிதழ் காதுகள். குழந்தைத்தனம் குடி கொண்ட இதழ்கள். இதுவல்லவோ என்று எடுத்துக்காட்டும் அழகென அளவான கழுத்து. அலைபாய்ந்தால் காற்றும் போதையில் தள்ளாடும் என்பதால் பண் வைத்து அலங்கரிக்கப்பட்ட கூந்தல். ஸ்வரங்கள் பத்தென நடனமாடிச் சொல்லும் கயல்மிகு கை விரல்கள் மென்மையையும், நளினத்தின் மேன்மையையும், அழகின் உண்மையையும், பருவத்தின் தின்மையையும் கலந்து செய்த ஏனைய அங்கங்கள். அதுவும் அந்த வளைவுகளிலும் நெளிவுகளிலும்...." இவை ஹிட்லரின் முதல் காதலியான ஸ்டெஃபானி பற்றிய முகில் அவர்களின் வர்ணிப்பு. (ஹிட்லர் கூட இந்த அளவுக்கு தன் காதலியை வர்ணித்து இருக்க மாட்டார். நல்லவேளை அவர் தற்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், உங்களை வதை கூடத்திற்கு அழைத்துச் சென்று விஷவாயுவை பரிசளித்திருப்பார் தப்பித்தீர்கள்)
ஹிட்லரும் எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை. 32 வயதில் 16 வயது பெண்ணுடன் அவர் செய்யும் காதல் லீலைகளைப் படிக்கும், ஒவ்வொரு singleஸையும் சிட்டிசன் அஜித்குமார் styleலில் "ஏலே ஹிட்லர் ரே என் வகுறு எரியுதுலே" என மனம் நொந்து சொல்ல வைத்துவிடுகிறார். ஹிட்லரைச் சூழ்ந்த பிறதோஷங்களில் singles-ன் சாப தோஷமும் சூழ்ந்து கொண்டதால்தான் என்னவோ அவர் தற்கொலை செய்து கொண்டார் போல.. அதையும் ஜோடியாகத்தான் செய்துள்ளார் மனுஷன்🤔
உலகத்தையே அடக்கி யூத இனப் படுகொலை செய்தவர், ஒரு புத்தக வாசிப்பாளர் மற்றும் ஓவியர் என்று அறிந்தவுடன் வியப்பின் உச்சிக்கே சென்றுவந்த உணர்வு. வாசிப்பு என்பது ஒரு மனிதனின் சிந்தனையை தூண்டுகிறது என்பதற்க்கு ஹிட்லர் ஒரு உதாரணம். ஒரு எழுத்தாளனால் வாசிப்பவர்கள் உள்ளத்தில் தன் எண்ணங்களை விதைக்க முடியும், என்பதை நிருபித்து உள்ளார் "கார்ல் மே" என்ற ஜெர்மனிய எழுத்தாளர். இவர்தான் தன் "oldshattghand" என்ற கற்பனை கதாப்பாத்திரம் மூலம் ஹிட்லர்க்குள் இனவெறியை விதைத்தவர்.
என்னதான் ஒருவன் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும், அவன் அறிமுகப்படுத்திய புதுமைகள் காலம்கடந்தும் பின்பற்றப்படும். அப்படி ஹிட்லர் செய்த புதுமை என்னவென்றால், விமானத்தில் பறந்து சென்று பிரசாரம் செய்த முதல் அரசியல்வாதி ஹிட்லர்தான். சொல்லப்போனால், இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் பிரசார உத்திகள் பலவும் ஹிட்லர் அறிமுகப்படுத்தியவைதான்!
முகில் அவர்கள் இந்த புத்தகத்தில் ஒருவகையில் என்னை ஏமாற்றி விட்டார் என்றுதான் கூற வேண்டும். ஹிட்லருடன் இருந்ததாக சொல்லப்படும் தமிழர் செண்பகராமன் பிள்ளை, நேதாஜி ஹிட்லர் சந்திப்பு போன்ற நான் எதிர்பார்த்து இருந்தவற்றைப் பற்றி ஒரு வார்த்தைகூட இந்த புத்தகத்தில் சொல்லப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கின்றது.
History என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து உருவாகிறது. அதன் அர்த்தம் கடந்த காலத்தை புலனாய்வு செய்வதாகும். அதை திறமையாக நாம் இதுவரை பார்க்காத புகைப்படங்களுடன் செய்துள்ளார் ஆசிரியர் முகில் அவர்கள்.
✍️ கோடி

Comments
Post a Comment