ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும் - பிரபு தர்மராஜ்

 

வாசிப்பு 24


ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும் - பிரபு தர்மராஜ்


ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுறதே பெரும்பாடு. அதுவும் சிறுகதை தொகுப்பிற்கு எழுதறதுன்னா வழுக்குமரம் ஏறுற மாதிரிதானுங்க. ஒரு அடி ஏறினா, பத்தடி கீழே இறங்கும். போதாக் குறைக்கு இந்த எழுத்துகாரரு ஆமா, இந்த ஆளு பேரென்ன.. அ.. "பிரபு தர்மராசு" வீட்டுல குடிசைத் தொழிலாக Nitrous oxide தயாரிக்கிறாருன்னு நினைக்கிறேன். அச்சு மையோட சேர்த்து அதைக் கலந்து புத்தகத்தை அச்சடிச்சு இருக்கார். அதுவும் பத்தாம ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கார்.


வார்த்தையோ, அர்த்தமோ புரியாம ஒரு பக்கத்தை முடிக்க தாமதம் ஆயிருக்கு. ஆனால், சிரிச்சு சிரிச்சு தாமதமானது இதுதாங்க முதல் தடவ. தெரியாத்தனமா, வீட்டு கதவை திறந்து வச்சுட்டு, படிச்சு தொலைஞ்சுட்டேன். தனியா இருக்க புள்ளைக்கு ஏதோ ஆயிப்போச்சுன்னு, பக்கத்து வீட்டுங்காரங்க எல்லாம் வந்து எட்டிப் பார்த்துட்டு போறாங்க. இந்த லட்சணத்தில் எங்கப்போய் இந்த  ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதுறது. முடிஞ்ச அளவுக்கு மொத்தமா ஊத்துறேன் .. ச்சை.. எழுதுறேன்.  அதுக்குப் பிறகு நீங்க வாங்கி படிச்சு சிரிச்சுக்குங்க.


நானும் எவ்வளோ புத்தகத்தில், சமர்ப்பணத்தை படிச்சு இருக்கேன். ஆனா, இந்த நக்கல், குசும்பு எல்லாம் சம்மனங்கால் போட்டு உக்காந்த சமர்ப்பணத்தை படிச்சதே இல்லடா சாமி. அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கு, பூசாத மாதிரியும் இருக்கு. நீங்களே படிச்சு பாருங்க புரியும்.


 "ஆதியில் பூமியில் ஜலம் உண்டாகி இருந்ததால் ஜலத்துக்கு புத்தகம் முதல் சமர்ப்பணம்


ஆல்கஹால் என்னும் அதியற்புத திரவத்தைத் தங்கள் வயிற்றுக்குள் ஏந்தி, திடநிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறி கடவுள்களின் பொற்பாதங்களில் வீற்றிருக்கும் அனைத்து பான தெய்வங்களுக்கும் இந்தப் புத்தகம் இரண்டாம் சமர்ப்பணம் புனிதர்கள்! உங்களை பரமண்டலங்களுக்கு அனுப்பி வைத்த இந்த திரவநிலை சாமிகள் அனைத்தும் வணக்கத்திற்குரியவைதான். ஆகையால், நீங்கள் உங்களது முக்தி நிலை குறித்து அச்சப்பட

வேண்டாம் அற்புதர்களே"

இப்படி ஒரு சமர்ப்பணத்தை இதுவரை யாராச்சும் பண்ணி இருக்காங்க! நக்கல், அக்குள்ள கொஞ்சம் புடைப்பா இருந்தா இப்படி எல்லாம் பண்ண வைக்கும்.


நன்றி நவில்தல்ன்னு இந்த ஆளு பண்ணுன அழும்பைப் பார்த்தா திருவள்ளுவர் எழுத்து அணியாலேயே நடுமண்டையில் பத்தாவது ஓட்டையைப் போட்டு இருப்பார்.


இந்த இரண்டாவது கதையான "பத்திரகாளிக் கிழவியின் பவும் பாம்படம்" கதைல வரும் ஜெயில் சம்பவங்களையும், கிழவியின் அடாவடி ரவுசையும் இங்கே சொன்னேன்னு வச்சுக்குங்க, உங்களுக்கு வயித்து வலி வரவச்ச பாவம் என்னைச் சேரும். கூடவே, நாகர்கோவில் வட்டார மொழியோடு சாராய நாற்றமும் சேர்ந்து அடிப்பதால் சொர்க்கலோக போதையில் உங்களை தள்ளாட வைக்கக்கூடும்.  அடுத்த கதை..  "வேண்டாம்பா சாமி, ஏற்கனவே கொரோனாவால் எனக்கு வேலை போச்சு. இந்த நிலைமைல உங்களுக்கு வைத்தியம் பார்க்க என்னால் முடியாது. அதனால, இத்தோடு நிப்பாட்டிக்கிறேன்".


கோவிட் காலம் முடிந்து, இனி பிரபு தர்மராஜின் "ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும்" புத்தகத்தை வைத்து இருப்பவர்களை, "ஏதோ புது வைரஸ் அவங்களை தாக்கியிருக்கு. அதனால சிரிச்சுகிட்டே இருக்காங்கன்னு" சொல்லி தனிமை படுத்தப்படுவார்கள் என்பதற்கு  நான் சாட்சி. இந்த புத்தகத்தை குறுகியநாளில் படித்து முடிப்பது, இளவட்டக் கல்லை தூக்குவதற்குச் சமம். சிலர் முயற்சி திருவினையாக்கும், சிரிப்பு அதை தவணையாக்கும்.


சரிப்பா இந்த புத்தகம் ஆல்கஹால் பற்றி என்னதான் சொல்லுது.. அது நல்லதா? கெட்டதா?  

அதற்கு ஆல்கஹால் சொல்லும் பதில்

"I'M A HERO &  VILLAN"



 🥃 கோடி

Comments

  1. இப்போ book enga கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நேரடியாக எழுத்தாளரை தொடர்பு கொள்ளுங்கள்.

      நீங்கள் எந்த ஊர்

      Delete
    2. https://www.amazon.in/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-Tamil-ebook/dp/B094W8YJSW/ref=sr_1_1?crid=4FT6W21R7Q8Q&dchild=1&keywords=prabhu+dharmaraj&qid=1633940443&sprefix=Prabhu+Dhar%2Cdigital-text%2C290&sr=8-1

      Delete
  2. ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும்

    ReplyDelete
  3. இக்காலத்தில் படிக்க வேண்டிய புத்தகம் தான் .. மதிப்புரை அருமை👍💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் பாஜக 'பி' டீம் - இடும்பாவனம் கார்த்திக்

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு - இரா மன்னர் மன்னன்

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர். ப.சுப்பராயன் - புலவர் செ.இராசு