அர்த்தமற்ற இந்து மதம் - மஞ்சை வசந்தன்

 வாசிப்பு 27

அர்த்தமற்ற இந்து மதம் - மஞ்சை வசந்தன்



ஒவ்வொரு மனிதனும் அவரவர்களுக்கு விருப்பமான பயத்தை கொண்டு இருப்பது இயல்பே.ஆனால்  ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்று சொன்னவுடனே பயங்களின் குவியல்கள் பின்னுட்டமாக என் பதிவில்.. இல்லை! என் அறிவிப்பில் வந்து குவிந்தது இந்த உலகம் கொரனாவை விட பெரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையே  உணர்த்துகிறது.


இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் சொல்லும் காரணம் இது எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்பதே அவர்களிடம் நான் கேக்குறேன் ஒரு புத்தகத்தின் பெயர்க்கே ஆட்டம் காணும் அளவுக்கு உங்கள் நம்பிக்கை அவ்வளவு பலகீனமானதா? இது  தன் மீது நம்பிக்கை இல்லாதவன்  அந்த பயத்தை தன் மனைவியின் ஆரோக்கியமான நட்பு வட்டத்தின் மீது செலுத்தி அதை துண்டிக்க செய்வதை போன்ற பயந்தகோழித்தனம் தான் உங்கள் பின்னுட்டங்கள் வெளிப்படுத்துகிறது. 


அர்த்தமற்ற இந்து மதம் எழுதி இருப்பவருக்கு அர்த்தமற்ற இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம்  என்று ஏன் எழுத தோன்றவில்லை?  இது கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூல்க்கு மறுப்பாக  எழுதப்பட்ட நூல் என்பது தான் காரணமே  தவிர இந்து மதத்தை தவிர மற்ற மதங்கள் அர்த்தமுள்ளது என்று சொல்வதற்காக அல்ல.

 முதல் பாகத்தின் கடைசி பகுதியில் அர்த்தமற்ற பிற மதங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருப்பதே இதற்காக சான்று.


ஒவ்வொரு வீடுகளிலும் சுத்தம் செய்ய முடியாத  இடங்கள் இருப்பது போல,  ஒவ்வொரு மதத்திலும் மூடநம்பிக்கை இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.  அதேவேளையில் குணத்தையும் குற்றத்தையும் நாடும் போது அவற்றின்  இந்து மதத்தில் குற்றமே மிகை நாடியாக இருக்கிறது என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை.


இந்த நூல் நாம் வாழும் உலகமும்  அதில் கடவுள் நம்பிக்கைகளும் எப்படி  தோன்றியது என்பதில் இருந்து ஆரம்பித்து படிப் படியாக கவிஞர் கண்ணதாசன்  அவர் நூலின் மூலமாக முட்டு கொடுத்த பாவ புண்ணியம் , விதி , மறுபிறவி , சாதி பிரிவினை , சகுனங்கள், கனவுகள், சடங்குகளும் சம்பிரதாயங்களை , ஆவிகள் போன்ற மூடநம்பிக்கைகளை தகுந்த ஆதரங்களோடு  தோலுரித்து உள்ளது.


இரண்டாம் பாகத்தில் நந்தனார், அப்பர் மற்றும் வள்ளலாரை எப்படி நயவஞ்சகமாக கொன்று அவர்கள் கடவுளோடு கலந்து விட்டார்கள் என்று எப்படி மக்களை நம்ப வைத்தார்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் ஆசிரியர்.


பகுத்து அறிவு என்பது இல்லை, இருக்கு என்று சொல்வதில்லை, எது தேவை எது தேவை இல்லை என்று உணர்வது. எதை நீக்கினால் தடைகள் விலகும் என்பதை உணர்த்துவது. எப்பதோ  ஒரு காலத்தில் இயற்கையை பார்த்து பயந்து அதை கடவுளாக வணங்கினால் என்பதற்காக இவ்ளோ அறிவியல் வளர்ச்சி பெற்று அந்த பயம் எல்லாம் தெளிந்த பின்பும்  அதையே திரும்ப திரும்ப செய்வது அறிவீனம் என்பதை  தவிர வேறில்லை. அப்படி உங்களுக்கு கடவுள் அவசியம் என்றால் எந்த வித மூடநம்பிக்கையும் இல்லாத சகல உயிரையும் சமமாக கருதும் வள்ளலாரின் ஜோதி மயமான வழியை பின்பற்றுங்கள். 


மனிதன் ஒரு விசித்திர படைப்பு அவன் உண்மையே காண்பான், உண்மையே கேப்பான்.ஆனால் பொய்யே மட்டுமே நம்புவான். இந்த நூலில் இருப்பது அனைத்தும் பொய் இந்து மதத்தை இழிவு படுத்தவே எழுதப் பட்டுள்ளது என்று கூறுபவர்களுக்கு  அதை நிரூபித்தால் ₹1 லட்சம் பரிசு என்று அறிவித்து உள்ளார்.ஆனால் எனக்கு திராவிடர்கள் மீது நம்பிக்கை இல்லை.  அதனால் நான் இந்த நூலை பொய் என்று ஆதாரங்களோடு மறுப்பு சொல்லுபவற்கு ₹1000 தருகிறேன்.


கண்ணதாசனே ஒரு நாள் மஞ்சை வசந்தனிடம் ஒரு சில சூழ்நிலையில் கட்டாயத்தின் பேரிலேயே நான் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினேன் என்று கூறி உள்ளார் . அப்படி  என்றால் இந்த நூல்களில் எது பொய் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்


(நான் தெய்வ நம்பிக்கை இல்லாதவன் இல்லை ஆனால் நான் தொட்டால்  தீட்டு என்று சொல்லும் கடவுள் எனக்கு தீட்டு)


✍️ கோடி

Comments

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு