தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பாகம் 2. ஆசிரியர்-கிருஷ்ணவேல்.T.S.

 

வாசிப்பு 39

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பாகம் 2. ஆசிரியர்-கிருஷ்ணவேல்.T.S.




இதன் முதல் பாகத்தை படித்து விட்டு அதில் உள்ள பிராமண துவேஸதை தவிர கொடுக்கப்பட்ட வரலாற்று தகவல்கள் என்னை மிக பெரிய வியப்பில் ஆழ்த்தியது. அதை சில நண்பர்களுக்கு பரிசாகவும் கொடுத்தேன்.திருப்பதி, சபரிமலை, தரவாடு வீடு, தஞ்சாவூர் பெரியகோவிலில் இருக்கும் வெள்ளைக்காரன் சிலை என்று கலந்துக் கட்டி வரலாற்றில் நமக்கு தெரியாத பக்கங்களை நம் முன் விரித்து இருப்பார். அதனால் இதன் இரண்டாவது பாகத்திற்காக வெகுகாலம் காத்து இருந்தேன் ஆனால் sumi hari யின் மதிப்புரையை படித்து விட்டு, இது உடைக்க வேண்டிய furniture என்று முடிவுக் கட்டி priyadharshini gopal அவர்களிடம்  பொத்தகத்தை இரவல் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.படித்த பிறகு தான் இதை படிப்பதற்கு பதிலாக ஒரு bottle பாலிடாயில் வாங்கி குடிவிடாலம் என்று தோன்றியது அவ்வளவு புளுகுகள். எங்க ஊர் கோவையின் வட்டாரமொழியில் அண்ட புளுகு ஆகாச புளுகுன்னு சொல்லுவாங்க ஆனால் இது  உலக மகா புளுகுகளாக இருக்கிறது.


ஆசிரியர் கிருஷ்ணவேல்.TS பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பொத்தகம் வெற்றி அடைந்து விட்டாதால் தன்னை ஒரு வரலாற்று எழுத்தாளர் என்று நம்பி கொண்டு இருப்பவர். ஒருவன் எவ்வளவு பெரிய வெற்றியாளனாக , திறமையாளனாக இருந்தாலும் அவன் உடலில் நூல் மட்டும் இருந்து விட்டால் போதும் அவனை ஒன்றுக்கும் ஆகாதவன் அவன் ஒன்றும் பெரிதாக  சாதித்து கிழித்து விடவில்லை என்று தனது பொய்யான ஆதாரங்களால் கட்டம்கட்டி அடிப்பதில் இவர் கில்லி. பாரதியார் முதல் சுஜாதா வரை இவரிடம் சிக்காத ஆள்களே இல்லை. சமீபத்தில் இவர் வெளியிட்ட உ.வே.சா தமிழ் தாத்தாவா ? என்ற நூலில் உள்ள புரட்டுக்களை ஐ i வலையொலி அசோக்குமார் மகிழன் அவர்கள் தகுந்த ஆதாரங்களால் அடித்து நொறுக்கியது வேறு ஒரு கதை. சரி இந்த புத்தகத்திற்கு  வருவோம்.


ஒரு மனிதன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் எல்லாம் பேச கூடாது என்னும் கவுண்டமணி வசனத்திற்கு ஏற்ப பொய்களால் நிரம்பிய பொத்தகமாக இது உள்ளது. ஜான்சி ராணி லட்சுமி பாயை ராணியே இல்லை என்றும் அவர் கணவர் மகாராஜா கங்காதர் ராவ் நெவல்கரை அரசரே இல்லை என்றும் அவர்கள் வெறும் ஜமீன்தார்கள் மட்டுமே என்றும் கொஞ்சம் கூட கூசாமல் அளந்து விடுகிறார். அதுவும் இல்லாமல் ஜான்சி ராணி லட்சுமி பாய்  சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை புனிதம்  என்று சொல்லி ஆதரித்தாராம். நான் கேக்கிறேன் அப்படி ஆதரித்தவர் ஏன் உடன்கட்டை ஏறவில்லை? தன் நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்து விட கூடாது என்பதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதங்களை ஏதோ சாவக்கர் எழுதிய அடிமை சாசனம் போல குறிப்பிட்டு கொச்சைப்படுத்துகிறார்.


சரி அப்படியே தமிழ்நாட்டின் பக்கம் வந்தால் வேலுநாச்சியாரை புகழ்வது போல பொய் வரலாறை திணிக்கிறார். காளையர் கோவிலில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பிறகு வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளாச்சியோடும் மருது சகோதரர்களோடும் தப்பித்து விருப்பாச்சிக்கு சென்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார். இது என்ன உண்மை என்றால் அந்தச் சமயத்தில் வெள்ளாச்சிப் பிறக்கவே இல்லை.அவர் வேலுநாச்சியாரின் கர்ப்பத்தில் இருந்தார்.  சரி இது கூடப் பரவயில்லை . குயிலியை கொண்டு ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கை தற்கொலைப் படையாக  அழித்தார் வேலுநாச்சியார் என பெருமையாக குறிப்பிடுகிறார். ஆனால் குயிலி என்பவள் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று கூட தெரியாத ஒரு தற்குறியாக இருந்து கொண்டு தன்னை ஒரு வரலாற்று நூல் ஆசிரியர் என்று எண்ணி கொள்கிறார். ஒரு படைப்பாளியின் படைப்புகளை விமர்சனம் செய்யவோ அல்லது கழுவி ஊற்றவோ அந்த படைப்பை படிக்கும் அனைவருக்கும் உரிமை உண்டு  ஆனால் அதை எப்படி எழுதினார், எங்கே எழுதினார், எதை செய்து அல்லது செய்யாமல் எழுதினார் என்பது எல்லாம் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.மேலும் அது ஒரு கீழ்த்தரமான செயலும் கூட . எழுத்தாளர் சுஜாதா பற்றி இந்தப் பொத்தகத்தில் சொல்லி இருப்பது எல்லாம் முழு வன்மத்தின் வெளிப்பாடு. ஆசிரியரை குறை சொல்ல முடியாது அவர் சார்ந்த இயக்கம் கற்று கொடுத்த பாடம் அப்படி


இன்னும் சொன்னால் சொல்லி கொண்டே போகலாம்  அப்டி ஓர வஞ்சனை இல்லாமல் புளுகி வைத்து உள்ளார் மனிதர். பூலிதேவரை கொன்றது மருதநாயகமாம் . மருத நாயகத்தின் இறப்பு 1764 பூலித்தேவன் இறந்தது 1767 . அது எப்படி திமிங்கலம்?  ஒரு வேளை ஆவியாக வந்து கொன்று இருப்பாரோ?  திராவிடம் என்னும் தலைப்பில் திராவிடத்தின் சாதனை என்று ஒன்றை குறிப்பிட்டு உள்ளார் அதை படித்து விட்டு சுமார் 15 நிமிடம் விழுந்து விழுந்து சிரித்தேன். என்னடா இவ்ளோ கீழே இறங்கிட்டிங்க என நினைத்து கொண்டேன் ஆனால் ஒன்று திராவிடதை ஒழிக்க தமிழ்த்தேசியர்கள் தேவையில்லை இவரை போன்ற திராவிட எழுத்தளார்களும் முகநூல் பதிவர்களுமே போதும் திராவிடம் கூடிய விரைவில் விழும். 


 சரக்கு இல்லை என்பதால் என்னவோ தெரியவில்லை  கடைசியில் பக்கங்களில் வரலாற்றை விட்டு விட்டு தமிழ் இலக்கணம் மற்றும் பொருளாதார பாடம் எடுக்க ஆரம்பித்து விடுகிறார் என்னடா ஒரு வரலாற்று நூலுக்கு வந்த சோதனை ஆக மொத்தத்தில் இது வரலாற்று நூல் அல்ல இன்னும் சொல்ல போனால் வரலாறு என்று எழுதக் கூட தகுதி இல்லாத நூல் இது. எனது வன்மங்களும் பொய்களும் என்று தலைப்பு வைத்து இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.



மீண்டும் சொல்கிறேன் இந்த பொத்தகத்தை படிப்பதற்கு பதிலாக ஒரு bottle பாலிடாயில் வாங்கி குடித்துவிடலாம்.


🤮 கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு