ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்.


வாசிப்பு 30


ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்.

                            


ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பொது விழாவில் என்னிடம் ஒருவர் வந்து உங்களை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்குங்க but where னு  தாங்க தெரியலிங்கனு சொன்னார். அதுக்கு நான்,  வேற எங்கையும் இல்லைங்க  ஐந்து வருடமாக நான் தான் உங்கள் பக்கத்து வீட்டுகாரன் னு சொன்னேன். இத்தனை வருடக்காலம் அவர் அருகில் இருந்தும், தினம் தினம் எதிரில் பார்த்தும்  அவர் என்னை பார்க்கவில்லை. இது மனிதர்களுக்கு மட்டும்  அல்ல. சில நேரம் கடவுளுக்கும் பொருந்தும். எங்கயோ இருக்கும் திருவரங்கத்திற்க்கும் , தில்லைக்கும் இருக்கும் மதிப்பு. பக்கத்திலே இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் , சிவன் கோவிலுக்கு கிடைப்பது இல்லை. 


யானைக்கு   கொடுக்கப்படும் கவனம் எறும்புகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனால் யானை எந்த அளவுக்கு வியப்பானதோ அதே அளவு வியப்பானது எறும்புகள்.  எல்லா எறும்புகளும், குருவிகளும் ஒன்று போலத் தெரிவது போல, மனிதர்களையும் பொதுவில் அறிந்து இருக்கிறோமே தவிர,  அவர்களின் பெயர்கள், விபரங்கள், தனித்துவமும் எதுவுமே தெரிவது இல்லை. தெரிந்து கொள்ள அவசியம் இல்லை என்று நம்புகிறோம். ஆனால்,  ஒவ்வொரு மனிதனும் தனித்திறனும்,  ருசியும், வேட்கையும், போராட்டமும் கொண்டவன். ஒவ்வொருவரிடமும் ஏதோ இருக்கிறது.


எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமும்  தான் இந்த 25 கட்டுரைகளின் மையம். இவர்கள் அன்றாடம் நம் கண்ணில்பட்டு  கடந்து போகிறவர்கள் ஆனால் அவர்களின் சுகத்துக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை. அதை கவனப்படுத்துவதே  எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த ஆதலினால்.


நாம் அனைவரும் நம் பிறப்பிற்கு காரணம் என்று அம்மா அப்பா மட்டுமே என்ற நம்பிக்கொண்டு உள்ளோம். ஆனால் அவர்களையும் விட பெரிய காரணம் கர்ப்பத்தில் இருந்த  நம்மை முதல் முதலாக கையில் ஏந்தும் அந்த மருத்துவச்சி தான். நம்மில் யாருக்கும் அவர் பெயர், முகம், எங்கே இருக்கிறார் ஏன் உயிரோடு தான் இருக்கிறாரா என்று எந்த விபரமும் தெரிவதில்லை.ஆனால் யோசித்து பார்க்கையில் நாம் இந்த உலகில் பார்த்த முதல் முகம் அவர்களுடையது தான் இல்லையா ? கிராமங்களில் மருத்துவச்சி இருந்தாள் அவளுக்கும் தனியாக மதிப்பும் மரியாதையும் உண்டு.யாருக்கு திருமணம் என்றாலும் அந்த மருத்துவச்சிக்கு முதல் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. எப்போதாவது அது தவறும் போது அவள் கோபத்துடன்,  இது நான் கொண்டு வந்து போட்ட உசிரு எனக்கு இல்லாத உரிமை யாருக்கு என்று சொல்லி அதை கேட்டு வாங்கி செல்வாள்.ஆனால் நவீன மருத்துவமனைகள் வந்த பிறகு மருத்துவச்சிகள் ஒதுக்கப்பட்டு இழிநிலைக்கு  தள்ளப்பட்டார்கள்.அப்படி புறக்கணிக்கப்பட்ட மருத்துவச்சிகள் மனவேதனை தாளமுடியமல் பொது மருத்துவமனையில் குப்பை கூட்டும் பெண்ணாக வேலைக்கு சேர்ந்து பூனையைப் போல பிரசவ அறையை சுற்றி வருவதையும் துரத்தப்படுவதையும்  முன் தலைமுறைகள் பார்த்து இருக்க கூடும். அந்த மருத்துவச்சிகளின் நீண்ட அனுபவங்கள் சவ ஊர்வலத்தில் வீசி எறியப்படும் மலர்களை போல எவருக்கும் பயனற்றுப் போய்விட்டது.


