Posts

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

Image
 வாசிப்பு 59 யார் பாஜக 'பி' டீம் -  இடும்பாவனம் கார்த்திக் அரசியல் என்பதின் விரிவாக்கம் அறம் + இயல் என்பதாகும்.ஆனால்  வாதத்தில் தோற்றவன், அவதூறை கையில் எடுக்கிறான் என்னும் முதுமொழிக்கு ஏற்ப நடைமுறையில் அது அவதூறு இயலாக மாறி நிற்கிறது கூடவே ஆபாச சொற்களும் அதன் உடன்  கை கோர்த்து கொள்கிறது . உண்மையில் இதன்  தொடக்க வேரை தேடி பயணம் செய்தால் அது முத்தமிழ் வித்தவர் மன்னிக்கவும் வித்தகர் கலைஞர் மு.கருணாநிதி இடமே போய் நிற்கிறது காமராஜர் முதல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வரை இவர் அவதூறு பரப்பாத ஆட்களே இல்லை எனலாம். வார்த்தை ஜாலம் என்னும் போர்வையில் இவர் பேசாத சொற்களும் இல்லை உண்மையில்  திராவிடம் என்னும் பெயரை போலவே இது ஆரியத்திடம் இருந்து கற்றுக்கொண்ட திராவிட தந்திர பாடம் ஆகும். ஆரியர்கள் பொதுவாக தமிழ்நாட்டு கடவுள்களை தங்களுக்குள் ஈர்த்து செறித்து விடுவார்வார்கள் முடியவில்லை என்றால் ஆபாச புராண கதைகள் மூலம்  அந்த கடவுள்களை கீழ்மைப்படுத்தி அந்த கடவுளை வணங்கிய தமிழர்கள் மூலமாகவே ஒதிக்கி வைக்க செய்து விடுவார்கள். இந்திரன் முதற்கொண்டு அந்த தந்திரத்துக்கு இரையாகி போன தமிழ் கட...

விதை அரசியல் - பாமயன்

Image
  வாசிப்பு 58 விதை அரசியல்  - பாமயன் சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது.  - ஜப்பானிய வேளாண்மை அறிஞர் - மசனாபு ஃபுக்கோகா இங்கே நான் குறிப்பிட இருக்கும் விடயங்களை தாண்டி இந்த பொத்தகத்தில் சொல்லப்பட்டவை ஏராளம். அவை மிக அதிர்ச்சியானதும் கூட.  இந்த நிலைக்கு வணிகமோ, அரசியல்வாதிகளோ, தவறான ஆராய்ச்சிகளோ மட்டும் காரணம் அல்ல நாமும் நம் அலட்சியமும் இங்கே முக்கியமான காரணங்கள். இந்த பொத்தகத்திற்கு கிடுக்கம் எழுத குறிப்பு எடுப்பதற்காக வேறு யாராவது இந்த பொத்தகத்தை பற்றி எழுதி உள்ளார்களா என்று இணையத்திலும் முகநூலிலும் தேடும் போது மிகவும்   அயற்சிக்கு உள்ளானேன். இந்த பொத்தகத்தை பற்றி  ஒருவர் கூட எழுதவில்லை. இயற்கையை ரசிக்கிறோம் .கவிதை புனைகிறோம், கட்டுரை வரைகிறோம் ஆனால் அந்த இயற்கையையும்  அதற்கு இருக்கும்   ஆபத்துகளையும்  அதை தடுக்கும் நுண்ணறிவுளையும்  படிக்கவும் எழுதவும் நாம் பெரும்பாலும் தவறுகிறோம் அல்லது விரும்புவது இல்லை.   இயற்கை வேளாண்மை  என்று சொல்லியவுட...

