ஆங்கில மாயை - நலங்கிள்ளி

 வாசிப்பு 50


ஆங்கில மாயை - நலங்கிள்ளி






உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப்பழகுங்கள். பேசமுயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள். மனிதனாக வாழ முயலுங்கள்.' (விடுதலை அறிக்கை 27.1.1969)


உலகத்தில்  எந்த ஒரு மொழிக்கும் வேறு ஒரு மொழி மேலானதோ  கிழனாதோ இல்லை எந்த மொழியும் அந்த அந்த மொழிக்கான தனித்துவமானச் சிறப்புகளை கொண்டது தான் அதை நம் தேவைக்காகக் கற்பதும் பயன்படுத்துவதும் தவறு இல்லை. ஆனால் உன் மொழியில் ஒன்றுமே இல்லை, அது ஒரு காட்டுமிராண்டி மொழி.  அதனால் அந்த மொழியே விட்டு வேறு ஒரு மொழியே கற்றுக்கொண்டு அதையே உங்கள் மொழியாக மாற்றிக் கொள்ளுங்கள்  என்று சொல்லும் போது அதை எதிர்த்து என் மொழியில் இதெல்லாம் இருக்கிறது.அதெல்லாம் உன் மொழியில் இருக்கிறதா என்று கேள்வி கேட்பது  மொழி வெறி அல்ல. அது தாயை காப்பதுப் போல தாய்நாட்டை காப்பது போல, தன் தாய்மொழியை காப்பது கடமையாகும். அப்படி பல கேள்விகளுடன் திரு. நலங்கிள்ளி அவர்களால் எழுதப்பட்டது தான் இந்த ஆங்கில மாயை பொத்தகம்


ஆங்கிலமே சிறந்த மொழி தமிழை விட்டு ஒழியுங்கள் என்ற கூற்றை முன் வைப்பவர்கள்  அதற்காக மூன்று காரணங்களை முன் வைக்கிறார்கள்


1) ஆங்கிலம் சனநாயக மொழி

2) ஆங்கிலம் பெண்ணிய மொழி

3) ஆங்கிலம் அறிவியல் மொழி


இந்த  மூன்றையும் இந்த பொத்தகத்தின்  மூலம் நன்றாக துவைத்து வெளுத்து காயபோட்டு உள்ளார் ஆசிரியர் நலங்கிள்ளி 


1)ஆங்கிலம் சனநாயக மொழியா?


தமிழை போல மனிதரிடத்தில் சாதியை கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்காத சனநாயக மொழி ஆங்கிலம் என்று  ஆங்கிலத்தை முன் வைப்பவர்களால் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது.  இது உண்மையா என்றால் சாதி அழுக்குகள் தமிழில் படிந்திருப்பது உண்மையே.  ஆனால் அது தமிழில் மட்டும் தான் உண்டு ஆங்கிலத்தில் இல்லை என்பது கேள்விக்குரியது . முதலில் சாதி என்னும் அமைப்பே இல்லாத ஆங்கில நாடுகளில் சாதிக்குரிய குறியுடங்கள் எப்படி இருக்க முடியும்?  ஆங்கில நாடுகளில் சாதிவெறி இல்லையே தவிர ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி (racism) உண்டு. எனவே இயல்பாகவே அவர்களை வசைபாடுவதற்கான சொற்களும் மலையளவு உண்டு. அம்மக்களின் இயற்கையான கருமை நிறத்தையும், சுருள் முடியையும், தடித்த உதட்டையும், அகன்ற மூக்கையும் வைத்து வெள்ளையர்கள் செய்யும் பகடிகளுக்கு அளவே இல்லை. வெள்ளையர்களின் கேலிக்கு ஆசிய இனத்தவர் கூட தப்புவதில்லை. அந்த இழிசொற்கள் பட்டியலில் சிலவற்றைப் பாருங்கள்.


Teapot - தேநீர் காய்ச்சி வடிக்கும் சட்டி கன்னங்கரேல் என்றுதானே இருக்கும். வெள்ளை நிறவெறிக் கண்களுக்குக் கறுப்பின மக்களின் கருந்தேகம் தீச்சட்டி போன்று தெரிவதால் அவர்களை செய்கின்றனர். டீபாட் என நையாண்டி


Spoon-வெள்ளை நிறவெறியர்களுக்குக் கறுப்பர்களின் மூக்கு கரண்டி போன்று தெரிவதால் அவர்களை ஸ்பூன் எனப் பகடி செய்கின்றனர். அவர்கள் மூக்கை வைத்து vacuum cleaner என்று கூட வெள்ளையர் நையாண்டி செய்வதுண்டு. வேக்யும் க்ளீனர் எனப்படும் வீட்டைத் தூய்மைப்படுத்தும் கருவியில் குப்பைகளை உறிஞ்சும் குழாயின் முனையைப் போன்று அகண்டு இருக்கிறதாம் கறுப்பின மக்களின் மூக்கு!


Sooty-கறுப்பின மக்களைப் புகைக்கரியுடன் ஒப்பிட்டு ஆங்கிலேயர் பயன்படுத்தும் இனவெறிச் சொல்லே சூட்டி.


ஆங்கில உலகில் இந்த வசைச்சொல் பல நூற்றாண்டுகளாகக் கறுப்பின மக்களைக் குறித்து ஒலித்து வருகிறது.


ஷேக்ஸ்பியரின் ஒதல்லோ நாடகத்தில் டெஸ்டெமோனா என்னும் வெள்ளைக்காரியைக் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒதெல்லோ காதலிக்கிறான். அவள் தந்தை பார்பண்டியோ இதனால் சினமுற்று ஒதெல்லோவை சூட்டி என இழிவாகக் குறிப்பிடுகிறான் (ஒதெல்லோ, 1.2 பாடல் வரி: 69-70).


இதை போல பல நிறவெறியை கொண்டச் சொற்களை ஆசிரியர் இந்த பொத்தகத்தில் குறிப்பிடுகிறார்


2) ஆங்கிலம் பெண்ணிய மொழியா?


தமிழ் ஒரு ஆணாதிக்க மொழி , ஆங்கிலம் பெண்ணிய மொழி என்றும் அதனால் பெண்ணாடிமைத்தனத்திற்கு  அடிமையாக விளங்கும் தமிழ் இலக்கியங்களை கொளுத்த வேண்டும் என திராவிடியா... பெரியார் வழி சிந்தனையாளர்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பரப்புரை செய்து வருகிறார்கள், பெண்ணியம் எந்த சிக்கல் என்றாலும் அடிப்படுவது தமிழ் இலக்கியங்களே அப்போது  எல்லாம் ஆங்கில இலக்கியங்களை பற்றி எவரும் மூச்சு விடுவதில்லை அப்படியானால் பெண்ணியம் காக்கும் ஆயுதங்களா ஆங்கில இலக்கியங்கள்? என்று ஆயிக்கிறது இப்பொத்தகம்


தமிழ் மொழியில் போன்றே ஆங்கிலத்திலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஆணாதிக்கப் பழமொழிகளுக்குக் குறைவில்லை. ஆணாதிக்கப் பழமொழிகளை விளக்கும் அகராதிகளே ஆங்கிலத்தில் பல உண்டு. அந்த அகராதிகளிலிருந்து சில பழமொழிகளைப் பார்த்தால் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உங்களுக்குத் வேறுபாடே தெரியாது:  


A widow is a boat without a rudder துடுப்பில்லாப் படகு. விதவை ஒரு


A woman conceals what she knows not - பெண்ணிடம் தங்கும் இரகசியம் அவளுக்குத் தெரியாததே. 


To fear is womanish - அஞ்சுவது பெண்மை.


Trust not a woman when she weeps - அழும் பெண்ணைநம்பாதே.


A woman is to be from her house three times: when she is christened, married and buried - ஒரு பெண் 3 தருணங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்: திருமுழுக்காடு, திருமணம், இறப்பு.


A woman's answer is never to seek - தையல் சொல் கேளேல்,


A woman, a dog, and a walnut tree, the more you beat them the better they be- பெண், நாய், வாதாங்கொட்டை - மூன்றும் அடிக்க அடிக்கத்தான் சிறக்கும்.


