யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

 வாசிப்பு 59


யார் பாஜக 'பி' டீம் - 

இடும்பாவனம் கார்த்திக்





அரசியல் என்பதின் விரிவாக்கம் அறம் + இயல் என்பதாகும்.ஆனால்  வாதத்தில் தோற்றவன், அவதூறை கையில் எடுக்கிறான் என்னும் முதுமொழிக்கு ஏற்ப நடைமுறையில் அது அவதூறு இயலாக மாறி நிற்கிறது கூடவே ஆபாச சொற்களும் அதன் உடன்  கை கோர்த்து கொள்கிறது . உண்மையில் இதன்  தொடக்க வேரை தேடி பயணம் செய்தால் அது முத்தமிழ் வித்தவர் மன்னிக்கவும் வித்தகர் கலைஞர் மு.கருணாநிதி இடமே போய் நிற்கிறது காமராஜர் முதல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வரை இவர் அவதூறு பரப்பாத ஆட்களே இல்லை எனலாம். வார்த்தை ஜாலம் என்னும் போர்வையில் இவர் பேசாத சொற்களும் இல்லை


உண்மையில்  திராவிடம் என்னும் பெயரை போலவே இது ஆரியத்திடம் இருந்து கற்றுக்கொண்ட திராவிட தந்திர பாடம் ஆகும். ஆரியர்கள் பொதுவாக தமிழ்நாட்டு கடவுள்களை தங்களுக்குள் ஈர்த்து செறித்து விடுவார்வார்கள் முடியவில்லை என்றால் ஆபாச புராண கதைகள் மூலம்  அந்த கடவுள்களை கீழ்மைப்படுத்தி அந்த கடவுளை வணங்கிய தமிழர்கள் மூலமாகவே ஒதிக்கி வைக்க செய்து விடுவார்கள். இந்திரன் முதற்கொண்டு அந்த தந்திரத்துக்கு இரையாகி போன தமிழ் கடவுள்களே இங்கே ஏராளம்  .


இதே ஆரியத்தின் தந்திர  வகையை தான் நாம் தமிழர் கட்சி மீதும்  அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீதும் திராவிடர்களால் கையாளப்படும் பாஜகவின் "பி" டீம் என்னும் அறம் அற்ற அவதூறு அரசியலாகும். இதன் உண்மை தன்மையை ஆராய்வதும் அதன் மூலமாக திராவிடத்தின் பொய் முகத்திரையை கிழிபதற்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை என்று சொல்லப்படும் தமிழ் இனத்தின் பெருபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கும் செய்த துரோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும் திரு.இடும்பாவனம் கார்த்திக் அவர்களால்  செய்யப்பட்ட ஒரு ஆவண பதிவு தான் இந்த யார் பாஜகவின்  "பி" டீம்? என்ற இப்பொத்தகம்.


அரசியலில் எதிர்  கட்சிகளை கருத்தாலும் கொள்கை கோட்பாட்டாலும் எதிர் கொள்வது தான் அறம் சார்ந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு அழகு ஆகும் ஆனால் இந்த பொத்தகத்தை படிக்கும் போது  அந்த அழகு சிறிதும் திமுக விடமும் அதை சார்ந்தவர்களிடமும் இல்லை என்பதையும் வெறும் ஒப்பனை செய்து தமிழர்களை ஏமாற்றி இவ்வளவு காலம் ஆட்சி செய்து வந்து உள்ளது என்பதையும் நம்மால் உணர முடிகிறது


"பி" டீம் என்று  நாம் தமிழர் கட்சியின் மிது திமுகா வால் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு சான்றாக அவர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படும் காரணங்களில் முதலாவதும் முக்கியமானதுமான காரணம் அண்ணன் சீமான் அவர்கள் மும்பையில்  பாஜகவை சார்ந்த தமிழ்ச்செல்வனுக்கு வாக்குக் கேட்டு பரப்புரை செய்தாகும். இதற்கான பதிலை சான்று பூர்வமாக  இப்பொத்தகம் நமக்கு சொல்கிறது. ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸை வீழ்த்த  எதிரணியில் வலிமையாக நின்ற கட்சிகளையே ஆயுதமாக்கிக் களம் கண்டார் அண்ணன் சீமான்.


2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரசு போட்டியிடும் 63 தொகுதிகளிலும் எதிர்த்துப் பரப்புரை செய்வதெனத் தீர்மானித்தது நாம் தமிழர் கட்சி. ஈழப்படுகொலையை சிங்கள ஆளும் வர்க்கத்தோடு சேர்ந்து நடத்தி முடித்த இந்தியாவை ஆண்ட காங்கிரசு கட்சிக்குத் தக்கப் பாடம் புகட்ட வேண்டி, "என் தாய்நிலம் தமிழீழத்தை அழித்தொழித்த காங்கிரசு கட்சியை, இன்னொரு தாய்நிலமான தமிழகத்தில் அழித்து முடிப்பேன். இத்தோடு, தமிழர் வாழும் நிலமெங்கும் காங்கிரசு கட்சியை  வீழ்த்துவேன்" என சூளுரைத்தார் அண்ணன் சீமான். இதனால், காங்கிரசை வீழ்த்த அதனை எதிர்த்து நின்ற வலுவானக் கட்சிகளை ஆதரிக்க முடிவுசெய்தார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரசு கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட 63 தொகுதிகளில் அதனை எதிர்த்து நின்ற அதிமுக, தேமுதிக இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை ஆதரித்தார். "காங்கிரசின் கை சின்னத்தை எதிர்த்து, இரட்டை இலை இல்லை! மொட்டை இலை நின்றாலும் அதனை ஆதரிப்பேன்; கை சின்னத்திற்கு எதிராக செருப்பு, விளக்குமாறு சின்னமாக இருந்தாலும், அதனை ஆதரிப்பேன். எனது ஒரே நோக்கம், காங்கிரசை வீழ்த்துவதுதான்" என முழக்கமிட்டு, காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மண்ணைக் கவ்வச் செய்தார் அண்ணன் சீமான். கரூரில் அன்றைக்குப் போட்டியிட்ட காங்கிரசு கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் ஜோதிமணி அவர்கள், "அண்ணே! என் தொகுதிக்குப் பரப்புரைக்கு வராதீங்க” எனக் கடிதமெழுதிக் கெஞ்சுமளவுக்கு அண்ணன் சீமான் அவர்களது பரப்புரை தேர்தல் களத்தில் அனலாய் தகித்தது; வெற்றி, தோல்வியையே மாற்றியமைக்கிற அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு.


1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக, ராஜாஜியின் சுதந்திரக் கட்சியோடு கூட்டணி வைத்தது. அதற்கு விளக்கமளித்த அறிஞர் அண்ணா அவர்கள் " வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், கிடைக்கிற தடியைக் கொண்டு அடிப்பேன். அது எந்தத் தடியென்று பார்க்கமாட்டேன் காங்கிரசை வீழ்த்த ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோடும் கூட்டணி வைப்பேன்" என முழங்கினார் . ஆனால் அதே வழியில் அண்ணன் சீமான் அவர்கள் சென்றால் அவரை பார்த்து பாஜக "பி" டீம் என்று கதறுகிறது திமுக


அண்ணன் சீமான் அவர்கள் காங்கிரசு எதிர்ப்புக் களத்தில் 2012ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 'கேப்டன்' தமிழ்ச்செல்வனை மட்டுமா ஆதரித்தார்? 2011ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஜவாஹிருல்லாவையும் தானே ஆதரித்தார்! திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உலகநாதனையும் தானே ஆதரித்தார்! திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தங்கவேலையும் தானே ஆதரித்தார்! காங்கிரசை வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்தபோது, “கம்யூனிஸ்ட் கட்சியின் 'பி' டீம்” எனக் கூறாதவர்கள், காங்கிரசை வீழ்த்த ஜவாஹிருல்லாவை ஆதரித்தபோது, “மனிதநேய மக்கள் கட்சியின் 'பி' டீம்” எனக் கூறாதவர்கள், தமிழ்ச்செல்வனை ஆதரித்ததை மட்டும், “பாஜகவின் 'பி' டீம்” என முத்திரை குத்துவதில் என்ன தர்க்க நியாயமிருக்கிறது? என்று கேள்வி கேட்கிறது இப்பொத்தகம்


"பி" டீம் என்று நாம் தமிழர் கட்சிக்கு பட்டம் கொடுத்தவர்கள்  அவர்கள் சொல்லுவது போல நடந்து கொண்டர்களா என உற்றுநோக்கினால் உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல் உள்ளது இவர்கள் செயல்பாடு.


2018ஆம் ஆண்டு மும்பை பகுத்தறிவாளர் சங்கம் சார்பாக, சமூகநீதி மாநாடானது மும்பை, செம்பூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அருள்மொழியும் பங்கேற்று, மாநாட்டுச் சிறப்புரை ஆற்றினர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்பதாக இருந்து, கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக அருள்மொழி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்வில், மும்பை நகரைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும் பங்கேற்று, உரையாற்றினர். இதுவெல்லாம் கவனிக்கத்தக்க செய்தியில்லை; 2012 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எந்த 'கேப்டன்' தமிழ்ச்செல்வனை ஆதரித்துவிட்டதற்காக அண்ணன் சீமான் மீது காவிச்சாயம் பூசி, இந்துத்துவ முத்திரைக் குத்தினார்களோ, அதே தமிழ்ச்செல்வன், 2014ஆம் ஆண்டு சியோன் கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினரானப் பிறகு, அவரை 2018ல் நடந்த பகுத்தறிவாளர் மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து, அவரோடு மேடையைப் பகிர்ந்து கொண்டு, பிற்படுத்தப்பட்ட ம க்களின் இடஒதுக்கீட்டுக்காக சட்டமன்றத்தில் சிறப்பாகக் குரல் கொடுத்தாரெனக் கூறி, அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து தீர்மானமுமியற்றினார்கள் திராவிட இயக்கத்தினர் என்பதுதான் சிறப்பான தரமான சம்பவம்!


நாம் தமிழர் கட்சி, 'கேப்டன்' தமிழ்ச்செல்வனை ஆதரித்தால் அதனை, 'பாஜக ஆதரவு' என்பதும், திராவிடக் கூட்டத்தினர் ஆதரித்தால், 'சமூக நீதி' என்பதும் இரட்டை நிலைப்பாடு இல்லையா? இதுதான் திராவிட உருட்டு என்பதா? திராவிட மேடைக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து, அவருக்குப் பாராட்டுத்தீர்மானம் வாசிக்கிற அளவுக்கு 'கேப்டன்' தமிழ்ச்செல்வன் சிறப்பாகச் செயலாற்றி, சமூக நீதிக்காகக் குரலெழுப்பினாரென்றால், அப்படிப்பட்ட ஒருவரை மாநகராட்சித் தேர்தலில் ஆதரித்துப் பரப்புரை செய்த அண்ணன் சீமான் அவர்களது நிலைப்பாடும், செயல்பாடும் மிகச்சரிதானே! சமூக நீதியைப் பேணக்கூடிய ஒருவரைத்தானே நாம் தமிழர் கட்சி ஆதரித்திருக்கிறது; நல்லதைத்தானே செய்திருக்கிறது! அப்புறம் எதற்கு, காவிச்சாயம், இந்தத்துவ முத்திரை, “பாஜகவின் 'பி' டீம்" எனும் அவதூறெல்லாம்? எதற்கு இந்த அற்ப அரசியல் திராவிடக் கூட்டத்தினரே? என செருப்பால் அடிப்பது போல கேள்விகள் கேட்கிறது இப்பொத்தகம்


இவ்வளவு அவதூறுகளை பரப்புரை செய்பவர்கள்,  நடுவில் சில பக்கங்களை காணோம் என்பது போல பாஜகவை தமிழ்நாட்டில் கால் ஊன்ற வைத்து அதை வளர்த்து எடுத்ததே இவர்கள்  தான் என்பதை சுலபமாக மறைத்து விடுகிறார்கள்


1999ஆம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் நடந்து முடிந்தத் தேர்தலின் முடிவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்றது. அக்டோபர் 13, 1999 அன்று வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமரானார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது திமுக. திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் மத்திய அமைச்சர்களாகவும், ஆ.ராசா மத்திய இணையமைச்சராகவும் அங்கம் வகித்தனர். இவர்களோடு, மதிமுக, பாமகவைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது.


முதலில் 13 நாட்களிலும், பிறகு, 13 மாதங்களிலுமென கலைந்த பாஜகவின் ஆட்சியதிகாரம், திமுகவின் பரிபூரணத் துணையோடு முதல்முறையாக 5 ஆண்டுகாலம்வரை நீடித்தது. பாஜக எனும் மதவாதக்கட்சியின் கரங்களில் அதிகாரத்தைக்கு கொடுத்து, முழுமையாக ஐந்தாண்டுக் காலம் அதிகாரத்தில் இருத்திய திமுகவின் அச்செயல்தான், 2024 ஆம் ஆண்டு பாஜகவின் ஆட்சியால் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற கொடுந்துயருக்கான அடித்தளமென்றால், அது மிகையல்ல! ஏனென்றால், 5 ஆண்டுக்காலம் இந்தியப் பெருநாட்டை பாஜக ஆளுகை செய்த காலத்தில்தான், தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் கட்சியை வேரூன்றச் செய்தது. ஆர்.எஸ். எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நாடு முழுமைக்கும் அதிகார அடுக்குகளில் அமரச்செய்யப்பட்டார்கள். அதற்கு முழுமையாகத் துணைநின்றது திமுக! மறுக்க முடியுமா?


'Right Person In Wrong Party' என வர்ணித்து, வாஜ்பாயை நியாயப்படுத்த முயன்ற கருணாநிதியின் வார்த்தைகள் அப்பட்டமான ஏமாற்றுவாதம்


இப்பொத்தகத்தில் குறிப்பிட்டு உள்ள இஸ்லாமிய சகோதர்களுக்கு இந்த திமுக செய்த அநீதிகளை என்னால் இங்கே சொல்ல முடியவில்லை சொல்வதற்கு அது சிறியதும் இல்லை . எந்த அரசாங்கமும் நினைத்து கூட பார்க்க முடியாத  தன்னை நம்பிய மக்களுக்கு செய்யவே கூடாத துரோகங்கள் அவை.


இதுபோல திமுக செய்த எண்ணற்ற ஆரிய பாஜக ஆதரவு நிலைப்பாட்டையும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலையும் பொய் உரைத்து தமிழர்களுக்கு செய்த துரோகங்களையும் பட்டியல் இட்டு திமுக வின் உண்மை முகத்தை தோல் உரித்து காட்டுகிறது இப்பொத்தகம். ஒரு தலைசிறந்த ஆவண பதிவை தந்தமைக்காக திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும். மேலும், இந்த ஆவணத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று திராவிடம் தீது என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொரு மானமுள்ள தமிழரின்  கடமை ஆகும்.


கடைசியாக இந்த பொத்தகத்தை படித்து முடித்து முடி வைக்கும் போது திராவிடர்களை பார்த்து எனக்கு கேட்க தோன்றிய கேள்வி ஒன்று தான்.


சீச்சீ.. நா.யும் பிழைக்குமா இந்த பிழைப்பு ?


💪 கோடி

Comments

Popular posts from this blog

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு