படைவீடு - தமிழ்மகன்
வாசிப்பு 51
படைவீடு - தமிழ்மகன்
முதலில் இந்தப் பொத்தகத்தின் ஆசிரியர் திரு.தமிழ்மகன் அவர்களுக்கு எனது இரண்டு பாராட்டுகளும் வாழ்த்துகளும் .ஆரிய திராவிடத்தால் மறைக்கப்பட்டுச் சொல்ல மறுக்கப்பட்டு தமிழர்கள் மறந்துப் போன தமிழகத்தின் கடைசி தமிழ் மன்னர்களின் வரலாற்றை களாய்வு செய்து மீட்டு எடுத்து இந்த நாவல் மூலம் பதிவு செய்தமைக்கு ஒன்று. ஒரு வரலாற்று நாவல் என்றால் அதிக கற்பனைகளும் புனைவுகளும் , எதுகை மோனை சொற்களும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் கொண்டை ஊசி திருப்புமுனைகளும் அங்கே அங்கே உண்மை வரலாற்று சம்பவங்களை துளி துளியாக தூவ வேண்டும் என்ற வழக்கமான விதிமுறைகளை உடைத்து அங்கே அங்கே கற்பனையேப் புள்ளியாக வைத்து ஒரு வரலாற்று நாவலை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் உண்மை வரலாறாகவே எழுதியதற்கு மற்றுமொரு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழர்களின் வரலாறு இரண்டு விதமாக இருக்கிறது ஒன்று வாழ்ந்த வரலாறு இன்னொன்று வீழ்ந்த வரலாறு. இவற்றில் பெரும்பாலும் அனைவராலும் அறியப்படுவது தமிழர்கள் வாழ்ந்த வரலாறு தான். சேர,சோழ, பாண்டிய வரலாறுகள் அந்த வகையே சார்ந்தது ஆனால் தமிழர்கள் வீழ்ந்த வரலாறை யாரும் அறிந்து இருக்கவில்லை காரணம் பலவாக இருந்தாலும் மிக முக்கியமான காரணம் அவைகள் வேண்டும் என்றே மறைக்க பட்டது தான் அதனால் இதை மறைக்கப்பட்ட வரலாறு என மூன்றாவது வகையாகவும் சொல்லலாம் .
கிட்டத்தட்ட 13ஆம் நூற்றாண்டோடு மூவேந்தர்களின் ஆட்சிக்காலம் தமிழகத்தில் முடிவு பெற்றது அதன் பிறகு 15 மற்றும் 16 நூற்றாண்டுகளில் விஜயநகரம் மற்றும் நாயக்கர் ஆட்சிகள் தமிழகத்தில் நடைபெற்றது அதன் பிறகு மராத்தியர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்தார்கள். இவற்றுக்கெல்லாம் இடைப்பட்ட காலம் ஒன்று உண்டு அது 14ஆம் நூற்றாண்டு அந்த நூற்றாண்டில் யார் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள் அவர்களின் ஆட்சி எப்படி இருந்தது அவர்கள் நிலை என்னவானது என்னும் உண்மை வரலாறை ஒரு நாவலாக திரு.தமிழ்மகன் அவர்கள் எழுதி இருப்பதே... மன்னிக்கவும் ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்து இருப்பதே இந்த படைவீடு.
மூவேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தைக் காக்கும் பொறுப்பு படைவீடு கட்டி ஆண்டு வரும் சம்புவராயர் என்னும் தமிழ் பேரராசிடம் வருகிறது. அதே சமயத்தில் சுல்தானிய தளபதியான மாலிக் கபூரும் தமிழகத்திற்கு படையெடுத்து கோவிலில் கொள்ளையடித்து செல்ல வருகிறான்.அவனிடம் இருந்து நாட்டை காக்க சிற்றரசர்களை கூட்டணி சேர்த்து படை திரட்டி அவனை எதிர்க்க இளவரசர் ஏகாம்பரநாதர் ஒவ்வொரு ஊராக பயணம் செய்வதிலிருந்து நாவல் தொடங்குகிறது.
அறமும் சமூக நீதியும் கொண்டு செயல்பட்ட அவர்களின் ஆட்சி எவ்வாறு இருந்தது? அன்று நிலவிய இடக்கை வலக்கை பிரச்சனைகளுக்கு சம்புவராயர்கள் கொடுத்த தீர்வு என்ன? மதுரை சுல்தானுக்கு அஞ்சி படைவீடு தேடி வந்த மக்களுக்கு அவர்கள் செய்த நற்பணிகள் என்ன?போன்ற நிகழ்வுகளை எல்லாம் தக்க கல்வெட்டு சான்றுகளுடன் இந்தப் பொத்தகத்தில் பதிவு செய்கிறார் திரு. தமிழ்மகன்
வர்ணசிரமத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை வெறுத்து ஒதுக்கும் சம்புவராய பேரரசு மீது அதே வர்ணசிரமத்தையும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் படிநிலையும் கொண்டு சிருங்கேரி சங்கரச்சரையாரான வித்யாரண்யர் ஹரிஹர, புக்கரை கொண்டு உருவாக்கிய விஜயநகர பேரரசு போர் எடுத்து வருகிறது அது வெறும் நாடு பிடிக்கும் போர் அல்ல.மொழி மற்றும் பண்பாட்டு போர் தமிழகத்தின் வரலாறையும் எதிர்காலத்தையும் மாற்றி அமைத்த போர் . அந்த போரினால் தமிழனுக்கு ஏற்பட்ட விளைவுகளின் எதிரொலி இப்போதும் இந்த 2022 லும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அன்று இழந்த தமிழகத்தின் நம் அதிகாரம் இன்னும் அவர்கள் கையிலே இருக்கிறது. அதை எப்போது மீட்டு எடுக்க போகிறோம்? அதை மீட்டு எடுத்து அடைவதே நமது கடைசி தமிழ் மன்னர்களான சம்புவரயர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்
இந்த நாவலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதில் யாரும் கதாநாயகன் அல்ல எந்த ஒரு கதாபாத்திரமும் மிகைப்படுத்தப்படவில்லை . தொடர்ந்து வர வேண்டும் என்று எதுவும் வலிந்து இழுக்கப்படவில்லை. காரணம் இதில் உண்மைகள் மட்டுமே கதாநாயகனாக அரியாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறது
இந்த நாவல் ஒன்றும் பொன்னியின் செல்வனோ , வேள்பாரியோ அல்ல தலையில் தூக்கி வைத்து பூரித்து போய் கொண்டாட! ஒவ்வொரு தமிழர்களும் வாங்கிப் படித்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியே வரலாற்று ஆவண பொக்கிஷ சொத்து இந்தப் பொத்தகம்
தமிழ்மகன் பெயருக்கு ஏற்றப்போல் தாய்க்கு செய்ய வேண்டியக் கடமையே செவ்வனே செய்து முடித்து உள்ளார் . மீண்டும் அவருக்கு பாராட்டுகளும் & வாழ்த்துகளும்
இனம் ஒன்றவோம்!இலக்கை வென்றவோம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழர்! மலர்க தமிழ்த்தேசியம்
💪கோடி

Comments
Post a Comment