மாவீரன் சிவாஜி -கோவிந்த பன்சாரே தமிழில்: செ.நடேசன்
வாசிப்பு 48
மாவீரன் சிவாஜி -கோவிந்த பன்சாரே
தமிழில்: செ.நடேசன்
வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது!
– அண்ணல் அம்பேத்கர்
ஐ i- வலையொளியில் நண்பர் அசோக் குமார் மகிழன் அவர்களின் இந்த பொத்தகத்தை பற்றிய அறிமுக காணொளியை(https://youtu.be/HMzkPhKMGoA) பார்த்த பிறகு மிகுந்த ஆர்வம் கொண்டு தேடி 20/02/22 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய பொத்தகம் இது.
எந்த ஒரு சிறந்ததையும் தனது ஆக்கிக் கொள்ளுவதும் முடியவில்லை என்றால் அவற்றை சிறுமைப் படுத்துவதும் ஆரிய திராவிட கூட்டத்திற்கு கை வந்த கலை அப்டி தான் இங்கே பிரமணர்கள்க்கு எதிராக இருந்த ராசா ராசா சோழனை பிரமாண அடிமை என்றும் உதவி செய்த திப்பு சுல்தானை பிரமாண எதிரி என்றும் பொய்யாக கட்டமைப்பு செய்துள்ளார்கள் அந்த வகையில் மஹாராஷ்டிரா வில் இசுலாமிய அரசர்களை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு மாவீரன் சிவாஜியை இஸ்லாமிய எதிரி என்னும் காவி சாயம் புசி அவர் ஒரு காவித் தலைவன் என்ற பொய் பிம்பத்தை நம் முன் நிறுத்தி உள்ளது இந்த rss சங்கி கூட்டம் ஆனால் அந்த சாயத்தை வெளுத்து போக செய்து அவர் காவித் தலைவனல்ல காவியத் தலைவன் என்னும் உண்மையை இந்த பொத்தகத்தின் மூலம் போட்டு உடைகிறார் கோவிந்த் பன்சாரே
மராட்டிய சிந்தனையாளரும், மார்க்சீய அறிஞருமான கோவிந்த் பன்சாரே, உண்மை சிவாஜியை உலகுக்கு இனம் காட்ட எழுதிய 'சிவாஜி கோன் ஹோட்டா' என்ற இந்த நூல் இந்து மதவெறியர்களை ஆத்திரப்படுத்தி அவரைக் கொஸை செய்யவைத்தது, தோழர் கோவிந்த் பன்சாரே, தனது மனைவி உமா பன்சாரேவுடன் 2015 பிப்ரவரி 16ம்தேதி காலை மணியளவில் காலை 9.30 நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது , அவருக்கு எதிரே வந்த மர்மநபர்களால் மிக அருகில் வைத்து நேருக்குநேர் சுடப்பட்டார்.
வெறும் 96 பக்கங்களே கொண்ட இந்த பொத்தகம் இந்த சங்கீகளால் பல ஆண்டுகள் உருவாக்கி வைத்து இருந்த சிவாஜி பற்றியே மாயைகளில் இருந்து நம்மை விலக்கி தெளிவு பெற செய்கிறது. இந்த பொத்தகத்தை திருக்குறளுடன் ஒப்பிட்டாலும் அது மிகை ஆகாது
சிவாஜி என்பவர் யார்? அவர் ஏற்பேற்ப்பட்ட மன்னர்? அவரது ஆட்சி ஏழை மக்களுக்கும் விவசியகளுக்கும் எவ்வாறு அமைந்தது? அவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஒழிக்க வந்தவரா? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு சான்றுகளோடு கூடிய விடையாய் அமைந்து இருக்கிறது இப்பொத்தகம்
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் தனக்கென ஓர் ஆளுகைப்பகுதியைத் தனது அளப்பரிய ஆற்றலாலும், கூர்ந்த சிந்தனைகளாலும் உருவாக்கிக் கொண்டவர் சிவாஜி. மனுதர்ம மதவாதிகள் இவரைச் சூத்திரன் எனக்கூறி முடிசூடிக்கொள்ளத் தடையாக நின்றனர். ஆனால் சிவாஜியின் ஆட்சியில் நிலவிய சட்டமும், ஒழுங்கும், கட்டுப்பாடும், சிந்தனைகளும் 21ஆம் நூற்றாண் டி ன் மக்களாட்சியிலும் காணப்படாதவையாக இருந்தன.
பெண்களின் பாதுகாப்பும், விவசாயிகளுக்கான அரவணைப்பும், ஏழைமக்கள்மீதான நம்பிக்கையும் முன்னெப்போதும் மக்கள் சந்தித்திராதவை... அன்றைய வழக்கப்படி போரில் வெற்றி கொண்ட நாட்டின் அழகிய பெண்ணை மன்னருக்குப் பரிசாக அளித்தபோது, 'இவர் என் அன்னையைப் போன்ற அழகுமிக்கவர்' எனப் பெண்மையையும், தாய்மையையும் போற்றிய பண்பும், எதிரி நாட்டுப் பெண் தளபதியைப் போரில் வென்ற தனது போர்ப்படைத் தளபதி கற்பழித்தார் எனக் கேட்டு அவரது கண்களைக் குருடாக்கிச் சிறையிலடைத்த நேர்மையும், ஏழை விவசாயியின் அன்பு மகளைக் கற்பழித்த நிலப்பிரபுவின் கைகளையும் கால்களையும் வெட்டிச் சிறைப்படுத்திய உறுதியும், தனது படைவீரர்களுக்கு, விவசாய நிலங்களில் விளைந்து நிற்கும் எதுவும், 'ஓர் பயிரின் இலைகூட அவர்களால் தொடப்படக்கூடாது என விதித்த கட்டுப்பாடும், சொந்த மதத்தின் மேட்டுக்குடியினர் எதிர்த்தபோது ஏழைவிவசாயிகள் மற்றும், முஸ்லீம்கள் நம்பிக்கையைப் பெற்றுத் தனது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொண்ட சாதுரியமும் வியப்பூட்டுபவை.
ஆனால்
சிவாஜியை உரிமைக் கொண்டாடும் இந்த சங்கீகள் செய்யும் வேலை என்ன . ஏழைகளையும் விவசிகளையும் கீழ் சாதி என்று கூறி ஓட ஓட விரட்டி கொன்று விட்டு அவர்கள் வீட்டு பெண்களை கற்பழித்து விட்டு அவர்களை வாயோடு சேர்த்து வெட்டி கொன்று விட்டு ஜெய் சிவாஜி என முழக்கம் விடுகிறார்கள் உண்மையில் இவர்கள் எல்லாம் மனித பிறப்பு தான? இவர்கள் செய்யும் கொடுமைக்கு எல்லாம் அந்த மாவீரனின் பெயரை துணைக்கு இழுத்து அவர்க்கு கலங்கம் விளைவிக்கிறர்கள் .உண்மையில் இந்த சங்கி கூட்டத்திற்கு அவரின் பெயரை சொல்ல கூட எந்த அருகத்தையும் இல்லை
சரி அவர் முஸ்லிம் மார்க்கத்திற்கு எதிரானவர? இல்லவே இல்லை அப்டி இருந்து இருந்தால் அவரின் படைகளில் முக்கிய தலைமை பொறுப்புகளில் இஸ்லாமியர்கள் எப்படி இருந்தார்கள்? அப்டி என்ன பொறுப்புகளில் அவர்கள் இருந்தார்கள் இதை நம் திரையுலக கேப்டன் விஜயகாந்த் பாணியில் சொன்னால் தான் சரியாக இருக்கும்!
பீரங்கிப்படை தலைமை தளபதியாக இருந்தது இப்ராஹிம் கான் என்னும் ஒரு முஸ்லிம்!
கடற்படை தலைவராக இருந்தது தௌலத்கான் என்னும் ஒரு முஸ்லீம்!
சிவாஜியின் தனிப்பட்ட மெய்க்காவலர்களில் ஒருவராக இருந்தது மாதாரி மெஹ்டர் என்னும் ஒரு முஸ்லிம்( இவர் தான் சிவாஜி ஆக்ராக் கோட்டையில் இருந்து தப்பி செல்ல தன் உயிரையும் பணயம் வைத்து உதவியவர்)
காலாட்படைத் தளபதியாக இருந்தது நூர் கான் பெக் என்னும் ஒரு முஸ்லீம்
இப்படி கடைசிவரை உடன் இருந்து அவரை பாதுகாத்தவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் . இது பொய் பரப்பும் சங்கீகளுக்கு தெரியுமோ தெரியாதோ?அதை நம்பி அவரை தூற்றும் இஸ்லாமியர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? எல்லாம் வல்ல அந்த இறைவன்க்கும் உண்மை வரலாற்றை தேடி படிப்பவர்கள்க்கும் தெரியும்!
இது போல பல திரிபுகளும் திணிப்புகள் தமிழக வரலாற்றிலும் அதிகம் நிகழ்ந்து உள்ளது .பல உண்மையானா தலைவர்களும் மறைக்கப்பட்டு உள்ளார்கள் அதை அன்னைத்தையும் தேடி மீட்டு எதிர்கால தலைமுறைக்கி தந்து விட்டு செல்லுவோம் இல்லை என்றால் நம்மை போல நம் அடுத்த தலைமுறையும் தன் உரிமைகளை இழந்து சலுகைகளுக்காக கை ஏந்தும் பிச்சைக்காரர்களாகவே தான் இருக்கும்
வரலாறு இல்லாதவனுக்கு நிகழ்காலம் இல்லை!
நிகழ்காலம் இல்லாதவனுக்கு எதிர்காலம் இல்லை!
💪 கோடி

Comments
Post a Comment