ஆயில் ரேகை - பா.ராகவன்
வாசிப்பு 54
ஆயில் ரேகை - பா.ராகவன்
இதுவரை நாம் அனைவரும் எத்தனையோ வரலாறுகளை படித்து இருப்போம்.மன்னர்கள் வரலாறு, அரசியல் வரலாறு, உணவு வரலாறு, கட்சிகள் வரலாறு மற்றும் தமிழர் வரலாறு.... இப்படி நாம் படித்த வரலாறுகள் நீண்டு கொண்டே போகும் ஆனால் உலக வரலாற்றில் முதல் முறையாக ஐயா.பா.ராகவன் அவர்கள் ஒரு பூதத்தின் வரலாறை எழுதி உள்ளார் அதுவும் கிணறு வெட்ட கிளம்பிய பூதம்.நமது ஆயுளின் பாதியே இரையாக கேட்கும் இந்த பூதத்தின் கதையே சொல்லும் பா.ரா எழுதிய வரலாற்று பொத்தகத்தின் தலைப்பு "ஆயில் ரேகை"
திரு.கமல்ஹாசன் நடித்த "அலாவுதீன் அற்புத விளக்கு" என்னும் திரைப்படத்தில் விளக்கில் இருந்து வெளியே வந்த பூதத்தினிடம் கேட்பதாக ஒரு வசனம் வரும் " இந்த மோதிரத்தில் இருப்பவன் யார் ? அதற்கு பூதம் சொல்லும் " அவன் இம்ரான் சின்ன பையன் நான் அவனை விட ஏழு கடல்களுக்கு அப்பால் இருக்கும் பூத உலகின் சக்கரவர்த்தி"
இப்படியாக தங்கத்தை விட மதிப்பு மிகுந்ததாக இருக்கிறது இந்த வழுவழுப்பான பூதம் . தங்கத்தை கூட வேண்டாம் என்று சொல்லி விடலாம் ஏன் பயன்படுத்தாமல் கூட இருந்து விட முடியும் ஆனால் ஆயிலை நமது வாழ்வில் இருந்து ஒதிக்கி வைத்து விட முடியாது அது நமது ஆயுளை குறைத்து விடும் அதனால் ஏதோ ஒரு உருவத்தில் அது நம் மீது தொற்றிக்கொண்டே இருக்கிறது. உலக பொருளாதாரத்தையே தனது எடை ஏற்ற இறக்கத்தால் கட்டுப்படுத்தி தனது கைக்குள் வைத்து இருக்கிறது
இவ்வாறு நம்மிடம் தீணிக் கேட்டு கொண்டே இருக்கும் இந்த பூதம் கிளம்பிய நதிமூலம் என்ன? .இதை கிளப்பி விட்டு அதை அடைய தங்களுக்குள் அடித்துக்கொண்ட ரிஷிகளின் மூலம் என்ன? உலக பொருளாதார வரலாற்றில் 75% பிடித்து இருக்கும் இந்த பூதத்தின் ஆயில் ரேகை வளர்ந்து கொண்டே போக காரணம் என்ன ? என்பதை தனது ஈர்ப்புவிசை கொண்ட எழுத்தால் இப்பொத்தகத்தில் நமக்கு தெளிவுரை வழங்கி உள்ளார் பா.ரா அவர்கள்
கடைசியாக ஆசிரியர் சொல்வதும் . நான் பல காலம் நினைத்து கொண்டு இருப்பதும் ஒன்று தான்.
சைக்கிளுக்கு ஜே...
🚴 கோடி
.jpeg)
Comments
Post a Comment