இந்த முழு ஊரடங்கு எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்து வண்ணம் உள்ளது  அதில் முக்கியமானது முகத்திருத்தம்  செய்வோரின்  முக்கியதுவோம். ஊரடங்கு அறிவித்தவுடன் சராயக்கடைக்கு சரி சமமாக கூட்டம் கூடியது சலூனில் தான். "முடி வெட்டும் தொழில் செய்யும்தோழந்தான் இல்லையேல்

நமக்கெல்லாம் ஏது அழகு" என்ற சந்திரமுகி பட பாடல் தான் ஞாபகம் வருகிறது. தளபதி ரஜினி மாதிரி வெட்டுங்கள் அண்ணே என்று சொல்லி   அமர்ந்தால் கடைசியில் குணா கமல்ஹாசன் போல முடி ஆனக்  கதை பெரும் கதை. அந்த கதையை இயக்கியது அவர்களின் தந்தை என்று  90's கிட்ஸ்கள் பல ஆண்டுங்களுக்கு பின் தெரிந்துக் கொண்ட ரகசியம்.ஒவ்வொரு மனிதனும் சலூன் நாற்காலியில் வீற்றிருக்கும் நிமிடங்களில் தன்னை அறியாத ஒரு தியான உணர்விற்கே ஆட்படுகிறான், கொடியிலிருந்து ஈரத்துணி நழுவி விழுவது போல அவனறியாமல் மனது நழுவி விழுகிறது.காரணம், கண்ணடி முன் நிற்கும் போது மட்டுமே நாம் மனது நம்மை கவனிக்கிறது. கண்ணடி முன் நிற்கும் போது தான் பலருக்கு அவர்களின் வயது ஞாபகம் வருகிறது. அந்த அந்த வயதில் இருந்த முகங்கள் கண் முன்னே ஊஞ்சல் ஆடுகிறது. இந்தியா முழுவதும் சலூன்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. இந்தியா முழுவதும் சலூன்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. சுழலும் நாற்காலியும், தண்ணீர் பீச்சி அடிக்கும் பாட்டிலும் கடைகளில் மாட்டி வைக்கப்பட்டுள்ள கவர்ச்சிப் படங்களும் முகம் திருத்துபவரின் விரல்கள் ஊர்ந்து செல்லும் மென்மையும். காலமாற்றத்திலும் அழிந்து போகாமல் அப்படியே உள்ளன.நாம் பார்க்காத நம் முகத்தின் நுணுக்கங்களை முகம் திருத்துபவர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் கண்கள் முகத்தை வாசிக்கின்றன. புருவம் எப்படியிருக்கிறது. உதடு எப்படியிருக்கிறது. காது மடல் எப்படி வளைந்திருக்கிறது என்று சித்திரக்காரனைப் போல அவதானிக்கின்றன. பிறகு, நம் முகத்தோற்றத்திற்கு எது பொலிவு தரக்கூடியது என்று அவர்கள் மனது முடிவு செய்கிறது. ஆனால் நவீன வளர்ச்சியால் பல அழகு நிலையங்கள் தோன்றி . மரத்தடியிலும், தெரு ஓரங்களில்  30 வருடங்களுக்கு மேல் சலூன் வைத்து இருந்தவர்களின் அனுபவங்கள் இந்த தலைமயிரை நேத்து வரைக்கும் சீவி சிங்காரிச்சிட்டு வெட்டிப் போட்ட மறுநிமிடம் குப்பைனு தூற எறியர மாதிரி  ஆகிப்போச்சு.


ஆதலினால் இந்த நெருக்கடியான வாழ்க்கையால் பல உன்னத மனிதர்களையும், இயற்கையான சப்தங்களையும், சுகந்ததையும் கடந்தும்  கவனிக்காமல் அவைகளின் நெருக்கத்தை  விட்டுவிட்டோம். குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு நாளாவது இந்த உலகத்தோடு இயைந்து அருகில் இருப்போரை உணர்வோம்


✍️கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு