பெருந்தக்க யாவுள-யாத்திரி கார்த்திக்

 வாசிப்பு 35


பெருந்தக்க யாவுள-யாத்திரி கார்த்திக்





(16 வயது மேற்பட்டவர்களுக்கான கதை இது)


வால்கா முதல் கங்கை வரை எனக்கு தாலாட்டு படிக்க! எப்பவும்  தீவிர கருத்தை படிக்காமல் கொஞ்சம் யாத்திரி கவிதைகளை படியுங்கள் என ஐயா Prasancbe Thamirabarani  எடுத்துரைக்க! நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு என்ற நகைப்போடு தோழி Priyadharshini Gopal   இந்த பொத்தகத்தை படிங்க திருந்துவிங்கன்னு பரிந்துரைக்க! உடனே  நான் byng செயலியை பதிவிறக்கம்  செய்து படிக்க ஆரம்பிக்க. எருக்கஞ்செடியின்  விதை வெடித்து தாத்தா பூச்சியாக வெளியே பறப்பது போல் என்னுள் இருந்த கொஞ்ச நஞ்ச கசடுங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியேறி நான் பரிசுத்தமானவன் ஆனேன்!


எஸ்.ரா வின் துணையெழுத்து பொத்தகத்திற்கு பிறகு என்  மேல் தொடர் தாக்குதல் நிகழ்த்திய தொடர் இது .மொத்தம் முப்பது அத்தியாயங்களும் பெண்ணின் உணர்வுகளும், தேவைகளுமே இதில்  பேச்சு பொருள்


மேகலா மற்றும் அனுபமா என்ற இரண்டு பெண்களின் கதை இது. ஒருத்தி இந்தச் சமூகத்துக்குப் பயந்து வாழ்பவள்.இன்னொருத்தி தன்னுடைய வாழ்வை தனக்காக வாழ்பவள். இக்கதையில் முதலாமானவள் எப்படி இந்தச் சமூக பயத்திலிருந்து விடுபடுகிறாள் என்பதும், இரண்டாமானவளை இந்தச் சமூகம் எப்படியாக பாவிக்கிறது என்பதும் கதையின் one line


பெண்கள் இருவருக்கும் இடையேயான நட்பு, அவர்கள் வாழ்வில் ஆண்களோடு ஏற்படும் காதல், காமம், நட்பு, உறவு, பிரிவு, விரக்தி, புரிதல் இவைகளை வைத்து பெண்கள் மீது ஆண்கள் கொண்டு இருக்கும் பொது புத்திக்கு சவுக்கடி கொடுத்து உள்ளார் ஆசிரியர் யாத்திரி கார்த்திக்


உலகில் ஒவ்வொரு உயிருக்கும்  ஒவ்வொரு தேவை இருக்கும் ஒவ்வொன்றும் தனித்துவமானது. வித்தியாசமானது ஒரே மாதிரியான தேவைகளாலும் அதை நிறைவேற்றி கொள்ளும் அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்ற அவசியங்கள் இல்லை.இது தான் சிறந்தது என்றும் தாழ்ந்தது என்றும் ஓப்பிடு செய்ய முடியாது. காமமும் அப்படி தான் சிலருக்கு அது மூடி வைக்கப்பட்ட ஆபாசம் சிலருக்கு அது வெளிப்படையான கொண்டாட்டம்.


நாமெல்லாம் நாகரிகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக்கிறோம் ஆனால் நாம அநாகரிகமானவர்கள். எப்போது நாகரிகத்தை ஆணின் பெண்ணின் பிறப்புறுப்புக்குள் கொண்டு போயி வச்சமோ, அப்பவே நாம அநாகரிகமானவர்கள் ஆகிட்டோம். இந்த நாகரிகத்தால் ஏதாவது பண்பாட்டு முன்நகர்வு நடந்துருக்கான்னு யோசிச்சு சொல்லுங்க. பொம்பளைய பூட்டி வச்சு அடிமைப்படுத்துனது தான், நாம சொல்ற நாகரிகத்தோட பெரிய சாதனை. நம்மளே ஒரு ஒழுக்கத்தை கட்டமைக்கிறோம் அந்த கட்டமைப்புக்குள் வரும் பொம்பளையே உத்தமி என்றும் அதற்குள் வராத பொம்பளைய வேசி என்றும், நடத்தை கெட்டவள் என்றும் பிம்பத்தை உருவாக்குகிறோம். இதில் எந்த பெயரும் ஆணுக்கு கிடையாது .அவன் எப்பொழுதும் ஆண் தான். ஆம்புள சிங்கம் தான். கெடுகெட்ட சமூக நீதி சமுதாயத்தில்


அவனுக்கு பல பெயர்கள் இல்லை என்றாலும் பல வேடங்கள் உண்டு. அதுவும் ஒரு பெண்ணை தொட வேண்டும் என்ற அல்ப ஆசைக்காக  புத்திசாலியாக, நண்பனாக, அக்கறை உள்ளவனாக, முற்போக்கு சிந்தனை

கொண்டவனாக, ப்பா... சின்னக்குழிக்கு எத்தனை நாடகம்!  


கட்டிப்பிடித்து உருண்டு தழுவி உண்டாகும் வெப்பத்தை இருவரும் சமமாக தான் பரிமாறிக் கொள்கிறார்கள் ஆனாலும் இந்த உலகம் பொம்பளைய மட்டுமே கற்பு என்னும் வட்டத்துக்குள் நிறுத்தி தண்டனை வழங்குகிறது


இந்த கதையில் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் இருப்பினும் கொட்டும் அருவியின் ஓங்கார சத்தத்தில் நம்மை சுற்றி இருப்பவை எல்லாம் நிசப்தம் ஆகி விடுவது போல. அனு என்ற ஒற்றை கதாபாத்திர படைப்பு மற்றவைகளை எல்லாம் நம் நினைவில் இருந்து எடுத்து விடுகிறது


கற்பு என்னும் பொய் கற்பிதல் மீதும். பெண்களின் மீது ஆண்களுக்கு இருக்கும் அணுகுமுறை மீதும் அனுவைக் கொண்டு அணுகுண்டு  போடும் முயற்சியே யாத்திரி கார்த்தியின் இந்த பெருந்தக்க யாவுள 


இந்த தொடரை படித்து முடித்த பிறகு என்னுள் இருந்தது ஒரே கேள்வி தான் எப்படி  பெண்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் இவ்ளோ தத்துரூபமாக ஒரு ஆணால் எழுத்தில் வடிக்க முடிந்தது?


மனக்கழிவுகள் அகன்று மனித நிலையை கடந்து, உள் சென்று தெய்வ நிலைக்கு அருகில் வியப்புடன்..


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு