மாபெரும் தமிழ்க் கனவு

வாசிப்பு 32



திராவிட எதிர்ப்பு நிலைப்பாட்டை நான் எடுத்த பிறகு  அதுவரை என்னிடம் நட்பு  பாராட்டி வந்த பல நண்பர்கள் என்னை நட்பு நீக்கம் செய்தார்கள். நான் பெரிதும் மதித்து வந்த சிலர் அவர்களின் பதிவுகளின் போடும் பின்னுட்டுங்களை அழித்தார்கள். ஆரம்பத்தில் அது எனக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியது. என் சிந்தனைகளையும், எழுத்துகளையும் சிறிது காலம் முடக்கி போட்டது. தான் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால் தான் உன் நட்பை தொடர்வேன் என்பது என்ன மனநிலை என்பது இப்போது வரை எனக்கு புரியாத புதிர்.


அந்த சமயத்தில் திராவிட  சித்தாந்தத்தை நம்பும் . திராவிடம் தான் அனைத்து நன்மைக்கும் காரணம் என்று உறுதியாக சொல்லும் தோழி ஒருவர் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் திராவிடத்தை தவறாக புரிந்து கொண்டு  உள்ளீர்கள் என்று கூறியதோடு இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் என்று ஒரு புத்தகத்தை பரிசாக அனுப்பி வைத்தார் அந்த புத்தகம் தான் அறிஞர் அண்ணாவின் "மாபெரும் தமிழ் கனவு"அந்த தோழிக்கு என் நன்றிகள். எதற்க்காக நன்றி புத்தகத்திற்காகவா இல்லை!  எனது தமிழ்த்தேசிய உணர்வு சரிதான் என உறுதி செய்தற்காக! ஒரு வேளை இந்த புத்தகத்தை நான் படிக்காமல் போய் இருந்தால் நட்புக்காக என் கொள்கைகளில் இருந்து  சற்று விலகி இருக்க கூடும்? இப்போது இருக்கும் கட்சியும் அன்று அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியும் ஒன்று என்ற எண்ணத்திலேயே இருந்து இருப்பேன்.  நல்ல வேளையாக தக்க சமயத்தில் இந்த புத்தகம் என்னை வந்து சேர்ந்தது, அண்ணாவின் பல தரப்பட்ட ஆளுமைகளின் 800 பக்க தொகுப்பே இந்நூல்.


அறிஞர் அண்ணா மீது எனக்கு சில சந்தேக விமர்சனங்கள் இருந்தாலும் அவை அனைத்துக்கும் நேர்மாறாக நான் அறிந்தவற்றில் இருந்து வேறு ஒரு அறிஞர் அண்ணாவை இந்த புத்தகத்தின் வழியாக  என்னால் உணர முடிந்தது. திராவிடத்தில் இப்படி ஒரு தலைவர் இருந்தாரா? என  என் விழி விரிந்து போனேன்!  திராவிட தலைவர் என்ற போர்வையில் ஒரு தமிழ்த்தேசிய  தலைவராகவே வாழ்ந்து உள்ளார். இப்போ தமிழ் தேசிய கட்சிகள் பேசும்  மாற்று பொருளாதாரம் உள்பட அனைத்து விஷயகளையும் அன்றே பேசி நடைமுறை படுத்த முயற்சித்து உள்ளார்.  அவர் வழி வந்தவர்கள் என்று கூறி கொள்ளும் உடன்பிறப்புகள் தமிழ்த்தேசிய தலைவர்கள் பேசியதை கேலி செய்கிறேன் என்ற பேரில் அறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனைகளை கேலி செய்கிறார்கள் என்று என்னால் இந்த புத்தகத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே இருந்து வந்த நாடகம், சினிமா இரண்டையும் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வாகனமாக மாற்றி, புராணக்கதைகளையும் ஆங்கில நாடங்களின் தழுவல்களாகவும் இருந்து வந்த நாடக மேடைகளை சமூகச் சீர்திருத்தமும் அரசியல் விமர்சனமும் பேச வைத்தார்.அதனால் சிறைக்கும் சென்றார் இந்த மாபெரும் பரிமாண மாற்றங்களை அண்ணாவுக்கு முன் வேறு ஒருவர் செய்தார் என்பதற்கான சான்று நான் அறிந்த வரலாற்றில் எங்கும் இல்லை ஆனால்  அது அவை இக்காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களின் கைகளுக்கு போக காரணமாக அமைந்தது வேதனைக்குரியது


பெரியரோடு என்ன தான் கொள்கை முரண் இருந்தாலும் கிட்ட தட்ட 20 ஆண்டுங்களாக கட்சியின் தலைவர் பதவியை அவர் இறக்கும் வரை காலியாகவே வைக்கப்பட்டு அவர் அவைத்தலைவர் என்ற பொறுப்பிலேயே இருந்தார், அப்படி ஒரு முற்போக்கு சிந்தனையாளராக அண்ணா விளங்கினார். ஆனால், அவர் மறைவுக்கு பிறகு அந்த அவைத்தலைவர் பதவியை நீக்கி விட்டு  கட்சி தலைவர்  பதவியில் வேறு ஒருவர் அமர்ந்தார் அது யார் என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை


மதுவிலக்குத் திட்டம் சரிவர நடக்கவில்லை என்றாலும் அதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடு செய்வதற்கு மத்திய அரசு உதவவில்லை என்றாலும் மதுவிலக்குத் திட்டத்தினால் அரசு வருமானம் குறையும் என்றாலும் எந்த நிலையிலும் நான் மதுவிலக்குத் திட்டத்தைக் கைவிட மாட்டேன் அப்டி சாராயக்கடை வருமானத்தில் தான் நான் ஆட்சியில் தொடர வேண்டும் என்றால் துண்டை  உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவேன் என்ற  அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியில் தற்போது எண்ணற்ற உற்பத்தியாளர்கள்


அன்றும், இன்றும் பிரிவினை வாதம் என்று சொல்லப்படும்  கோரிக்கையான ஒன்றிய அரசில் இருந்து விலகி தனி தமிழ்நாடும் மற்றும் மாநில சுயாட்சியும் மிக தீவிரமாக முன் மொழிந்தவர். அவரின் திராவிட நாடு கோரிக்கையும் கூட தனி தமிழ்நாடு உருவாக்க அவரின் தந்திரமாகவே எனக்கு படுகிறது. மேலும் இன்று அனைவராலும் கேலி செய்யப்படும்  வேளாண்மை திட்டத்தை அன்றே முன்மொழிந்தார்.அது படித்தவர்களை விவசாயத்திலும், பால் பண்ணையிலும், கோழி, ஆடு வளர்ப்புத் துறைகளிலும் ஈடுபடுத்துவது. சென்னையைச் சுற்றிக் கடல் இருக்கிறது. ஆகவே, கடல் சம்பந்தமான தொழில்களைத் தொடங்குவது. இப்படி தமிழ்த்தேசிய கட்சிகள் முன் வைக்கும் பலவற்றை முதல்முதலாக முன்மொழிந்தவர் அறிஞர் அண்ணா தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அறிஞர்  அண்ணா பேசிய அளவுக்கு இப்போது கூட தமிழ்த்தேசிய கொள்கைகளை யாரும் பேசி விடவில்லை.


காமராஜர் தோற்ற போது குதுகளித்த கட்சி உறுப்பினர்களை கடிந்து தவறான நேரத்தில் காமராஜர் தோற்று உள்ளார். இனி அவரை போல் ஒரு தமிழன் ஆட்சிக்கு வர ஆயிரம் வருடம்  ஆகும் என வேதனை அடைந்து உள்ளார் என்றார், என்ன ஒரு தெய்வ வாக்கு போல ஒரு வார்த்தை. பெரியாரின் அண்ணன் மகனான ஈ வி கே சம்பத்  கருத்து வேறுபாடு காரணமாக விலகி சென்று உணணாவிரதாம் இருக்க, அந்த சமயத்தில் தானும் உண்ணாமல் இருந்து . ஓடி சென்று சம்பத் அவர்களை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை முடிக்க செய்து உள்ளார். இதை எல்லாம் படிக்கும் போது அரசியல் கொள்கை முரணுக்காக என்னை நட்பு நீக்கம் செய்த, முக்கியமாக பின்னுட்டத்தை அழித்த அண்ணாவின் வழி வந்த தொண்டர்களை நினைக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது


இரண்டே ஆண்டுகள் தான் நாட்டை ஆண்டு இருந்தாலும் பல வருடங்களுக்கு அசைக்க முடியாத மக்களின் நலனுக்காக கொள்கைகளையும்  திட்டங்களையும் கூடிய ஒரு மிக பெரிய கட்டமைப்பை கட்டி விட்டு சென்று உள்ளார் அறிஞர் அண்ணா . நாம் பாதுக்காக்க தவறி விட்ட  ஒப்பற்ற தலைவர் அறிஞர் அண்ணா


இவர்  ஒரு எழுத்தாளரா? கதை ஆசிரியரா? பத்திரிக்கையாளரா? பேச்சாளரா? அல்லது தலைவரா? எதில் இவரை அடைப்பது ஆனால் இதில் அனைத்திலும் பயிற்சி பெற நினைக்கும் மாணவர்களுக்கு இவர் ஒரு பல்கலைக்கழகம்


என்னளவில் அண்ணாவின் கனவுக்கும் , கொள்கைகளுக்கும்  மிக பெரிய துரோகமும் , அநீதியும் இழைக்கப்பட்டு உள்ளது என்பது உறுதி. அவர் மட்டும்  ஐந்து வருடம் முழுமையாக  ஆட்சி செய்து இருந்தால் தமிழ்நாட்டின் வரலாறே மாறி இருக்கும் என்பது நிச்சயம்.அப்படி நடக்காமல் போனது தமிழர்களில் துரதிருஷ்டம். பொதுவாக தமிழ் இனத்துக்கு வரலாற்று உணர்வு குறைவு என அண்ணா அடிக்கடி வருத்தப்படுவராம் , தமிழ்ச்சமூக  வரலாற்று உணர்வின்மைக்கு அண்ணாவும் பலியானார். அதே நிலைமை இப்போதும் நீடிக்கிறது என்பது தான் என் மிக பெரிய குறை. அதை முடிந்த வரை தீர்க்க நான் முயற்சி எடுப்பேன் . அதை போல அண்ணாவின் மாபெரும் தமிழ் கனவை நிறைவேற்ற நாம் அனைவரும் தமிழராய் ஒன்றிணைவோம்.


தொண்டர்களால் முடங்கி போன என் சிந்தனையும், எழுத்தும் அவர்களின் மூத்த தலைவரால்  புத்துணர்ச்சியோடு எழுச்சி பெற்று உள்ளதில் மகிழ்ச்சி

(இந்த புத்தகத்தை திராவிடர்கள் படித்தார்களோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் தமிழ்த்தேசியவாதிகள் கண்டிப்பாக படிக்க வேண்டும்)



💪கோடி

Comments

Post a Comment

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு