தமிழ் இந்து ஏன்? - பெ. மணியரசன்
வாசிப்பு 49
தமிழ் இந்து ஏன்? - பெ. மணியரசன்
இந்து மதத்தை ஒழித்தால் தான் மற்ற பார்ப்பனியம் மூடநம்பிக்கைகள், வர்ணசாதி ஆதிக்கம் போன்றவற்றை ஒழிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், நம் மக்கள் அவ்வளவு எளிதில் மதத்தை, விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். (பெரியாரின் கடைசி பிறந்தநாள் கட்டுரை , ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பாளர் ஐயா ஆனைமுத்து)
"இந்து" என்ற சொல் அடிப்படையில் எந்த ஒரு மதத்தையும் சமூகத்தையும் குறிக்கவில்லை அந்த சொல் தனி நபர் சட்டத்தின்படி உள்ள பல்வேறு வகை மக்களை குறிப்பிடுவதற்காக இடுப்பெயராக பயன்படுத்தப்படுகிறது ஆனால் சில நூற்றாண்டு காலமாக rss மற்றும் பிராமணர்களால் இந்து என்ற சொல் மதத்தின் பெயராக மாற்றப்பட்டு அதை பழக்கப்படுத்தி உளவியலாக நம்ப வைக்கப்பட்டுள்ளது . அதனால் ஆரிய-பிராமணிய- சமஸ்கிருத ஆதிக்கத்தை ஏற்றுச் செயல்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளார்கள்!
முசுலிம், கிறித்துவ மதங்களைப் பார்த்து, தங்களுக்கும் அவைபோல் கட்டுக் கோப்பான மதம் வேண்டும் என்ற ஆர்வம் "இந்துக்களிடையே" உருவானது. இந்த உணர்வை மிகைப்படுத்தி வளர்த்து, முசுலிம் - கிறித்துவ மதங்களைப் போட்டி மதங்களாகக் காட்டி, இந்து மத ஒருங்கிணைப்பை - இந்துமதத் தீவிரவாதத்தை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற பல்வேறு அமைப்புகள் வளர்த்தன.
"இந்து" என்ற சொல் சமற்கிருதத்தில் நிலவுக்கான பெயராக உள்ளது. வேத உபநிடதங்கள் - சமற்கிருத இதிகாசங்கள் - புராணங்கள் எதிலும், மதம் கடவுள் நம்பிக்கை என்ற பொருளில் "இந்து" என்ற சொல் வழங்கப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆரிய-சமற்கிருத-பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்து நம் முந்தையத் தலைமுறை தலைவர்களும் , அறிஞர்களும் பல்வேறு வடிவங்களில் போராடி உள்ளார்கள் (அதில் மிகவும் அறியப்பட்ட தலைவர் பெரியார்) அதற்கு சில பலன்களும் கிடைத்துள்ளது ஆனால் ஆரிய ஆதிக்கம் பல்வேறு வடிவங்களில் நம்மை இறுக்கி வருகிறது
ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து போரடியவர்களில் முக்கியமானவர் பெரியார். அவரால் ஆரிய ஆதிக்க எதிர்ப்பு தீ போல பரவியது ஆனால் நெடுநாள்கள் நீடிக்கவில்லை இன்னும் சொல்லப்போனால் பெரியார் காலத்தில் இருந்ததை விட ஆரிய ஆதிக்கம் பல மடங்கு பெருகியது பல கோவில்களும் சாமியார்களும் உருவாகி பிராமணர்களை இன்னும் உயரத்தில் கொண்டு சேர்த்தது. இதற்கான காரணம் என்ன?
பெரியார் வெறும் ஆரிய ஆதிக்க எதிர்ப்பு குரல் மட்டுமே கொடுத்தாரே தவிர ஆக்கப்பூர்வமான மாற்று செயல் திட்டத்தை அவர் முன்மொழியவில்லை. எடுத்துக்காட்டாக காரல் மார்க்ஸ், முதலாளிய ஒழிப்பை முன்வைத்தார் மாற்றாக நிகரமைச் சமூக அமைப்பை(SOCIALIST SOCIETY) முன்வைத்தார். காந்தியடிங்கள் மேற்கத்திய ஏகபோக முதலாளிய உற்பத்தி முறையை எதிர்த்தார் அதற்கு மாற்றாக தற்சார்பு பொருள் உற்பத்தி, மரபுவழி வேளாண் முறை, கைத்தொழில்கள்.கதர் உற்பத்தி போன்றவற்றை முதன்மைப்படுத்தினார். அவைகள் புதிய புதிய நுட்பங்களை தனக்குள் ஈர்த்து கொண்டு சில சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டு இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு ஆக்கபூர்வமான எந்த ஒரு செயல் திட்டத்தையும் சொந்தமாக முன்வைக்கவில்லை பெரியார் மாற்றாக கேடுகள் நிறைந்த ஐரோப்பிய நாகரிகத்தை முன்னிலைபடுத்தினார் அவருக்கு பின் வந்தவர்களும் பழைய புராணம் பாடுவது போல பெரியார் புராணம் பாடிக் கொண்டு பிராமண ஆதிக்கம் ஒழிக என்னும் கோஷத்தை மட்டும் எழுப்பிக்கொண்டு திரிந்தார்களே தவிர அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கவில்லை
இந்த இடத்தில் பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியவை கவனத்துக்கு உரியவை : "மதத்தை ஒழிக்கத் தொடங்கினால் அது புத்துயிர் பெறும்; மதம் தேவைப்படாத சமூக அமைப்பை உருவாக்கினால் காலபோக்கில் மதத்தின் செல்வாக்குச் சரியும். மதத்தின் வழியாக வரும் கொடுங்கோன்மையையும் எதேச் சாதிகாரத்தையும் தடுக்கப் போராடுவது தேவை. ரோமாபுரியின் போப்பரசர்கள் செய்த சர்வாதிகாரம், கொடுமைகள் தாங்க முடியாமல்தான் 16ஆம் நூற்றாண்டில் கிறித்துவத்தில் புரொட்டஸ்ட்டண்ட் பிரிவு பாதிரியார் மார்ட்டீன் லூதரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் எங்கெல்சு சுட்டிக்காட்டி, அதே மதத்திலிருந்தே கூட சீர்திருத்தங்கள் எழ வாய்ப்புண்டு என்றார்.
பெரியாரும் அவர் வழி வந்தோரும் இந்துக் கடவுள்களை எதிர்த்துக் கொச்சையாகவும், கடுமையாகவும் பேசப்பேச பிராமணரல்லாத பக்தர்களிடையே பெரியார் மீது ஏற்பட்ட சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவா பேசும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அமைப்புகள், பிராமணரல்லா தாரிடையே வேகமாக வளர்ந்தன. இரட்டை வேடம் போட்டு, இந்து மதம் - சிவனியம் - மாலியம் முதலிய சமயப்பிரிவுகளில் பிராமண ஆதிக்கத்திற்கு, பிராமண ஏகபோகத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டர்கள்! பிராமண ஆதிக்கத்திற்கு மறைமுகமாகத் துணை போகிறர்கள்! அவர்களை காட்டித்தான், இந்து மதம் காக்க எங்களோடு வாருங்கள் என்று தமிழர்களை அழைத்துக் கொள்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ச.க.வும்!
ஆரிய - பிராமணிய ஆதிக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க என்ன தான் வழி? ஆரிய சூழ்ச்சிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை வீழ்த்த புதுப்புது உத்திகளை கையாள வேண்டும். வெறும் இந்து மத எதிர்ப்பு அவர்களை வீழ்த்தி விடாது! மாற்று செயல் திட்டங்கள் தேவை! அந்த வழிகளில் ஒன்றாக "தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தமிழ் இந்து என்ற செயல் திட்டத்தை முன் வைக்கிறார்
எதற்காக இந்து என்ற சொல்லை முன் நிறுத்த வேண்டும்? ஒரு மதத்தை ஒரு சமயப் பிரிவை அழிப்பது எப்படி இயலாதோ, அதுபோல், புதிதாக - செயற்கையாக ஒரு மதப் பெயரை ஒரு சமயப் பிரிவை முன்மொழிவது அல்லது திணிப்பது வெகுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான மனித உளவியலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.தமிழர்களின் மரபுவழி ஆன்மிகப் பிரிவுகளில் ஆசான் நிலையில் செயல்பட்டு கொண்டிருக்கும் அறவோர்கள் - துறவோர்கள் சான்றோர்கள் இவ்வாறான மாற்று ஆன்மிகத்தை முன்வைத்தால் "தமிழ் இந்து” கோட்பாடு வெகுமக்கள் ஆதரவைப் பெறும்.
எனவேதான் வெகுமக்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்து மதப்பெயரை முற்றிலும் மாற்றாமல், அதில் ஆரிய - பிராமண - சமற்கிருத ஆதிக்கம் விலக்கப்பட்ட கோட்பாட்டைத் “தமிழ் இந்து” என்ற பெயரில் முன் வைக்கிறோம்.
ஆரிய இந்து வேறு; தமிழ் இந்து வேறு; தமிழ் இந்துக்களுக்கு பகவத் கீதை புனித நூல் அல்ல; பிராமணர்கள் பூசாரிகள் அல்லர்; சமற்கிருதம் புனித மொழி அன்று திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள், கருவூரார் உள்ளிட்ட சித்தர்கள் பாடல்கள், வள்ளலார் பாடல்கள், பாம்பன்சுவாமி. பாடல்கள், வைகுண்டர் மந்திரங்கள் போன்றவையே தமிழ் இந்துவின் புனித நூல்கள் என்று வரையருக்கிறது இந்த செயல் திட்டம்.
நூறாண்டுகளுக்கு மேல் மக்கள் இந்து மதத்திற்குப் பழக்கப்பட்டு, ஆன்மிக உளவியல் வழியாக ஆரிய - பிராமணிய - சமற்கிருத ஆதிக்கத்தை ஏற்றுச் செயல்படும் மன நிலையில் தமிழ்நாட்டுச் சிவ, வைணவ நெறி மக்களும் நாட்டுப் புற - குல தெய்வ வழிபாடு கொண்ட மக்களும் உள்ளார்கள்.
"ஆரிய இந்து", "தமிழ் இந்து" என்று வேறுப்படுத்திப் பிரித்து, தமிழ் இந்துவில் ஆரியம் தலையிடாத தடுப்புச் சுவர் எழுப்பும்.ஒரு செயல் திட்டமே இந்த "தமிழ் இந்து"
பொதுவாக ஒரு வலிமைமின்மை (பலவீனம்) தமிழ்நாட்டு அரசியலில் மக்கள் இயக்கங்களில் நிலவுகிறது. கடந்த தலைமுறைத் தலைவர்கள் - அறிஞர்கள் கொடுத்த குரலை அப்படியே எதிரொலிப்பதே அந்தக் குறைபாடு!
புதிய ஒலி எழுப்புவதைவிட, ஏற்கெனவே உள்ளதை எதிரொலிப்பது எளிது! இந்த நடைமுறை இங்கு அதிகமாக உள்ளது. பாறைகள் கூடத்தான் எதிரொலிக்கின்றன! புதிதாக நாம் கூறினால் அதைக் கலகக் குரலாக, குழப்பக் குரலாக சித்தரிக்கிறார்கள்; பீதி அடைகிறார்கள். நாம் பகைவர்களின் பங்காளியாகி ஆகி விட்டதாக அங்கலாய்க்கிறார்கள்!
வசைபாடுபவர்களுக்கும், அவதூறுகளை பரப்பியவர்களுக்கும் ஒரு தமிழ்த்தேசியவாதியாக நான் கேட்டுக் கொள்வது ஒன்று தான் ஆரிய பிராமணிய ஆதிக்கத்தில் இருந்தது தமிழர்களை விடுவிக்க புதிய செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துங்கள் அல்லது செயல் திட்டம் வைத்து இருப்பவர்களை செயலப்பட விடுங்கள் மாறாக வெறும் இந்து என்று பெயரை மட்டும் வைத்துக் கொண்டு வசைபாடிக்கொண்டு தான் இருப்பீர்கள் என்றால்....?
வாழ்க வசவளார்கள்
சாதி மத வேற்றுமைகள் இல்லாத ஒரு சமத்துவமான புதிய தமிழ்த்தேசியத்தை படைப்போம்.
💪கோடி

Comments
Post a Comment