விதை அரசியல் - பாமயன்
வாசிப்பு 58
விதை அரசியல் - பாமயன்
சீசனில் இல்லாத பழங்களை மனிதன் எல்லா பருவத்திலும் உண்ண பேராசை பூண்டபோது வேளாண்மையிலிருந்த இயற்கை நீங்கியது.
- ஜப்பானிய வேளாண்மை அறிஞர் - மசனாபு ஃபுக்கோகா
இங்கே நான் குறிப்பிட இருக்கும் விடயங்களை தாண்டி இந்த பொத்தகத்தில் சொல்லப்பட்டவை ஏராளம். அவை மிக அதிர்ச்சியானதும் கூட. இந்த நிலைக்கு வணிகமோ, அரசியல்வாதிகளோ, தவறான ஆராய்ச்சிகளோ மட்டும் காரணம் அல்ல நாமும் நம் அலட்சியமும் இங்கே முக்கியமான காரணங்கள். இந்த பொத்தகத்திற்கு கிடுக்கம் எழுத குறிப்பு எடுப்பதற்காக வேறு யாராவது இந்த பொத்தகத்தை பற்றி எழுதி உள்ளார்களா என்று இணையத்திலும் முகநூலிலும் தேடும் போது மிகவும் அயற்சிக்கு உள்ளானேன். இந்த பொத்தகத்தை பற்றி ஒருவர் கூட எழுதவில்லை. இயற்கையை ரசிக்கிறோம் .கவிதை புனைகிறோம், கட்டுரை வரைகிறோம் ஆனால் அந்த இயற்கையையும் அதற்கு இருக்கும் ஆபத்துகளையும் அதை தடுக்கும் நுண்ணறிவுளையும் படிக்கவும் எழுதவும் நாம் பெரும்பாலும் தவறுகிறோம் அல்லது விரும்புவது இல்லை.
இயற்கை வேளாண்மை என்று சொல்லியவுடன் ஐயா.நம்மாழ்வார் போன்று புகழ் வெளிச்சம் பட்டவர்களை தாண்டி நம் அறிவு செல்வது இல்லை இதனால் இயற்கையை பற்றிய பல அரிய தகவல்கள் நமக்கு தெரியாமலே போகிறது.
ஐயா.பாமயன் போல பல இயற்கை வேளாண்மை விஞ்ஞானிகளை பார்க்காமல் கண் இருந்தும் குருடர்களாக மாறிவிடுகிறோம்.இதை சாதாரண மக்கள் மட்டும் அல்லாமல் விவசாயத்தையும் வரலாற்றையும் போற்றும் கட்சிகள் கூட இப்டி தான் செய்கிறது. கடந்த கால வரலாறை பாதுக்காப்பது எந்த அளவு முக்கியமோ அதை விட முக்கியம் நிகழ்கால வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாகும்.
இந்த உலகத்தின் வளர்ச்சி என்பது பொதுவாக கல்வி, தொழிற்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளை வைத்து கணக்கிடப்படுகிறது ஆனால் இவை அனைத்தும் ஒரு கருவிகள் தான் இவைகள் வளர்ச்சிக்கு உதவுமே தவிர இவைகளே ஒரு நாட்டின் வளர்ச்சியாக கணக்கிட முடியாது! கூடாது! அப்படியானால் எதை வளர்ச்சி என நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்? செல்வந்தனுக்கும்,ஏழைக்கும் ,விலங்குகளுக்கும் , பறவைகளுக்கும் , பூச்சி புழுவுக்கும் , எந்த கல்வியும் கற்பவர்க்கும், எந்த தொழிற்நுட் பதையும் உருவாக்குவதற்கு அதுவே அடிப்படை அது இல்லாமல் உலகத்தில் இயக்கமே இல்லை அதுவே உணவு ஆகும் உணவில் தன்னிறைவு அடையாமல் நாம் எதை செய்தாலும் அவைகள் வீழ்ச்சியே தவிர வளர்ச்சி அல்ல.
உணவின் அடிப்படை விவசாயம் அந்த விவசாயத்திற்கு அடிப்படை தூண்களாக இருப்பது மண், நீர், காற்று, வெயில் ஆகிய நான்கு வளங்களாகும். இந்த வளங்கள் இல்லாமல் இந்த பூமியில் உயிர்களே இல்லை இவற்றில் மிக முக்கியமாக ஐந்தாவது வளமாக இருப்பது தான் மரபியல் வளம் என்னும் விதை வளம் ஆகும். விதைகள் இல்லாமல் விவசாயம் இல்லை ஆனால் மண், நீர், காற்று ஆகிய மூன்று வளங்கள் பெரும் பாதிப்பை நோக்கி உள்ளன அவற்றை பாதுகாக்கவும் மீட்டு எடுக்கவும் பல அமைப்புங்கள் போராடுகிறது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது ஆனால் ஐந்தாம் வளமான விதை வளத்தை பாதுக்கப்பதற்கன கவனம் மிக குறைவாகவே உள்ளது. அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த மரபியல் வளத்தின் மீது நடத்தப்படும் அறிவியல் தாக்குதல்கள், வணிகங்கள் மற்றும் அரசியல் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொத்தகமே இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயன் அவர்களால் எழுதப்பட்ட இந்த "விதை அரசியல்"
அறிவியல் என்பது ஏற்கனவே இருக்கும் முறையை மென்படுத்தி அதை இன்னும் பயன் உள்ளதாக மாற்றுவதே ஆகும் ஆனால் விவசாயத்தை பொறுத்த வரை அது ஏற்கனவே இருக்கும் நன்மைகளை அழித்து தீமைகளை புகுத்துவதாக உள்ளது அதன் மிக சரியான எடுத்துக்காட்டு பசுமை புரட்சி ஆகும். இதனால் ஒரு நிலத்தை பலவாக பிரித்து பல வகையான நெல்லையும் பயிர்களையும் பயிரிடும் பன்மையம் அழித்து ஒரே வகையான வீறிய விதைகளை பயன்படுத்தப்படுவதால் பல்வேறு வகையான விளைச்சல் தருகின்ற அதாவது மக்கள், விலங்குங்கள் போன்றவற்றிக்கான உணவும், உரத்திற்கான மூலப் பொருள்களும் இல்லாமல் போகின்றன. மாறாக உள்ளூர் பயிர்கள் இவற்றை தந்து நிலத்தை விளைச்சலுக்கு உதவுகின்றன.
பசுமை புரட்சி மற்றும் மரபீனிகளைக் கொண்டு மாற்றப்பட்ட உணவின் மூலம் மட்டுமே உலக உணவுத் தேவையை சமாளிக்க முடியும் என்ற கட்டுக்கதையை தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் ஆனால் உண்மையில் இந்த முறைகள் ஓர் ஏமாற்று வேலையா கும். இது எந்த வித விதமான சிக்கல்களையும் தீர்க்கவில்லை மாறாக பல விதமான சிக்கல்களை உருவாக்கி விட்டு இருக்கிறது.
இயற்கைக்கு எதிரான இந்த வேளாண் முறையில் தொடர்ந்து பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் வளமான மண் அமைப்பு பாலைநிலமாக மாறி வருகிறன.தொழில் மையப்படுத்தப்பட்ட "பசுமைப் புரட்சி" என்று கூறப்படும் வேதியியல் வேளாண்முறை மூன்றாம் உலக நாடுகளில் 60களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக விளைச்சல் தரும் விதைகள், பெரும் நீர்ப் பாசன அணைகள், வேதியியல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை இதற்குத் தேவைப்பட்டன. உள்ளூர் விதைகளையும், உள்ளூரிலேயே கிடைக்கும் சாணம், குப்பைகள், வண்டல் மண் போன்றன இடுபொருள்களைப் பயன்படுத்தி ஆண்டாண்டு காலமாக செயல்பட்டு வந்த மரபுவழி வேளாண்மை தற்சார்பை இழந்து கும்பணிகள் சந்தைப்படுத்தும் விதைகள், வேதிய உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை நம்பியிருக்கும் நிலைக்கு பசுமைப்புரட்சி தள்ளியது. கடந்த அறுபது ஆண்டுகளில் மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் காணப்பட்ட பல்வேறு வேளாண் முறைகளும் அவற்றைச் சார்ந்திருந்த சமூக கட்டமைப்புகளும் தூக்கி எறியப்பட்டு அந்நாடுகளின் சந்தையும், பொருளாதாரமும் மேற்கத்திய சந்தைப் பொருளாதாரம் என்னும் சூழலுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டன.
இன்று “பசுமைப்புரட்சியின்” பரிசாக உயிரிழந்த மண்ணும், அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலத்தடி நீரும், மறைந்துவிட்ட உயிர் பன்மயமும் நம்மை எதிர்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர், இந்தியா போன்ற உயிரியல் பன்மயம் (Biological Diversity) மிக்க நாடுகளில் வேளாண்மை மட்டுமல்லாது உணவுப் பழக்கங்களும் பன்மயமிக்கது. இதை அழிப்பதில் முதன்மைப் பங்கு வகித்தது பசுமைப் புரட்சி முறையாகும். எண்ணற்ற நெல் வகைகளும் பிற புஞ்சைத் தவசங்களும் நமது மண்ணில் நிறைந்து காணப்பட்டது. சத்தான பயறுகளையும், பருப்புகளையும் கொடுத்து வந்த பயிர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு நெல்லும் கோதுமையும் சாகுபடி செய்யப்பட்டு விளைச்சலில் புரட்சி என்று குறிப்பிடு கிறார்கள்.
பசுமைப்புரட்சி, ஒற்றைப் பயிரை குறிவைத்தே செய்யப்படுகின்றது. இதனால் சமன்மை மிக்க வேளாண்முறை குலைக்கப்படுகிறது' இந்தியாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்யும் உழவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
கலப்பினச் சாகுபடி முறையில் அதாவது மரபு வழி முறையில், ஒரே வயலில் பல்வேறு வகையின விதைகளான (பயறு, தவசம், நார்ப்பொருள், மணப்பொருள்) விதைக்கப்படுகின்றன. அவை ஒன்றன்பின் ஒன்றாக அறுவடை செய்யப்படுகின்றன. எனவே விளைச்சல் அளவானது அனைத்து பயிர்களையும் கூட்டிப் பார்க்கும்போது கூடுதலாகவே இருக்கிறது. வீறிய நெல்லோ, கோதுமையோ ஒரே இடத்தில் ஒரே முறையில் விளைச்சல் தரும். இதனால் ஒன்றில் மட்டும் விளைச்சல் கூடுவது போன்ற பிம்பம் தோன்றும். மேலும் மரபுப்பயிர்கள் பூச்சி தாக்குதலையும். வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் திறனையும் பெற்றுத் திகழ்கின்றன
'பசுமைப் புரட்சியை அரவணைக்கும் அறிஞர்கள் வீறிய வகைப் பயிர்களின் விளைச்சல் திறனை ஒற்றைப்பயிரின் விளைச்சலை வைத்துக் கணக்கிடுகின்றனர். மரபுப்பயிரிகளில் பல்வேறு பயிர்கள் ஒரே நேரத்தில் (ஒரே இடத்தில்) விளைச்ச தருவதைக் கணக்கிடுவது கிடையாது
இந்த பசுமை புரட்சி மூலம் விளைச்சல் 70% அதிகரிக்கிறது ஆனால் உழவர்களின் வருமானம் 50% விழிச்சி அடைகிறது இதன் அடிப்படை காரணம் இடுபொருளின் கடுமையான விலை உயர்வு .ஒரே வகையான வீறிய விதைகளுமே ஆகும். பசுமை புரட்சி என்பது பயிர்களை குறியாக கொண்டு அதில் ஆராய்ச்சிகளை செய்கிறது ஆனால் அது உழவர்களையும் அடிப்படை மக்களையும் முன்னிலை படுத்தி தன் வேலையே செய்யவில்லை. இந்த ஆராய்ச்சிகள் யாவும் விளைச்சலை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாக இருக்கிறதே அன்றி இடுபொருளின் விலையை குறைக்கும் வகையில் இல்லை.
உணவுப்பயிர்களில் தன்னிறைவு என்ற பெயரில் வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும், உழவு எந்திரங்களையும் இறக்குமதி செய்ததின் விளைவு நம் வேளாண்மை முழுவதும் தொழில்மய நாடுகளின் கைக்கு சென்று விட்டது. அதனால் எந்த உணவு உருவாக்கப்பட வேண்டும் நாம் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதையும் சில நிறுவனங்களே தீர்மானிக்கிறது.
இந்த நிலை மாற பன்னாட்டு நிறுவனங்களில் கைங்களில் நமது விதை சென்று விட்டால் நமது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்ற பார்வையை எடுத்துரைக்க வேண்டும். ஆயுதங்களும் தொழில் நுட்பங்களும் தாம் விடுதலையைத் தீர்மானிக்கும் என்றால் அடிமைக்கு விடுதலையே இல்லை. உழவர்கள் விதையைக் காப்பார்கள். விதைகளின் வேட்டைக் களத்தில் உழவர்களே இறுதி வெற்றியாளர்கள்.
இதை எல்லாம் சொல்லுவதற்கு நீ யார்? நீ என்ன விவசாயம் செய்கிறாயா? நீயே ஒரு நிறுவனத்தில் தான் வேலை செய்கிறாய் விவசாயத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என என்னை பார்த்து சிலர் கேப்பீர்கள் என்றால்..
சோறு தின்பவன் யாராக இருந்தாலும் விவசாயத்தை காக்க அதை பற்றி பேசலாம்
நான் சோறு தான் தின்கிறேன்..
நீங்க......?
✍️கோடி
%20(5).jpeg)
Comments
Post a Comment