காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்


 காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்



இயற்கையின் அதியற்புத காட்சிகளை, நிசப்தம் பூத்து நிற்க்கும் பள்ளதாக்குகளையும் பார்க்காமல் உலகத்திலிருந்து விடை பெறுவதென்பது பாதி சாப்பாட்டில் எழுந்து கொள்வது போன்றது தான்                                                

-எஸ்.ராமகிருஷ்ணன்(துணையெழுத்து)


மேலே உள்ள துணையெழுத்தின் வரிகள் தான் என்னை  என் தலையெழுத்தை மாற்றி வேறு ஒரு பாதையில் பயணம் செய்ய  முயற்சிகளை எடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 


ஒரு சரியான புத்தகம்,

ஒரு சரியான நாளில்,

ஒரு சரியான சூழலில்,

உன்னை தேர்ந்தெடுக்கும் என யாரோ எழுதியதை படித்திருக்கிறேன் ஆனால் தொடர் அரசியல், வரலாறு அதை சார்ந்த வாசிப்பினால் இறுகி  உறங்கி போய் இருந்த எனது இனிய நினைவுகளை தட்டி எழுப்பிக் காற்றில் பறக்கும் தாத்தா பூச்சிப் போல மென்மையாக்க ஒரு சரியான சூழலிலும்  ஒரு சரியான நாளிலும் தோழி இந்துமதி கணேஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு பரிசாக அனுப்பப்பட்ட பொத்தகமே இந்த காண் என்றது இயற்கை.



பார்த்த ஊர்களில் யாரும் பார்த்திரத இடங்களையும்,  தோள்களை உரசி சென்ற சில மனிதர்களின் முகங்களையும், இதுவரை ருசிக்க தவறிய உணவுகளையும். பலர் தவற விட்ட அதியற்புத காட்சிகளையம் மீண்டும் தேடி காண் என்றது இயற்கை


வாகன நெரிசலில் இருந்தும் அலுவலக எரிச்சலில் இருந்தும் என்னை நான் விடுவித்து இளப்பாறிக்கொள்ள எப்போதும் நான் கையில் எடுப்பது எஸ். ரா வை தான். பல எழுத்துகளை என் கண்கள் கடந்து சென்றாலும் இரை தேடி சென்ற பறவை மீண்டும் தன் கூட்டுக்கு திரும்பி வருவது போல என் மனம் எஸ். ரா வையே வந்து அடைகிறது. நான் படித்தவரை எஸ். ராவின் எழுத்து மட்டுமே நம் கவனிக்க தவறிய மனிதர்களையும், இயற்கையையும் அதை சார்ந்த நிகழ்வுகளையும் பேசுகிறது. அவைகளுடன் நம்மை அறிமுகம் செய்து உறவாட வைக்கிறது.

இந்த காண் என்றது இயற்கையும் அப்படி ஒரு நெருக்கத்தை தான் நம்முள் உருவாக்கிறது. ஆனால் வேறு வேறு கோணங்களை புது புது உவமைகளோடு நமக்குள் ஏற்படுத்திவிடுகிறார் எஸ். ரா


மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் மெல்லக் காய்ந்து சருகாகிப் பறந்து போவதைப் போலவே என் மனமும்  இறுக்கத்தில் இருந்து இறங்கி இலகுவாகி  சொல்லவும்  எழுதவும், வார்த்தைகளற்று இன்னும் மிச்சமிருக்கும்  இயற்கையின் அதியற்புதத்தை காண பறந்து செல்கிறது


இந்த பொத்தகத்தை பரிசளித்து என்னை மீண்டும் இந்த இயற்கையோடு உறவுக் கொள்ள  மீட்டு கொண்டு வர முயற்சித்த  தோழி இந்துமதி கணேஸ்க்கு என் நன்றியும் 🙏 அன்பும்❤️


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு