ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்
வாசிப்பு 56
ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்
எல்லா வித சான்றுகளும் இருந்தும் இந்த உலகத்தில் ஒரு இனத்தின் வரலாறு எப்படி எல்லாம் மாற்றப்பட்டும், திரிக்கப்பட்டும் பொய்கள் திணிக்கப்பட்டும் அந்த அந்த இன மக்களையே இழிவாக நினைக்க வைக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் நடந்தது இல்லை .நடக்கவும் நடக்காது ஏன் என்றால் அங்கே ஒவ்வொரு மனிதனும் தன் வரலாறை தானே அறிந்து இருப்பான். ஆனால் இங்கே நம் இனத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் சொல்லிய பொய்களை நம் வரலாறு என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். அதனால் தான் 65 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகளை நம் தமிழ் இனம் இழந்து நிற்கிறது . கிழடி போன்ற தமிழ் நாகரிகம் கொண்ட நிலங்களை பெரும் மக்கள் போராட்டம் செய்தே அகழாய்வு செய்ய வைக்க வேண்டிய தேவை உள்ளது.
இழிவை தவிர வேற என்னடா இருக்கு?உன் வரலாற்றில் என்று கேட்கும் இந்த திரிபுவாதிகளிடம் பதில் சொல்ல முடியாமல் நாம் வாயடைத்து போக காரணம் என்ன ?
நமது வரலாறை மாற்றி பொய் கலந்து நம்மிடமே வந்து திணிக்கும் போது இல்லை இது பொய் என்று உறுதியாக சொல்ல முடியமால் அதை நம்பி கூனி குறுகிப் போக காரணம் என்ன?
இதற்கான காரணங்கள் இரண்டு தான் வரலாற்று அறிவின்மை ஒன்று அறிவு இருந்தும் அதை அணுகக் கூடிய பயிற்சி யின்மை மற்றொன்று இந்த காரணங்களை களைய ஆதித்த கரிகால சோழன் கொலையை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் அவர்களால் உண்மை வரலாறுகளை தேடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாகவும் மற்றும் வரலாற்று ஆவணங்களை படிக்கவும் கையாளவும் ஒரு பயிற்சி நூலாகவும் நமக்கு கொடுக்கப்பட்டதே இந்த ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு...வதந்திகள்... வரலாறு.. என்னும் இந்த பொத்தகம்
தமிழர் வரலாறை தெரிந்திக்கொள்ள உதவும் ஆவணங்களான ஓலைகள், கல்வெட்டுகள் , செப்பேடுகள் போன்றவை உருவான இடம் தொடங்கி அதன் வகைகள் ,உருவாக்கியவர், உருவாக்க சொன்னவர் மற்றும் உருவாக்கிய நோக்கம் போன்றவற்றை அ முதல் ஃ வரை இந்த பொத்தகத்தில் எழுதியுள்ளார், எழுதியுள்ளார் என்று சொல்லுவதை விட புதியதாக எழுத பழகும் குழந்தையின் கையைப் பிடித்து எழுத பழக்குவதுப் போல புதியதாக வரலாறு படிக்க வருபவர்களுக்கு அதை சரியாக அணுக பயிற்சி அளித்துள்ளார் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்
தமிழ் மன்னர்கள் மீது அவதூறு பரப்ப அதை பரப்புபவர்களுக்கு பயன்படும் முக்கியமான ஆவணமான செப்பேடுகளின் தொடக்கம் முதல் உண்மை தன்மை வரை இந்த பொத்தகத்தில் பல சான்றுகளோடு ஆய்வுச் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த அவதுறுகளை பரப்பப் பெரும்பாடு பட்ட ஆரியம், கம்யூனிசம், மார்க்கிஸம் மற்றும் திராவிடம் போன்ற இயக்கங்களின் மூகமுடிகளை தக்க சான்றுகளைக் கொண்டு கிழித்து எரிந்து உள்ளது இந்த பொத்தகம், இவற்றில் ஆரியத்தை தவிர பிற அமைப்புகளில் உள்ளர்வர்களுக்கு இந்த பொத்தகம் பெரும் கோபத்தை உருவாக்கும் அது ஞாயமும் கூட இதுநாள்வரை நாம் நம்பி வந்த ஒன்றின் மீது குறை சொல்லும் போது சொன்னவர் மீது ஆத்திரம் வருவது இயல்பு தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அமைப்பு , கொள்கை , மொழி கடந்து உண்மை வரலாற்றை தெரிந்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு தாங்கள் இதுநாள் வரை வரலாற்றை பற்றி அறிந்து கொண்டவைகளை மறுபரிசீலணைக்கு உட்படுத்தும் எண்ணம் உருவாகும்.அப்படி ஒரு எண்ணம் உருவானால் அதுவே இந்த பொத்தகத்தின் வெற்றி ஆகும். அதனால் இதை படித்து உங்கள் கருத்துக்களை பதிய வேண்டும் என்று உண்மை வரலாற்றை தேடிப் படிக்கும் ஒரு மாணவனாக உங்களை கேட்டுக்கொள்கிறேன்
(ஆரியத்தை தவிர என சொல்ல காரணம் அவர்களுக்கு கோபம் வராது மாறாக பயம் பற்றிக்கொள்ளும்)
புதியதாக வரலாற்றை படிக்க தொடக்கியவர்களும் ஏற்கனவே அந்த பாதையில் பயணிப்பவர்களும் இந்த பொத்தகத்தை படித்து முடித்து மூடி வைக்கும் போது வரலாற்று கல்வியில் பால்வாடியில் தொடங்கி ஆராய்ச்சி கல்வியில் பட்டம் பெற்று திரும்பும் ஒரு மாயா உணர்வு ஏற்படும் என்பது உறுதி
வரலாறு என்பது நாம் கடந்து வந்த பாதைகள் அல்ல. அவை இனி நாம் பயணிக்கப் போகும் பாதைக்கான வழிகாட்டும் வரைபடம்.
✍️கோடி

Comments
Post a Comment