திருக்கார்த்தியல் - ராம் தங்கம்

Image
வாசிப்பு 57 திருக்கார்த்தியல் - ராம் தங்கம் அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்  தந்நோய்போற் போற்றாக் கடை. (குறள்  315) எனக்கு விருதுகள் மீது உள்ள நம்பிக்கை சரிந்து  அவற்றின் பெயர்கள், எண்ணிக்கை மறந்துப் போய் காலங்கள்  பல கடந்து விட்டது. அதற்கான காரணங்கள் அரசியல் பணம் தவிர வேறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ஒரு உண்மையான தரமான எழுத்துக்கோ , படைப்புக்கோ அல்லது சேவைக்கோ அல்லாமல் மேல் கூறப்பட்ட காரணங்களாகவோ அல்லது வெளிப்படாமல் மறைந்து  இருக்கும் வேறு காரணங்களாகவோ பெரும்பாலன விருதுகள் கொடுக்கப்பட்டு வருவதை சமீபத்திய விருது நிகழ்வுகள் உறுதிச் செய்கிறது விதிவிலக்காக கடும் இருட்டில் திடீரென தென்படும் மின்மினி பூச்சியின் வெளிச்சம் போல சில சமயங்களில் விருதுகள் சரியான படைப்புக்கும் , படைப்பாளிக்கும் , சேவைக்கும் கொடுக்கப்பட்டு விடுகிறது அதனின் தற்போதைய எடுத்துக்காட்டு தான் நண்பர் திரு.ராம் தங்கம் அவர்களின் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்புக்கு கிடைத்து இருக்கும் யுவ புரஸ்கார் விருது. விருது என்பது ஒரு படைப்பாளிக்கு பெருமையல்ல ஆனால் அந்த படைப்பு பலதரப்பட்ட மக்களிடம் ...

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

Image
வாசிப்பு 56 ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்  எல்லா  வித சான்றுகளும் இருந்தும் இந்த உலகத்தில் ஒரு இனத்தின்  வரலாறு எப்படி எல்லாம் மாற்றப்பட்டும், திரிக்கப்பட்டும் பொய்கள் திணிக்கப்பட்டும் அந்த  அந்த  இன மக்களையே   இழிவாக  நினைக்க வைக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் நடந்தது இல்லை .நடக்கவும் நடக்காது ஏன் என்றால் அங்கே ஒவ்வொரு மனிதனும் தன் வரலாறை தானே அறிந்து இருப்பான். ஆனால் இங்கே நம் இனத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் சொல்லிய பொய்களை  நம் வரலாறு என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். அதனால் தான் 65 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகளை நம் தமிழ் இனம் இழந்து நிற்கிறது . கிழடி போன்ற தமிழ் நாகரிகம் கொண்ட நிலங்களை பெரும் மக்கள் போராட்டம் செய்தே அகழாய்வு செய்ய வைக்க வேண்டிய தேவை உள்ளது. இழிவை தவிர வேற என்னடா இருக்கு?உன் வரலாற்றில் என்று கேட்கும் இந்த திரிபுவாதிகளிடம்  பதில் சொல்ல முடியாமல்  நாம் வாயடைத்து போக காரணம் என்ன ?  நமது வரலாறை மாற்றி பொய் கலந்து நம்மிடமே  வந்து திணிக்கும் ப...

அன்பின் மறைமொழி - கவிதா சுந்தர்

Image
 வாசிப்பு 55 அன்பின் மறைமொழி - கவிதா சுந்தர் பொதுவாக ஒரு பெயருக்கும் அவர்களின் நிலைக்கும் பொருத்தம் அமைவது என்பது சாத்தியம் அற்றது.ஆனால்  அரிதினும் அரிதாக சிலருக்கு அந்த பொருத்தம் கனகச்சிதமாக பொருந்தி போய் விடுகிறது .அந்த சிலரின் கவிதா வும் ஒருவர் என்பதை அவரின் "அன்பின் மறைமொழி" என்னும் இந்த கவிதை பொத்தகத்தை வாசிக்கும்  போது நான் உணர்ந்தேன்.  இது ஒரு கவிதை பொத்தகம் என்பதை விட மொழிபெயர்ப்பு பொத்தகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஏன் என்றால் யாராலும் விளக்கி விட முடியாத மனிதர்களின் உள்ளத்தில் இருக்கும் வலி நிறைந்த உணர்வுகள் கலந்த மறைமொழியே அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் தோழி கவிதா. ஒவ்வொரு வரிகளும் நம்மை நம் கடந்த காலத்திற்கும் காதலுக்கும் கூட்டி செல்கிறது.  நம் வைக்கும் அன்பின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும், செய்யப்படும் நிகரிப்புகளையும், கொடுக்கப்படும் ஏமாற்றங்களையும் அதனால் ஏற்பட்ட சொல்ல முடியாத ஏக்கங்களையும் கவிதாவின் வரிகள் நம் பின்னந்தலையில் தட்டி  உணர்த்தி விடுகிறது.  சில வரிகள் அடைப்பு நீங்கி திறக்...

ஆயில் ரேகை - பா.ராகவன்

Image
 வாசிப்பு 54 ஆயில் ரேகை - பா.ராகவன் இதுவரை நாம் அனைவரும் எத்தனையோ வரலாறுகளை படித்து இருப்போம்.மன்னர்கள் வரலாறு, அரசியல் வரலாறு, உணவு வரலாறு, கட்சிகள் வரலாறு மற்றும் தமிழர் வரலாறு.... இப்படி  நாம் படித்த வரலாறுகள் நீண்டு கொண்டே போகும் ஆனால் உலக வரலாற்றில் முதல் முறையாக ஐயா.பா.ராகவன் அவர்கள்  ஒரு பூதத்தின் வரலாறை எழுதி உள்ளார் அதுவும் கிணறு வெட்ட கிளம்பிய பூதம்.நமது ஆயுளின் பாதியே இரையாக கேட்கும் இந்த பூதத்தின் கதையே சொல்லும் பா.ரா எழுதிய வரலாற்று பொத்தகத்தின் தலைப்பு "ஆயில் ரேகை" திரு.கமல்ஹாசன் நடித்த "அலாவுதீன் அற்புத விளக்கு" என்னும் திரைப்படத்தில் விளக்கில் இருந்து வெளியே வந்த பூதத்தினிடம் கேட்பதாக ஒரு வசனம் வரும் " இந்த மோதிரத்தில் இருப்பவன் யார் ? அதற்கு பூதம் சொல்லும் " அவன் இம்ரான் சின்ன பையன் நான் அவனை விட ஏழு கடல்களுக்கு அப்பால் இருக்கும்  பூத உலகின் சக்கரவர்த்தி" இப்படியாக தங்கத்தை விட மதிப்பு மிகுந்ததாக  இருக்கிறது இந்த வழுவழுப்பான பூதம் . தங்கத்தை கூட வேண்டாம் என்று சொல்லி விடலாம் ஏன் பயன்படுத்தாமல் கூட இருந்து விட முடியும் ஆனால்  ஆயிலை நமத...

காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்

Image
 காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன் இயற்கையின் அதியற்புத காட்சிகளை, நிசப்தம் பூத்து நிற்க்கும் பள்ளதாக்குகளையும் பார்க்காமல் உலகத்திலிருந்து விடை பெறுவதென்பது பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்வது போன்றது தான்                                                 -எஸ்.ராமகிருஷ்ணன்(துணையெழுத்து) மேலே உள்ள துணையெழுத்தின் வரிகள் தான் என்னை  என் தலையெழுத்தை மாற்றி வேறு ஒரு பாதையில் பயணம் செய்ய  முயற்சிகளை எடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.  ஒரு சரியான புத்தகம், ஒரு சரியான நாளில், ஒரு சரியான சூழலில், உன்னை தேர்ந்தெடுக்கும் என யாரோ எழுதியதை படித்திருக்கிறேன் ஆனால் தொடர் அரசியல், வரலாறு அதை சார்ந்த வாசிப்பினால் இறுகி  உறங்கி போய் இருந்த எனது இனிய நினைவுகளை தட்டி எழுப்பிக் காற்றில் பறக்கும் தாத்தா பூச்சிப் போல மென்மையாக்க ஒரு சரியான சூழலிலும்  ஒரு சரியான நாளிலும் தோழி இந்துமதி கணேஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு பரிசாக அனுப்பப்பட்ட பொத்தகமே இ...

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு

Image
வாசிப்பு 52 மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு நான் ஏன் பெரியாரை எதிர்க்கிறேன்?  திராவிடத்தால்,    நான் ஏன் திராவிடத்தை வெறுக்கிறேன்?  திராவிடவாதிகளால்,    திராவிடர்களை நான் வெறுக்க காரணம் என்ன ? எட்டுத்திக்கும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, அவன் இல்லை என்றால் புல் புண்டுகள் கூட முளைக்காது, அவனால் தான் உலகமே இயங்குகிறது என்ற ஆரிய கோட்பாட்டை அப்டியே பெரியாருக்கு பொருத்தி அந்த கிழவன் இல்லை என்றால் நீங்கள் அடிமையாக தான் இருந்து இருப்பீர்கள் .கல்வி கற்று இருக்க முடியாது அவர் இல்லை என்றால் நிங்கள் உள்ளாடையே கூட அணிந்து இருக்க முடியாது போன்று இவர்கள் கட்டிய பொய் பிம்ப நெடு சாலைகளால் மெய்யான பல ஒற்றையடி பாதைகள் தன் அடையாளம் இழந்து போனது ஐயா. இரட்டைமலை சீனிவாசன், ஐயா. ஈழத்து சிவானந்த அடிகள், ஐயா. சிங்காரவேலர், மா.பொ. சி, மறைமலை அடிகளார் அவர் மகன் மறை.திருநாவுக்கரசு  போன்றவர்கள் அந்த ஒற்றையடி பாதைகள் அந்த பாதைகளின் வரிசையில் தமிழர்களின் பார்வையில் இருந்து திராவிடர்களால் முற்றிலும் மறைக்க பட்ட பாதை தான் பெருந்தமிழர் டாக்டர். ப.சு...

படைவீடு - தமிழ்மகன்

Image
 வாசிப்பு 51 படைவீடு - தமிழ்மகன் முதலில் இந்தப் பொத்தகத்தின் ஆசிரியர் திரு.தமிழ்மகன்  அவர்களுக்கு எனது இரண்டு பாராட்டுகளும் வாழ்த்துகளும் .ஆரிய திராவிடத்தால் மறைக்கப்பட்டுச் சொல்ல மறுக்கப்பட்டு தமிழர்கள் மறந்துப் போன தமிழகத்தின் கடைசி தமிழ் மன்னர்களின்  வரலாற்றை களாய்வு செய்து  மீட்டு எடுத்து இந்த நாவல் மூலம் பதிவு செய்தமைக்கு ஒன்று. ஒரு வரலாற்று நாவல் என்றால் அதிக கற்பனைகளும் புனைவுகளும் , எதுகை மோனை சொற்களும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் கொண்டை ஊசி திருப்புமுனைகளும் அங்கே அங்கே உண்மை வரலாற்று சம்பவங்களை துளி துளியாக தூவ வேண்டும் என்ற வழக்கமான விதிமுறைகளை உடைத்து அங்கே அங்கே  கற்பனையேப் புள்ளியாக வைத்து ஒரு வரலாற்று  நாவலை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் உண்மை வரலாறாகவே எழுதியதற்கு மற்றுமொரு  பாராட்டுகளும் வாழ்த்துகளும் தமிழர்களின் வரலாறு இரண்டு விதமாக இருக்கிறது ஒன்று வாழ்ந்த வரலாறு இன்னொன்று வீழ்ந்த வரலாறு. இவற்றில் பெரும்பாலும் அனைவராலும் அறியப்படுவது தமிழர்கள் வாழ்ந்த வரலாறு தான்.  சேர,சோழ, பாண்டிய வரலாறுகள் அந்த வகையே சார்ந்தது ஆனால் தமிழர்கள் வீழ்ந...

ஆங்கில மாயை - நலங்கிள்ளி

Image
 வாசிப்பு 50 ஆங்கில மாயை - நலங்கிள்ளி உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப்பழகுங்கள். பேசமுயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.' (விடுதலை அறிக்கை 27.1.1969) உலகத்தில்  எந்த ஒரு மொழிக்கும் வேறு ஒரு மொழி மேலானதோ  கிழனாதோ இல்லை எந்த மொழியும் அந்த அந்த மொழிக்கான தனித்துவமானச் சிறப்புகளை கொண்டது தான் அதை நம் தேவைக்காகக் கற்பதும் பயன்படுத்துவதும் தவறு இல்லை. ஆனால் உன் மொழியில் ஒன்றுமே இல்லை, அது ஒரு காட்டுமிராண்டி மொழி.  அதனால் அந்த மொழியே விட்டு வேறு ஒரு மொழியே கற்றுக்கொண்டு அதையே உங்கள் மொழியாக மாற்றிக் கொள்ளுங்கள்  என்று சொல்லும் போது அதை எதிர்த்து என் மொழியில் இதெல்லாம் இருக்கிறது.அதெல்லாம் உன் மொழியில் இருக்கிறதா என்று கேள்வி கேட்பது  மொழி வெறி அல்ல. அது தாயை காப்பதுப் போல தாய்நாட்டை காப்பது போல, தன் தாய்மொழியை காப்பது கடமையாகும். அப்படி பல கேள்விகளுடன் திரு. நலங்கிள்ளி அவர்களால் எழுதப்பட்டது தான் இந்த ஆங்கில மாயை பொத்தகம் ஆங்கிலமே சிறந்த மொழி தமிழை விட்...