He who follows his wife's advice will never see the face of god மனைவி சொல் கேட்பவன் கடவுள் முகம் காணால்.


When an ass climbs a ladder, we may find wisdom in a woman கழுதை ஏணி ஏறினால் பெண்ணிடம் அறிவைக் காணலாம். again


The unchaste women can never become chaste கற்பிழந்தவள் மீண்டும் கற்படைய மாட்டாள்.


A woman, a cat and a chimney should never leave the house பெண்ணும் பூனையும் அடுப்படியும் வீட்டை விட்டுப் போகா.


இது போல பெண்ணாடிமைத்தமான எண்ணற்ற சொற்களும் ஆங்கில இலக்கிய கதைகளும் ஆசிரியர் இந்த பொத்தகத்தில் பயன்படுத்தி உள்ளார். அதை எல்லாம் இந்த பொத்தக திறனாய்வில் எழுத முடியவில்லை முக்கியமாக பெண்ணைத் தேவடியாள் எனத் திட்டுவதற்கு ஆங்கிலத்தில் loose women , harlot, bicycle  என பல பெயர்கள் உண்டு, ஆனால் தேவடியாளக்கும் மிதிவண்டிக்கும் (bicycle) என்ன தொடர்பு என்று  ஆசிரியர் விளக்கும் போது இதை போய் பெண்ணியம் மொழி என்று எப்டி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது என வியந்து தான் போனேன். 


3) ஆங்கிலம் அறிவியல் மொழியா?


தமிழ் போல் மூட நம்பிக்கைகள் ஏதுமற்ற அறிவியல் மொழி ஆங்கிலம் என்ற பொய் நஞ்சு இந்த தமிழ் மண்ணில் வெற்றிகரமாக விதைக்கப்பட்டு உள்ளது. தமிழை சரியான தமிழ் சொற்களை பயன்படுத்தி பேசினால் பிற்போக்குவாதி என்றும் ஆங்கிலத்தை சரியான இலக்கணத்தோடு பேசவில்லை என்றால் அவன் முட்டாள் என்றும் சர்வசாதாரணமாக இந்த தமிழகத்தில் சொல்ல முடிகிறது ஆனால் சரியான பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்த்தோமானால் ஆங்கிலத்தை விட ஒரு அறிவிலிதனமான ஆபாசக் கருத்துக்களை உடைய மொழி இந்த உலகத்தில் எங்குமே இல்லை



தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் தை 1 அல்லது சித்திரை 1 வந்தால் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" எனக் கூறுபவர்கள், சனவரி 1 வந்தால் "ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்" என்பார்கள். உண்மையிலேயே இது ஆங்கிலப் புத்தாண்டுதானா? ஆங்கிலத்துக்கும் இந்த ஆண்டுமுறைக்கும் உண்மையில் தொடர்பேதும் உண்டா? பார்ப்போம்.


சனவரி தொடங்கி திசம்பர் வரையிலான மாதங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு பெயர்க் காரணம் உள்ளது. காட்டாகச் சில மாதங்களுக்குரிய பெயர்க் காரணத்தைக் காண்போம்.


சனவரி கடந்த காலம், எதிர் காலம் இரண்டையும் தன்னிரு தலைகளால் கண்காணிக்கும் ஜேனஸ் (Jatics) என்னும் கிரேக்க இறைவனின் பெயர் கொண்ட மாதம்.


பிப்ரவரி ஃபெபுரா (Febura) என்னும் ரோமானியத் திருவிழாவின் பெயர் கொண்ட மாதம். ஃபெபுரா என்றால் தூய்மையாக்கல் எனப் பொருள்.


மார்ச் - மார்ஸ் (Mars) என்னும் கிரேக்கப் போர் இறைவனின் பெயர் கொண்ட மாதம். ஏப்ரல் ஆஃப்ரோடைட்டி (Aphrodite) என்னும் கிரேக்கக் காதல் இறைவியின் பெயர் கொண்ட மாதம். மே- காடுகளை ஆளும் ஃபானஸ் (Faunus) என்னும் இறைவனின் மகளும், நெருப்பை ஆளும் வல்கன் (Vulcan) என்னும் இறைவனின் மனைவியுமாகிய மையா (Main) என்னும் இத்தாலிய இளவேனில் இறைவியின் பெயர்

கொண்ட மாதம்.


ஜூன் இறைவன்களின் அரசனாகிய தன் அண்ணன் ஜூபிடரை (Jupiter) மணமுடித்தவளும், இறைவிகளின் அரசியாகத் திகழ்ந்து பெண்களுக்குத் திருமணப்பேற்றை அருள்பவளுமான ஜூனோ (Juno) என்னும் ரோமானிய இறைவியின் பெயர் கொண்ட மாதம்.


இவ்வகையில் பார்த்தால், பெரும்பாலும் சனவரி முதல் திசம்பர் வரையிலான மாதங்கள் மூடநம்பிக்கைகளும் ஆபாசங்களும் நிறைந்த கிரேக்கப் புராணக் கதைகளின் அடிப்படையில் பெயர் கொண்டவையே. மாதங்களின் பெயர்களுங்கூட இலத்தீன்/கிரேக்க மொழிப் பெயர்களே. இந்த மாதங்களின் வரிசையே ஒரு காலத்தில் ரோமானியக் காலங்காட்டி (Romanian Calendar) என்றும், பின்னர் கிரேகாரியன் காலங்காட்டி (Gregorian calendar) என்றும் அழைக்கப்பட்டது. மாதங்களில் பெயர் காரணம் கூட பரவாயில்லை ஆனால் இந்த நாட்களின் பெயர் காரணம் இருக்கே அதை என்னால் எழுத முடியாது நீங்களே படித்துக் கொள்ளுங்கள்


மருத்துவமும் அதன் கருவிகளும் ஆங்கில நாடுகளில் உருவானதால் ஆங்கில மொழியே அறிவியல் மொழி என்று சொல்கிறோம் என்று சொல்பவர்களில் கவனத்திற்கு

தமிழக மருந்தகங்களின் விளம்பரப் பலகைகளில் ஆங்கில மருந்துக் கடை என்ற வாசகத்தைப் பார்த்திருப்போம். உண்மையிலேயே ஆங்கிலத்துக்கும் இந்த மருந்துகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? 'ஐரோப்பிய வரலாற்றில் காலங்காலமாகப்


பயன்படுத்தப்பட்டு வரும் மரபுசார் மருத்துவமுறையை அலோபதி மருத்துவம் என்று அழைப்பார்கள். இது ஐரோப்பாவின் பண்டைய மருத்துவமுறைக்குரிய பெயர்தான் என்றாலும், இந்த மருத்துவத்துக்கு இந்தப் பெயர் கிடைத்தது என்னவோ 19ஆம் நூற்றாண்டில்தான். இதை விட வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், ஓமியோபதி மருத்துவமுறையைக் கண்டுபிடித்த சாமுவெல் ஹைௗமேன் றவிகள் என்னும் ஜெர்மானிய மருத்துவர்தான் அலோபதி என்ற சொல்லையே புனைந்தவர் ஆவார். ஐரோப்பிய மருத்துவமுறையானது நோய் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு அல்லாது அவற்றிலிருந்து 'வேறுபட்ட' விளைவுகளுக்கு, அதாவது ஆரோக்கியமான பகுதிகளிலான விளைவுகளுக்குச் சிகிச்சையளிப்பதால் அதற்குக் கிரேக்க மொழியில் வேறுபட்ட (allo) நோய் (pathy) என்ற பொருளில் அலோபதி (allopathy) எனப் பெயரிட்டார் ஹைனமேன். இதற்கு மாறாக ஒரு நோயினை அதை ஒத்த நோயைக் கொண்டே சிகிச்சையளிக்கும் வகையில் தாம் கண்டுபிடித்த மருத்துவமுறைக்குக் கிரேக்க மொழியில் ஒத்த (homeo) நோய் (pathy) என்ற பொருளில் ஓமியோபதி (homeopathy) எனப் பெயரிட்டார்.


எனவே அலோபதி என்பது ஆங்கிலச் சொல்லுமன்று, ஆங்கிலம் தொடர்பான மருத்துவமுறையுமன்று. சொல்லப்போனால், ஆங்கிலம் என்னும் மொழி பிறப்பதற்கு முன்பிருந்தே ஐரோப்பியப் பண்பாட்டில் படிமலர்ச்சி அடைந்த ஒரு மருத்துவமுறை ஆகும். 


ஒரு மொழியில் படிந்து உள்ள ஏற்ற தாழ்வுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அந்த மொழி பொறுப்பாகாது . ஒரு வீடு  தூசியாக இருக்கும் போது அதை சுத்தப்படுத்தி சரி செய்வது தான் அறிவுடமையே தவிர அந்த வீட்டை இடித்து விட்டு பக்கது வீட்டுக்கு குடி போவது அறிவுடைமை ஆகாது அதே போல ஒரு மொழி அறிவியல் மொழியாக இல்லை என்றால் அதை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கு தான் பகுத்தறிவு தேவையே அன்றி அந்த மொழியே அழித்துவிட்டு வேறு மொழியே ஏற்றுக்கொள்ள பகுத்தறிவு தேவையில்லை. இது எப்படி பகுத்தறிவு பகலவனான தந்தை பெரியாருக்கு தெரியாமல் போனது என எனக்கு புரியவில்லை இதற்காக விடையே ஆசிரியர் இந்த பொத்தகத்தில் தந்து உள்ளார்  அவற்றில் இருந்து சில வரிங்ள்:



"தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றால், பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைத் தமிழ் ஈர்த்துக் கொண்டது எப்படி? இதற்குத் திருவள்ளுவர், சித்தர்கள் தொடங்கி

வள்ளலார் ஈறாகப் பலரின் அறிவுச் சிந்தனைகளையும் பல நூற்றாண்டாய்ச் சுமந்து கொண்டு தமிழ் தன்னை ஒரு முற்போக்கு மொழியாகப் பாதுகாத்து வந்துள்ளது ஓர் அடிப்படைக் காரணமல்லவா?


மூடநம்பிக்கைக் குப்பை என்று பெரியார் ஒதுக்கித் தள்ளிய தமிழ்தான் அவரது பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் அறிவுத் தேராகத் திகழ்ந்தது என்பதே உண்மை.


பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் தமிழ் அறிவுச் சுடர் வீசி ஒளிரத் தொடங்கியதும், அந்தப் பேரொளி பல்லாண்டாய்த் தமிழர் தம் மூளைகளில் மண்டிக் கிடந்த மூடநம்பிக்கைக் குப்பைகளைப் பொசுக்கி ஒரு பகுத்தறிவுப் புயலைத் தமிழகத்தில் வீசச் செய்ததும் தமிழின் பொற்காலம் எனலாம்.


அந்தக் காலக் கட்டத்தில் பெரியார் கொளுத்திய நாத்திகத் தீ சடுதியில் அறிவுப் பிழம்புகளாய்த் தமிழகத்தில் பற்றிப் படர்ந்ததற்கு அத்தீயின் எரியூட்டியாக மக்கள் மொழியாம் தமிழ் விளங்கியதுதானே காரணம்? அதேபோது நமக்கு அயல்மொழியாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்தியிருந்தால், ஓராயிரம் ஆண்டு கழிந்தாலும் அத்தீ அவர்களிடம் பற்றிப் படர்ந்திருக்குமா?


எனவே தமிழகத்தில் பகுத்தறிவு மணம் கமழ்ந்து பரவ முழுமுதற்காரணம் தமிழ்தான் என்றாலும், தமிழ் என்னும் அறிவுத் தேர் பெரியாரின் பெரும் பெரும் சிந்தனைகளையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லும் முழுத் தகுதியுடன் நிமிர்ந்து நின்றது என்றாலும், அறிவியலுக்குப் பெரியார் ஆங்கிலத்தையே நம்பினார்.


ஆம், தமிழ் பெரியாரை நம்பியது. பெரியார் தமிழை நம்பவில்லை."




உலகில் எம் மொழியும் கற்போம் நாம் வாழ நம் தாய் மொழி தமிழ் கற்போம் நம் இனம் வாழ


💪கோடி





Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு