தமிழர் அறிவியல் மரபு

வாசிப்பு 40

தமிழர் அறிவியல் மரபு





என்னடா இருக்கு உன் தமிழில் , அது முட்டாள்களின் மொழி, காட்டுமிராண்டி மொழி, நிஷபாஷை இப்படி பல ஆண்டுகளாக சொல்லி சொல்லி தமிழையும் தமிழர்களையும் தாழ்த்தி புறக்கணித்து அயலார் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழால் ஒன்றும் ஆகாது தமிழினத்திற்கு ஒன்றும் தெரியாது, ஆங்கிலேயர்களால் தான் நமக்கு அறிவியல் அறிமுகமானது போன்றத் தவறானக் கருத்தை நம்மிடம் பரப்பி நம்மை தாழ்வுமனபான்மையில் குனிக்குறுக வைத்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டு இருக்கிறது ஒரு கருப்பு ஆடுகளின் கூட்டம். அதற்கு நம் தமிழினத்தின் கணிசமானவர்கள் துணை போவது தான் இங்கே வேதனைக்குரியது. 


இவைகளை அவர்களால் எப்படி சாதிக்க முடிந்தது என எண்ணி பார்க்கையில், அன்று தமிழர்களுக்கு வரலாற்று அறிவு குறைவு. அதை பயன்படுத்தி தமிழர்களின் உண்மையான வரலாறை அவர்களிடம் போய் சேர விடாமல், அவர்கள் சொன்ன கதைகளையும், பொய்களையும் தமிழர்களின் உண்மையான வரலாறு என நம்ப வைத்து, கேள்வி கேக்கும் வரலாறு அறிந்த சில தமிழர்களையும் பயமுறுத்தி அடக்கி உள்ளது இந்த கருப்பு ஆடு கூட்டம். ஆனால் இனி அவர்களின் தந்திரம் பலிக்காது 2009ஆம் ஆண்டு இன அழிப்புக்கு பிறகு தமிழர்கள் தங்கள் வரலாற்றை தேடி படிக்க ஆரம்பித்து உள்ளார்கள். தமிழில் என்னடா இருக்கு? என்று இகழும் அந்த கருப்பு ஆடு கூட்டத்திற்கு பதிலடியாக  ஆய்வாளர்கள் மற்றும் முனைவர்கள் போன்றவர்களின் தமிழர் பற்றிய சான்றுகளோடு அமைந்த கட்டுரைகளை தொகுத்து வெளியாகி உள்ளது "தமிழர் அறிவியல் மரபு" என்ற இந்த பொத்தகம்


தமிழில் இல்லாத ஒன்று இந்த உலகத்தில் எங்குமே இருந்து இருக்க முடியது . தமிழில் என்ன இல்லை? மருத்துவம், வேளாண்மை, கட்டடாக்கலை, சிற்பம், ஓவியம் மற்றும் அறிவியல் இவைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழர்களும் தமிழ் மண்ணுமே. இத்தனை இருந்தும் 


எப்படி அவைகள் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டது ?


நம் சிந்தனைகளில் இருந்து மறக்கடிக்கப்பட்டன?

 

எப்படி மகத்தான நம் அறிவியல் தொழில்நுட்பங்களை இழந்தோம்?


 என்ற நம் கேள்விகளுக்கு இந்த பொத்தகத்தில் "கலியுகம்" என்று பகுதியில் தமிழிய ஆய்வாளர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  அவர்கள் எழுதிய வரிகள் பொருத்தமான பதிலாக இருக்கிறது 


"தமிழர் வாழ்வோடு இணைந்த பல அறிவியல், பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை நாம் இழந்துள்ளோம். அவற்றை வைதிகம், தனதாக்கிக் கொண்டதாலும், மூலச்சுவடுகள் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டதாலும், பெயர்களும் குறியீடுகளும் சங்கதமாகத் திரிக்கப்பட்டதாலும் அவையெல்லாம் நமக்கு உரியன அல்லவென நாமே ஒதுக்கியும் கொண்டதாலும் அவை நமக்கு உரிமையற்றனவாய்ப் போய்விட்டன. அத்துடன் தமிழ் இன உணர்வைப் புறந்தள்ளிய போலிப் பகுத்தறிவு வாதங்களும் நமக்கு வரலாறே இல்லாதது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன"


ஐயா ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் இந்த பொத்தகத்தில் சொல்லியது போல திருடு போன நமது அறிவியல் மரபை நமது இல்லை என்று ஓதிக்கியதாலும் , தமிழ் இன உணர்வைப் புறந்தள்ளிய போலிப் பகுத்தறிவு வாதங்களை நம்பியதாலும்  நாம் முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் , சனியங்களாகவும் மற்றும் தாய்ப்பால் பைத்தியகளாகவும் மாற்றப்பட்டு நம் மண்ணிலேயே மறைமுக அகதிகளாக ஆனோம்!


இந்த பொத்தகத்தை படித்த பிறகாவது நம் விழிப்போம், இழந்ததை மீட்போம் ,இருப்பதை காப்போம்


💪கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு