தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன்

 

வாசிப்பு 46

தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன்




எழுத்தாளர் இந்துமதி கணேஷ் அவர்களால் எனக்கு பரிசு அளிக்கப்பட்டப் பொத்தகம். அவர்களுக்கு என் நன்றிகள்


இந்த பொத்தகத்தின் ஆசிரியருக்கு என் கடுமையான கண்டனங்களுடன் எனது பொத்தக திறனாய்வை தொடங்குகிறேன்."தர்கா வழிபாடு கூடாது என இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கூறுகிறது" என்று பதிவு செய்து உள்ளார். குரானையும் நபி மொழியையும் பின்பற்ற கூடிய இஸ்லாமியர் ஒவ்வொருவரும் தர்கா வழிபாடு கூடாது என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள் அது இஸ்லாத்திற்கு எதிரானது எடுத்துக்காட்டாக ஒரு நபிமொழி இவ்வாறு சொல்கிறது. "அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)" 


இப்படி இருக்க தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள்  தீவிரவாதிகள் என பதிவு செய்ய இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இதற்கு ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் மன்னிப்புக் கேட்டு அடுத்த பதிப்பில் இந்த வார்த்தையை நீக்க வேண்டும்.ஆசிரியருக்கு ஒரு திருக்குறளை நினைவுப்படுத்த விரும்புகிறேன் "இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)"


இப்பொத்தகம் கிட்டத்தட்ட 50 பெண் நாட்டார் தெய்வங்களின் கதைகளை பேசுகிறது. ஆரிய தெய்வ வழிபாட்டுக்கு எப்போதும்  எதிராக  இருப்பது நாத்திகம் அல்ல மாறாக நாட்டார் தெய்வ வழிபாடு தான். அந்த உண்மையை சொல்லி மக்களை ஆரியத்திற்கு எதிர்ப்பாக திருப்ப சிறு முயற்சி தான் இந்த பொத்தகம் என ஆசிரியர் குறிப்பிட்டாலும் . ஒவ்வொரு கதையின் முடிவிலும் அவர் சொல்லும் விளக்கங்கள்  அப்படி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பெண் அடிமைத்தனமும், ஆண் ஆதிக்கமும் மற்றும் உடன்கட்டை ஏறுதலை போற்றிய சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது அதன் விளைவாக ஏற்பட்ட வழிபடுங்கள் தான் இவை எல்லாம் என கூறி தமிழர்களுக்கு தாழ்வுப் மனப்பான்மையை ஊட்டுவதுப் போல உள்ளது.



எந்தவொரு கதைக்கும் பன்முகப்பட்ட வடிவங்கள் இருக்கின்றன. எப்போதுமே நம்பிக்கைகள் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு வெளிப்படையாக சொல்லப்படும் அர்த்தமும், சொல்லப்படாத அது தோன்றிய காலத்தின் பூர்வ அர்த்தமும் இருக்கும். ஆசிரியர் மார்கசிய பார்வையில் இக்கதைகளை பார்த்திக்கிறாரே தவிர ஆய்வு பார்வையில் பார்க்க தவறி இருக்கிறார். இதில் சொல்லப்பட்ட கதைகளில் பெரும்பாலும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்கு பின்  பிறமொழியாளர்கள் ஆட்சி காலத்தில் உருவான கதைகள் தானே தவிர இதற்கும் தமிழர்களுக்கு எந்த தொடர்பும் இருக்க வாய்ப்புகள் இல்லை


பெண்களை தண்டனை கொடுக்கும் நீதிபதிகளாகவும், நிர்வாகம் செய்யும் அதிகாரச்சிகளாகவும், மருத்துவமனைகள் நடத்துபவர்களாகவும் மேலும் சொத்து உடமை உள்ளவர்களாகவும்  ஆக்கி அழகு பார்த்த சமூகம் தமிழ் சமூகம் அப்படி இருக்க எப்படி தமிழர் பண்பாட்டில் பெண் எப்படி அடிமையாக இருந்து இருக்க முடியும்? அதன் அடிப்படையாகக் கொண்டு எப்படி இந்த கதைகள் உருவாகி இருக்க முடியும்?


உடன்கட்டை ஏறுதல் என்பது தமிழ்நாட்டில் இருந்ததா? என்றால் ஆம் ஆரியதின் தாக்கத்தால் இருந்தது ஆனால்  அதை வடநாடு போல தமிழ்நாடு போற்றி கொண்டாடவில்லை மாறாக அந்த அந்த பெண்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடந்தே ஒழிய ஆசிரியர் பதிவு செய்தது போல கட்டாயபடுத்தி தூக்கி எறியப்படவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் எப்படி தேடினாலும்  உடன்கட்டை ஏறும் நிகழ்வுகள் ஐந்துக்கு மேல் கிடைக்காது அதுவும் பல பேர் தடுத்தும் தன் விருப்பத்தின் பேரில் ஏறிய சான்றுகள் தான் கிடைக்கும். சும்மா ஒத்துமொத்த இந்திய வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்றில் திணிக்கக் கூடாது


சங்கதி சாக்கில்  இப்பொத்தக ஆசிரியர்  வேறு ஒரு வேலையும் பார்த்து வைத்து உள்ளார் பெண் அடிமைத்தனமே இல்லாத கதையில் அப்பா  மகளின் பாசத்தின் உருவான கதையில் தன் எண்ணத்தை இவ்வாறு விதைக்கிறார் "ஆனாலும், பெற்ற மற்றும் பெறாத சின்னஞ்சிறு மகள்கள் மீது பாசத்தைப் பொழியும் இந்தப் 'பாசக்காரப்பயபுள்ளைகளான இதே தகப்பன்கள் பருவ வயதில் மகள்களின் விருப்பத் தேர்வுகளை ஏற்காமல் தடியெடுக்கும் கொலைகாரப் பாவிகளாக மாறிவிடுவதை என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறது. மனம்" எந்த நோக்கத்தில் இதை செய்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை


19வது கதையாக "கொங்கு சின்னமாள்" என்னும் கதை சொல்லப்படுகிறது. வீட்டு மாடியில் நின்று சிக்கு எடுத்துக்கொண்ட அய்யர் வீட்டு பெண்ணின் தலைமுடி அந்த வழியாக வந்து கொண்டு இருக்கும் கவுண்டர் ஒருவர் மீது விழுகிறது உடனே அப்பெண்ணை பார்த்த கவுண்டர் அந்த பெண்ணை சிறையெடுத்து போய் திருமணம் செய்து விடுகிறார். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அது தங்களுக்கு அவமானம் என கருதிய அப்பெண்ணின் பெற்றோர்கள் மகளை பார்க்க வருவது போல் வந்து அவளுக்கு மலட்டு மருந்தை கொடுத்து விட்டார்களாம் அதனால் குழந்தை இல்லாமல் ஊரின் பேச்சுக்கும் ஆளாகி  மன உலைச்சலோடு அவர் இறந்து போகிறார். பிறகு தெய்வமாக வணங்கப்படுகிறாள். இது கதை சுருக்கம். இந்த கதையின் முடிவில் ஆசிரியர் கொடுக்கும் விளக்கத்தை பாருங்கள் "தலைமுடியை நீளமாக வளர்ப்பது பெண்ணின் அழகுக் குறியீடுகளில் ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டது. இதே அய்யர் வீட்டுப் பொண்ணு தலைமுடியை வளர்க்காமல், இந்தக்காலம் போல 'பாய் கட்' பண்ணியிருந்தால் கூந்தலும் இல்லை அது பறப்பதும் இல்லை அது போய் ஒருத்தன் மேல் விழுவதும் இல்லை. இந்தக் கதையும் இல்லை" இது என்ன அறிவிலித்தனமான ஒரு விளக்கம். கூந்தலுக்கு பதில் அவளின் சேலையில் உள்ள சிறு நூல் கவுண்டர் மீது விழுந்து இந்த கதை நடந்து இருந்தால் அவள் சேலை கட்டாமல் இருந்து இருந்தால் இந்த கதை நடந்து இருக்காது என்று சொல்லுவீர்களா ஆசிரியரே?  ஆண் பெண்ணும் சமானவர்கள் இல்லை அதே வேளை மேலும் இல்லை.கீழும் இல்லை. இருவரும் தனித்துவமானவர்கள் அவர் அவர்களுக்கு என்று தனி தனி உணர்வுகளும் அழகியலும் உண்டு . பெண் என்பவள் ஆண்ணாக மாறி தான்(boycut பெயரே ஆணை தான் குறிக்கிறது) அவள் உரிமைகளை பெற வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் மன்னிக்கவும்.இதன் மூலம் நீங்கள் ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை வளர்க்கிறீர்கள்!


கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் எழுதப்பட்டு உள்ளது இந்த தெய்வமே சாட்சி


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு