சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் - முகில்
வாசிப்பு 15
சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் - முகில்
Lockdownல் படிக்க இருந்த 4 புத்தகங்களில் 3 புத்தகங்களை படித்து முடித்து 4-வது புத்தகம் படிக்கவே முடியாத அளவுக்கு சலிப்பு ஊட்டியதால், அதை மூடி shelf ல் வைத்து விட்டேன். புதிய புத்தகமேதும் இல்லாததால், வேறுவழியின்றி, மொபைலில் படுத்துறங்கி கொண்டு இருந்த திரைப்படங்களை "என் சாமி, என் கண்ணு, என் தங்கம், என் ஜூஜிலிப்ப கொஞ்சம் எழுந்திரிப்பா"ன்னு எழுப்பி விட்டு பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று டிங்..டாங்.. எழுத்தாளர் முகில் அவர்களின் "முகநூல் நிலை புதுப்பிப்பு" அதுதானுங்க status update வந்துச்சு. என்னன்னு போய் பார்த்ததா என் கண் விழி இரண்டும் heart shape ல 😍😍 ஆமா, இந்த மாதிரி தான் மாறி போச்சு. அப்டி அதில் என்ன இருந்துச்சுன்னா...🤔🤔🤔🌀🌀🌀
செத்த பாம்பை வச்சி நம்ம ஆளுங்க வெள்ளைக்காரனையே தெறிக்க விட்ட குட்டி storyயும், கடைசியில் "எனது புதிய மின்நூலான சிரிக்கச் சிரிக்கச் சரித்திரத்திலிருந்து. நூலை கிண்டில் அன்லிமிடெட்டில் இலவசமாக வாசிக்கலாம். இணைப்பு முதல் கமெண்ட்டில்"னு அறிவிப்பு. முகில் அவர்களின் வெறித்தனமான ரசிகன் நான், சொல்லவா வேணும்.. உடனே, சில மாதங்களாக unsubscribed பண்ணி முடக்கி வைச்சு இருந்த கிண்டில் accountக்கு subscribe பண்ணி சொடுக்கு எடுத்து active செஞ்சேன். அப்புறம் சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் படிக்க ஆரம்பிச்சேன்..!
சரித்திரத்தை இதுவரை யாரும் சொல்லாதவாறு புதுமையாக நகைச்சுவை கலந்து சொல்லி சரித்திரம் படைத்தவர் முகில். (இல்லையா பின்னே உலகமே பார்த்து பயந்து நடுங்கிய ஹிட்லர்க்கே ஜாதகம் எழுதினவர் ஆச்சே🤣) அப்படி பட்டவர் தலைப்பையே சிரிக்கச் சிரிக்க கொடுத்து இருக்கிறாரே என்ற ஆர்வத்தில் படிக்க தொடங்கினேன்.
சரித்திரத்தில் நடந்த நகைச்சுவைகளை துணுக்குகளாக மாற்றி வாசிப்பவர்கள்க்கு அவர்கள் உதட்டோரங்களில் சிறு புன்னகையை தவழவிடுகிறார். அமெரிக்காவில் தக்காளியின் அறிமுகம், கோகோ வை கண்டு பிடித்த குரங்கு , மிக பெரிய கஞ்சனை இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரன் என்று தன் அட்டை படத்தில் போட்ட times பத்திரிகை, அதிகாலையில் மக்களை வேலைக்கு செல்ல எழுப்பிவிட்டு அதற்கு சம்பளம் வாங்கிய மனிதர்கள், அப்புறம் இரண்டாம் உலக போரில் நாய்களை... ஐ அசுக்கு புசுக்கு இதுக்கிமேல நான் சொல்ல மாட்டேன்ப்பா.. நீங்களே படிச்சு தெரிஞ்சுக்குங்க 🤷🏽♂️🤷🏽♂️🤷🏽♂️
பல சுவாரசியமான தகவல்களை கோலப் பொடியாக்கி புள்ளி வைத்து கோலம் போட்டுள்ளது இந்த நூல். பள்ளி குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்..!!
✍️ கோடி

Comments
Post a Comment