மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு
வாசிப்பு 52
மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு
நான் ஏன் பெரியாரை எதிர்க்கிறேன்?
திராவிடத்தால்,
நான் ஏன் திராவிடத்தை வெறுக்கிறேன்?
திராவிடவாதிகளால்,
திராவிடர்களை நான் வெறுக்க காரணம் என்ன ?
எட்டுத்திக்கும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, அவன் இல்லை என்றால் புல் புண்டுகள் கூட முளைக்காது, அவனால் தான் உலகமே இயங்குகிறது என்ற ஆரிய கோட்பாட்டை அப்டியே பெரியாருக்கு பொருத்தி அந்த கிழவன் இல்லை என்றால் நீங்கள் அடிமையாக தான் இருந்து இருப்பீர்கள் .கல்வி கற்று இருக்க முடியாது அவர் இல்லை என்றால் நிங்கள் உள்ளாடையே கூட அணிந்து இருக்க முடியாது போன்று இவர்கள் கட்டிய பொய் பிம்ப நெடு சாலைகளால் மெய்யான பல ஒற்றையடி பாதைகள் தன் அடையாளம் இழந்து போனது
ஐயா. இரட்டைமலை சீனிவாசன், ஐயா. ஈழத்து சிவானந்த அடிகள், ஐயா. சிங்காரவேலர், மா.பொ. சி, மறைமலை அடிகளார் அவர் மகன் மறை.திருநாவுக்கரசு போன்றவர்கள் அந்த ஒற்றையடி பாதைகள் அந்த பாதைகளின் வரிசையில் தமிழர்களின் பார்வையில் இருந்து திராவிடர்களால் முற்றிலும் மறைக்க பட்ட பாதை தான் பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன்
யார் இந்த டாக்டர். ப.சுப்பராயன்?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அகன்ற சென்னை மாநிலத்தில் ஆந்திரத் தெலுங்கர்களின் அரசியல் ஆதிக்கம் நிலவியபோது, முதல் முதலாக ஒரு தமிழர் முதலமைச்சர் ஆனார்! அவர்தாம் டாக்டர் ப. சுப்பராயன் அவர் 4.12.1926 முதல் 27.10.1930 வரை முதலமைச்சராக இருந்து பல சாதனைகளை முதல் முதலாக நிகழ்த்தினார்.
அவர் கட்சி சார்பற்ற, தற்சார்பு சுயேச்சை) அமைச்சரவையின் முதலமைச்சர். அவருடைய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தோர் - முத்தையா முதலியார், சேதுரத்தினம் ஐயர்!
அவரது அமைச்சரவைதான் சென்னை மாகாணத்தில் முதல் முதலாக முறைப்படுத்தப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றி செயல்படுத்தியது. இந்து சமய அறநிலையப் பாது காப்புச் சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது; இந்தியாவிலேயே முதல் முறையாக சமூகநீதியுடன் கூடிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அமைக்கப்பட்டது. தீண்டாமை யை எதிர்த்துக் கடுமையான சட்டம் இயற்றினார். அரிசன ஆலய நுழைவுச் சட்டம் கொண்டு வந்தார். அவரே முன்னின்று ஒடுக்கப் பட்டோரின் கோயில் நுழைவு நிகழ்வை நடத்திக் காட்டினார். டாக்டர் சுப்பராயன் ஆங்கிலேய அரசால் ஏற்கப்பட்ட பெரும் ஜமீன்தார்! ஆனால், அவர்தாம் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தார். அக்காலத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வந்தார். அதனால் அப்போது அரசுக்கு 17 கோடி ரூபாய் இழப்பாம்!
இழுபறியாக இருந்த மேட்டூர் அணைத் திட்டத்தை 125 இலட்சம் ரூபாய் உபரி நிதி அளித்து, அதைத் தொடங்கச் செய்தார் முதலமைச்சர் சுப்பராயன்! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சுப்பராயன் ஆட்சிக்காலத்தில் தனிச்சட்டம் இயற்றப்பட்டு தொடங்கப் பட்டது.
மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர். பிற்காலத்தில் விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவின் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சுப்பராயன் திருவள்ளுவர், பாரதியார், உழவன் அஞ்சல் தலைகள் வெளியிட்டார். பணவிடைப் (மணி ஆர்டர்) படிவம் தமிழிலும் வெளிவரச் செய்தார். இன்னும் எத்தனை எத்தனையோ செய்துள்ளார்.
இந்த சுப்பராயனை இப்போதுள்ள தமிழர்களுக்குத் தெரியுமா? தெரியாது! இவற்றையெல்லாம் நீதிக்கட்சி ஆட்சி செய்தது; ஆந்தி ரத்துப் பனகல் அரசர் எனப்படும் இராமராய நிங்கர் செய்தார் என்றல்லவா திராவிடக் கட்சிகள் பரப்புரை செய்து பாமரர் நெஞ்சிலும் பதியச் செய்துள்ளன!
திராவிடக் கட்சிகளால் மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் முழு வரலாற்றைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு - தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர் புலவர் செ. இராசு எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் சான்றுகளோடு எழுதியுள்ளார்.
இவரைப் போன்ற எண்ணற்ற தமிழர் தலைவர்கள் திராவிடத்தால் மறைக்கப்பட்டும் மறக்கடிக்கப்பட்டும் உள்ளார்கள் அவர்களை வரலாற்று தேடலுடன் கூடிய வாசிப்பைக் கொண்டு நாம் மீட்போம்
வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது!
வரலாறு நமக்குப் பழம்பெருமை அல்ல... படிப்பினை!
💪கோடி

Comments
Post a Comment